Published:Updated:

"வீல் சேர் டாப்ஸி, கேம் சிப், திகில்!” - `மாயா’ இயக்குநரின் `கேம் ஓவர்' டீசர்

அலாவுதின் ஹுசைன்

"ஒரு வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதை"

`கேம் ஓவர்' டீசர்
`கேம் ஓவர்' டீசர்

நயன்தாரா நடிக்க `மாயா' படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன். முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் பேசப்பட்ட அவர், அடுத்து `கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். முதல் படத்தில் நயன்தாராவை இயக்கியவர், இந்தப் படத்தில் டாப்ஸியை இயக்கியுள்ளார். `இறுதிச் சுற்று', `விக்ரம் வேதா', `தமிழ் படம்-2' ஆகிய படங்களைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரோன் எத்தன் படத்துக்கு இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு பைலிங்க்குவல் படமாகத் தயாராகியுள்ள இப்படத்தை இந்தியில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் விநியோகம் செய்யவுள்ளார். 90 களில் பிரபலமாக இருந்த சிப் கேம்களை அடிப்படையாக வைத்து எடிக்கப்பட்ட இந்தப் படத்தை த்ரில்லராக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

முன்னதாக இயக்குநர் அஸ்வின் கூறுகையில். ``ஒரு வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதை இது. படத்தின் 70 சதவிகிதக் காட்சிகளில் டாப்ஸி வீல் சேரில் வருகிற மாதிரி காட்சிகள் இருக்கும். தமிழ், தெலுங்கு பைலிங்க்குவல் படமாக தயாராகவுள்ளது. டாப்ஸி தற்போது இந்தியில் பிரபலமாக உள்ளதால் இந்தியில் எடுக்க பேசி வருகிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

அஸ்வின் சரவணன், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் `இறவாக்காலம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக இப்படம் தயாரிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.