Published:Updated:

"சிவாஜியின் மூத்தமகன் எப்படி பி.ஜே.பி-யில் சேரலாம்... பணப்பிரச்னையா?!" - விமர்சிக்கும் ரசிகர்கள்

ராம்குமார் ( படம்: ஸ்ரீனிவாசுலு / விகடன் )

"காங்கிரஸூக்காக உழைத்தவர் சிவாஜி சார். ஆனால், அவரின் மூத்த மகன் அவரது கொள்கைகளுக்கு நேரதிரான கட்சியில் போய் சேர்ந்ததை இன்னும் எங்களால் நம்பவே முடியவில்லை. ராம்குமார் எப்படி அந்தக் கட்சியில் சேரலாம்?"

"சிவாஜியின் மூத்தமகன் எப்படி பி.ஜே.பி-யில் சேரலாம்... பணப்பிரச்னையா?!" - விமர்சிக்கும் ரசிகர்கள்

"காங்கிரஸூக்காக உழைத்தவர் சிவாஜி சார். ஆனால், அவரின் மூத்த மகன் அவரது கொள்கைகளுக்கு நேரதிரான கட்சியில் போய் சேர்ந்ததை இன்னும் எங்களால் நம்பவே முடியவில்லை. ராம்குமார் எப்படி அந்தக் கட்சியில் சேரலாம்?"

Published:Updated:
ராம்குமார் ( படம்: ஸ்ரீனிவாசுலு / விகடன் )

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனும் பிரபுவின் அண்ணனுமான ராம்குமார் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருப்பது, சிவாஜியின் ரசிகர்கள் மத்தியில் வெவ்வேறு விதமான விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது.

சில ரசிகர்கள், "ராம்குமார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட விருப்பம். அது அவருடைய உரிமை. எனவே அவரது இந்த முடிவைக் குறை கூற விரும்பவில்லை" எனச் சொல்கிறார்கள்.

ஆனால் வேறு சிலரோ, "காங்கிரஸூக்காக உழைத்தவர் சிவாஜி சார். ஆனால், அவரின் மூத்த மகன் அவரது கொள்கைகளுக்கு நேரதிரான கட்சியில் போய் சேர்ந்ததை இன்னும் எங்களால் நம்பவே முடியவில்லை. ராம்குமார் எப்படி அந்தக் கட்சியில் சேரலாம்?" என்கிறார்கள்.

பிரபு, சிவாஜி, ராம்குமார்
பிரபு, சிவாஜி, ராம்குமார்

இது தொடர்பாக சிவாஜி ரசிகர்களின் வாட்ஸ் அப் குழுக்களில் கடந்த இரு தினங்களாகவே ஏகப்பட்ட சலசலப்புகள். 'பணப்பிரச்னை', 'சென்சார் போர்டு உறுப்பினர் போன்ற கௌரவ பதவி தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்' என ராம்குமாரின் அரசியல் என்ட்ரிக்கு ஆளாளுக்கு ஒரு காரணங்களை எடுத்து விட்டபடியே இருக்கிறார்கள் அவரது அப்பாவின் ரசிகர்கள்.

இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் 'சிவாஜி ஃபேன் கிளப்' நிர்வாகியான முரளியிடம் பேசினேன். மாதந்தோறும் சிவாஜி நடித்த ஹிட் படங்களைத் திரையிட்டு சிவாஜி ரசிகர்களின் சந்திப்புக்களைத் தொடர்ந்து நிகழ்த்தி வரும் அமைப்பு இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர்ங்கிற முறையில ராம்குமார் சார் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு மீட்டிங் போட்டார். நானும் அந்தக் கூட்டத்துல கலந்துகிட்டேன். அந்த மீட்டிங்ல எல்லா விஷயங்களையும் தெளிவுபடுத்திட்டார். 'பாரதிய ஜனதா கட்சியில நான் சேரலாம்னு இருக்கேன். ஆனா ரசிகர்களை, மன்ற நிர்வாகிகளை நான் என் பின்னாடி வரணும்னு கட்டாயப்படுத்த மாட்டேன். எனக்கு எப்படி ஒரு முடிவெடுக்க உரிமை இருக்கோ அதேபோல ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் இருக்கு. அதனால சிவாஜி ரசிகர்களும் சரி, மன்ற நிர்வாகிகளும், சரி உங்க விருப்பப்படி நீங்க எந்த முடிவையும் எடுத்துக்கலாம். ஆனா மன்றம் இதுக்கு முன்னாடி எப்படி செயல்பட்டுட்டு இருந்ததோ அதேபோல் இயங்கிட்டே இருக்கும்'னு சொன்னார். இப்படித் தெளிவா சொன்ன பிறகு இதுல விமர்சனம் பண்றதுக்கு என்ன இருக்கு?" என்றார் முரளி.

ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு
ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு

ராம்குமாரின் முடிவு குறித்து பிரபு தெரிவித்த கருத்தையுமே கூடத் தங்களுக்கு ஆதரவாகக் கோடிட்டுக் காட்டுகிறார்கள், இந்த அரசியல் என்ட்ரியை விரும்பாத சிலர். " 'நானும் என் மகனும் எந்தக் கட்சியிலயும் இல்லை'னு பிரபு சொல்றதை வெச்சே அன்னை இல்லம் குடும்பத்துக்குள்ளேயே ராம்குமாரின் இந்த முடிவுக்கு ஏகோபித்த ஆதரவு இல்லைங்கிறதைத் தெரிஞ்சுக்க முடியுதே!" என்கிறார்கள். மேலும், "பா.ஜ.க-வுல சேர்ந்துட்டதால இனி ராம்குமார் சிவாஜி மன்றத் தலைவர் பொறுப்பில் எப்படி நீடிக்கலாம்? அவருக்கு அந்தத் தகுதியில்லை!" என்கிற கேள்வியையும் சிலர் எழுப்புகிறார்கள்.

எது எப்படியோ, அன்னை இல்லத்தின் மூத்த மகனின் அரசியல் என்ட்ரி சலசலப்புடன்தான் தொடங்கியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism