சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“சாதாரண பொண்ணு... அசாதாரண வாழ்க்கை!” - தமன்னா சொல்லும் ‘நவம்பர் ஸ்டோரி’ சீக்ரெட்ஸ்

NOVEMBER STORY
News
NOVEMBER STORY

NOVEMBER STORY

தெலுங்கில் 5 படங்கள், இந்தியில் ஒரு படம் என பிஸியாகச் சுழன்றுகொண்டிருக்கிறார் தமன்னா. அவரின் நடிப்பில், விகடன் டெலிவிஸ்டாஸின் தயாரிப்பில் உருவான ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் மே 20 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. க்ரைம் த்ரில்லரான ‘நவம்பர் ஸ்டோரி’யில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து தமன்னாவிடம் ஒரு சாட்!
 “சாதாரண பொண்ணு... அசாதாரண வாழ்க்கை!” - தமன்னா சொல்லும் ‘நவம்பர் ஸ்டோரி’ சீக்ரெட்ஸ்

''இங்க ரெண்டு வகையில மக்கள் கொரோனாவை அணுகுறாங்க. ஒண்ணு, ரொம்ப பயப்படறாங்க. இல்லன்னா, ரொம்ப அலட்சியமா கையாளுறாங்க. ரெண்டுமே தப்பு. எனக்குத் தெரிஞ்ச குடும்பங்களிலேயே நிறைய உயிரிழப்புகள். எல்லாரும் ரொம்பவும் மன உளைச்சல்ல இருக்காங்க. இந்த வைரஸ் உடலைத் தாண்டி மனதளவிலும் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துது. இந்தியாவுல மனநலம் பற்றி நாம பெருசா பேசறது இல்லை. அது தொடர்பான உரையாடலை இங்க தொடங்கி வைக்க இதுதான் சரியான நேரம்.'' - தமன்னா ஃபீலிங்

 “சாதாரண பொண்ணு... அசாதாரண வாழ்க்கை!” - தமன்னா சொல்லும் ‘நவம்பர் ஸ்டோரி’ சீக்ரெட்ஸ்

`` ‘நவம்பர் ஸ்டோரி’தான் உங்களோட ஓடிடி என்ட்ரியா நீங்க தேர்வு செஞ்ச முதல் ஸ்கிரிப்ட்... என்ன காரணம்?’’

“நான் சென்னையில இருந்தப்போ இயக்குநர் ராம் சார் என்கிட்ட கதை சொல்ல வந்தார். நான் பெருசா டைம் எடுத்தெல்லாம் ஓடிடி-யில வெப் சீரிஸ் பார்க்க மாட்டேன். என்னோட கவனத்தைக் கொஞ்ச நேரம் பிடிச்சு வைக்கறதே ரொம்ப கஷ்டமான ஒண்ணு. ராம் சார் என்கிட்ட அன்னைக்கு மூணு எபிஸோடுக்கான கதையை மட்டும் சொன்னார். ‘ஐயோ... அதுக்கு அடுத்து என்ன நடக்கப்போகுது’ன்னு தெரிஞ்சுக்கற ஆர்வம் எனக்கு வந்துச்சு. ஒரு சினிமாவை தியேட்டர்ல பார்க்கறதுக்கும் வீட்ல ஓடிடி-ல பார்க்கறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. வீட்ல போரடிச்சா ஸ்கிப் பண்ணிட்டுப் போற சுதந்திரம் இருக்கு. ஆனா, எதுவும் யோசிக்க விடாம ‘அடுத்து என்ன’ங்கற ஆர்வத்தை ஒரு கன்டென்ட் கொண்டு வந்துட்டா அதை மக்கள் கண்டிப்பா முழுசா பார்த்துருவாங்க.

‘நவம்பர் ஸ்டோரி’ல அந்த ரைட்டிங் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருந்துச்சு. சஸ்பென்ஸ் கடைசிவரைக்கும் மெயின்டெயின் ஆச்சு. அதே சமயம் ரொம்ப ஒரிஜினலாவும் இருந்துச்சு. ஏதோ இன்டர்நேஷனல் வெப் ஷோஸ் பார்த்து இன்ஸ்பையரான ஃபீல் எல்லாம் அதுல வரவேயில்லை. ஓடிடிக்கு க்ரைம் த்ரில்லர் ரொம்பவும் சரியான ஒரு ஜானர். தமிழ்ல இருக்கற மெயின்ஸ்ட்ரீம் படைப்பாளிகள் ஓடிடியில் இன்னும் பெருசா எக்ஸ்ப்ளோர் பண்ணலன்னு நினைக்கிறேன். இதுல நான் ரொம்பவே யதார்த்தமான ஒரு பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி வரேன். அனுராதாங்கற இந்த கேரக்டர் ரொம்ப ரியலா இருக்கும். சினிமால நான் பண்ற கேரக்டர்கள்ல ஒருவித யதார்த்தத்தை மீறிய தன்மை எட்டிப் பார்க்கும். இங்க அப்படியில்லை. எக்ஸ்ட்ரா மேக்கப் இருக்காது. காஸ்ட்யூம்ஸ் ரொம்ப சாதாரணமா இருக்கும். கவர்ச்சி இருக்காது. இந்த யதார்த்தம்தான் நான் ஓடிடில தேடிட்டு இருந்த விஷயம்.”

 “சாதாரண பொண்ணு... அசாதாரண வாழ்க்கை!” - தமன்னா சொல்லும் ‘நவம்பர் ஸ்டோரி’ சீக்ரெட்ஸ்
 “சாதாரண பொண்ணு... அசாதாரண வாழ்க்கை!” - தமன்னா சொல்லும் ‘நவம்பர் ஸ்டோரி’ சீக்ரெட்ஸ்

`` ‘Whodunit’ வகை சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளில் பெரும்பாலும் கொலையாளி யாருன்னு தெரிஞ்சிட்டாலோ, இல்ல ‘சஸ்பென்ஸ் என்ன’ன்னு புரிஞ்சிட்டாலோ அதைத் திரும்பப் பார்க்கற ஆர்வம் வராது. ‘நவம்பர் ஸ்டோரி’ இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கப்போகுது?’’

“வீட்ல வெப்சீரிஸ தனியா உட்கார்ந்துதான் பார்க்கறோம். சினிமா மாதிரி குடும்பத்தோடயோ, நண்பர்களோடயோ உட்கார்ந்து பார்க்கறதில்லை. அப்போ அந்த வெப்சீரிஸ் பல விஷயங்கள்ல நம்மளோட கனெக்ட் ஆகணும், ஆர்வத்தைத் தூண்டணும். இல்லன்னா அதைத் தொடர்ந்து பார்க்கத் தோணாது. ‘நவம்பர் ஸ்டோரி’ சீரிஸ் மூலமா எங்களோட எண்ணம், பார்க்கறவங்களை அந்த உலகத்துக்குள்ளே கூட்டிட்டுப் போகணுங்கறதுதான். அனுராதா, அவளோட அப்பா கணேசனோட உலகத்துக்குள்ள நீங்க போகணும். அவங்க வாழ்க்கை எப்படின்னு நீங்க உணரணும்.

இது ஒரு சாதாரணமான அப்பா - மகள் கதைதான். ரொம்ப சாதாரணமான பொண்ணு அனுராதா. ஆனா, அவ சந்திக்கிற விஷயங்கள் சாதாரணமானவை இல்ல. அதிகார பலம், பண பலம் இருக்கறவங்க துணிச்சலா ஒரு காரியத்தைச் செய்யறது பெரிய விஷயமே கிடையாது. ஆனா, ரொம்ப இயல்பா, சாதாரணமா இருக்கறவங்க துணிச்சலா ஒரு ஸ்டாண்ட் எடுக்கறதைப் பார்க்கறப்போ ஒரு செம ஃபீல் வரும். நாமளும் அவங்கள மாதிரி இருக்கணும்னு நினைப்போம். அனுராதா, அப்படி ஃபீல் பண்ண வைப்பாள். இதுதான் ‘நவம்பர் ஸ்டோரி’யோட பலம்.”

 “சாதாரண பொண்ணு... அசாதாரண வாழ்க்கை!” - தமன்னா சொல்லும் ‘நவம்பர் ஸ்டோரி’ சீக்ரெட்ஸ்
 “சாதாரண பொண்ணு... அசாதாரண வாழ்க்கை!” - தமன்னா சொல்லும் ‘நவம்பர் ஸ்டோரி’ சீக்ரெட்ஸ்

`` ‘நவம்பர் ஸ்டோரி’ டீம் பத்திச் சொல்லுங்க... ஜி.எம்.குமார், பசுபதி, விவேக் பிரசன்னா இவங்களோட நடிச்ச அனுபவம்?’’

“ஜி.எம்.குமார் சார், பசுபதி சார் ரெண்டு பேருமே ரொம்ப சப்போர்டிவ். அந்தக் கதாபாத்திரங்களும் அவங்களுக்கு ரொம்ப நல்லா பொருந்திப்போச்சு. ஜி.எம் சாரையும் என்னையும் பார்க்கும்போது அப்பா - பொண்ணு மாதிரிதான் தோணும். இதனால எங்களுக்குள்ள ஒரு கனெக்‌ஷன் இயல்பாவே வந்துச்சு. எதுவும் செயற்கையா ஃபீல் ஆகலை. சிரீஸ் பார்க்கறப்போ இதை எல்லாரும் உணர்வாங்க. பசுபதி சார் ஆஃப் ஸ்க்ரீன்ல அவ்ளோ அன்பானவர், எளிமையானவர், எல்லாமே! ஆனா ஸ்க்ரீன்ல அவரோட பாத்திரம் ரொம்பத் தீவிரமானதா, மர்மங்கள் சூழ்ந்ததா இருக்கும். விவேக் பிரசன்னா காம்போல எனக்கு நிறைய சீன்ஸ். திரும்பவும் அதான். எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் நடிகர்கள் ரொம்ப சரியா அமைஞ்சிருக்காங்க. வெப்சீரிஸ்ல மக்களும் இதைத்தான் எதிர்பார்க்கறாங்க.”

``ஓடிடி அசுர வளர்ச்சியில் இருக்கு. விதவிதமான முயற்சிகள், முக்கியமா இப்போ பெண்களை மையப்படுத்தி நிறைய படங்கள், சீரிஸ். தமிழ், தெலுங்கு, இந்தின்னு எல்லா மொழிகளிலும் வர ஆரம்பிச்சிருச்சு. இந்த மாற்றத்தை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?’’

“மார்க்கெட்டோட தேவைன்னு எனக்குத் தோணலை. ஏன்னா, நிறைய எழுத்தாளர்கள் நிஜமாவே பெண்களை மையப்படுத்தி ஸ்கிரிப்ட்ஸ் பண்றாங்க. பெண்களுக்கு இப்பதான் அவங்க திறமைக்கு ஏற்றமாதிரியான பாத்திரங்கள் தேடி வருது. பெண்கள் முன்னமே நிறைய முயற்சிகளும் செஞ்சிருக்காங்கதான். ஆனா, இப்பதான் அவங்களுக்கான பாராட்டுகளும் சரியா கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. வெளிப்படையான வாழ்த்துகள் வர ஆரம்பிச்சிருக்கு. அதனாலதான் இன்னமும் நிறைய கன்டென்ட் பெண்களுக்காகத் தொடர்ந்து எழுதப்படுது. இது ஒரு நடிகையா எனக்கும் ரொம்ப சந்தோஷத்தைத் தருது. சொல்லப்போனா என்னோட கரியர்ல ரொம்பவே நல்ல ஒரு நிலையில நான் இருக்கேன்னு நினைக்கிறேன். முன்னாடிவிட இப்ப நிறைய விதவிதமான பாத்திரங்கள் என்னைத் தேடி வருது. குறிப்பா வெப் சீரிஸ்ல இப்படியான கதைகள் வர்றப்ப அதை இன்னும் ரொம்ப டீடெய்லா செய்ய முடியுது. இதுவரைக்கும் நமக்கு இருக்கற இமேஜ், நம்ம மேல குத்தப்பட்ட முத்திரை இதையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு சுதந்திரமா செயல்பட முடியுது. இந்த மேஜிக் வெப் ஸ்பேஸ்னாலதான் நடந்திருக்கு.”

 “சாதாரண பொண்ணு... அசாதாரண வாழ்க்கை!” - தமன்னா சொல்லும் ‘நவம்பர் ஸ்டோரி’ சீக்ரெட்ஸ்
 “சாதாரண பொண்ணு... அசாதாரண வாழ்க்கை!” - தமன்னா சொல்லும் ‘நவம்பர் ஸ்டோரி’ சீக்ரெட்ஸ்

``வெப் சிரீஸ், படங்கள் - மேக்கிங் பிராசஸில் இவை இரண்டுக்கும் என்னென்ன வித்தியாசங்களை உணர்ந்தீங்க?’’

“வெப் சீரிஸ்ல நடிக்கறப்ப நிறைய ஹோம்வொர்க் தேவைப்படுது. உதாரணமா, முதல் நாள் எட்டாவது எபிசோடு ஷூட் பண்றாங்கன்னா, நாம அதுவரைக்கும் ஏழு எபிசோடுகள்ல என்னவெல்லாம் நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கணும். சினிமாவைவிட இங்க நிறைய நிகழ்வுகள் நடந்திருக்கும். ஒரு கேரக்டரோட ஜர்னி இங்க ரொம்பவே பெருசு. கதை வளர வளர அந்தக் கதாபாத்திரத்தோட தன்மையும் ரொம்பவே மாறியிருக்கும். சினிமாவுல இந்தச் சவால் இருக்காது. வெப் சீரிஸ்ல இன்னொரு விஷயம், இங்க எல்லாமே ரியல் டைம்னு ஃபீல் ஆச்சு. லாங் ஷாட்ஸ், பர்ஃபாம் பண்ண நிறைய நேரம், ஸ்க்ரீன் டைம் இதெல்லாம் இருந்துச்சு. சினிமாவுல இந்த அளவு டைமிங் கிடைக்காது.

அதேபோல, சினிமாவைவிட இங்க ரைட்டிங் இன்னும் டீடெய்லா இருக்கணும். திரைக்கதை இன்னும் பலமானதா இருக்கணும். கிட்டத்தட்ட ஏழு மணி நேரமாவது பார்க்கறவங்களைக் கட்டிப்போடணும். ஒரு எபிசோடு முடிஞ்சதும் இன்னொரு எபிசோடைப் பார்க்கவைக்கத் தூண்டணும். ஒரே முகங்களை நிறைய நேரம் பார்க்க வைக்கணும். அதனால, நடிக்கறப்போ எல்லா ஷாட்டுக்கும் நாம நம்ம பெஸ்டைக் குடுக்கணும்.”

 “சாதாரண பொண்ணு... அசாதாரண வாழ்க்கை!” - தமன்னா சொல்லும் ‘நவம்பர் ஸ்டோரி’ சீக்ரெட்ஸ்
 “சாதாரண பொண்ணு... அசாதாரண வாழ்க்கை!” - தமன்னா சொல்லும் ‘நவம்பர் ஸ்டோரி’ சீக்ரெட்ஸ்

``அடுத்தடுத்த படங்கள்..?’’

“தமிழ்ல ‘நவம்பர் ஸ்டோரி’க்குதான் வெயிட்டிங். இதைத் தவிர தெலுங்குல, இந்தியில படங்கள் பண்ணிட்டிருக்கேன்.”

 “சாதாரண பொண்ணு... அசாதாரண வாழ்க்கை!” - தமன்னா சொல்லும் ‘நவம்பர் ஸ்டோரி’ சீக்ரெட்ஸ்

``கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருக்கீங்க... இந்த இரண்டாம் அலையை எப்படிச் சமாளிக்கிறீங்க? மக்களுக்கு என்ன சொல்ல ஆசைப்படுறீங்க?’’

“முதல் அலையைவிட இது இன்னும் ரொம்ப மோசமா இருக்கு. பாதிப்புகள், உயிரிழப்புகள் அதிகமா இருக்கு. உங்களால முடியும்னா கண்டிப்பா வீட்லயே இருங்க. வெளியவே வரவேணாம். இங்க ரெண்டு வகையில மக்கள் கொரோனாவை அணுகுறாங்க. ஒண்ணு, ரொம்ப பயப்படறாங்க. இல்லன்னா, ரொம்ப அலட்சியமா கையாளுறாங்க. ரெண்டுமே தப்பு. ஜாக்கிரதையா இருக்கறது இப்ப அவசியமான ஒண்ணு. இந்த வைரஸ் உடலைத் தாண்டி மனதளவிலும் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துது. நமக்கே தெரியும், இந்தியாவுல மனநலம் பற்றி நாம பெருசா பேசறது இல்லை. அது தொடர்பான விழிப்புணர்வு ரொம்பக் குறைவு. ஆனா, இந்த மாதிரி காலகட்டத்துல அது ரொம்ப அவசியம். அது தொடர்பான உரையாடலை இங்க தொடங்கி வைக்க இதுதான் சரியான நேரம். எனக்குத் தெரிஞ்ச குடும்பங்களிலேயே நிறைய உயிரிழப்புகள். எல்லாரும் ரொம்பவும் மன உளைச்சல்ல இருக்காங்க. உங்களுக்கு வீட்லயே பாதுகாப்பா இருக்கறதுக்கான வாய்ப்பு இருக்கும்னா, இருக்க முடியும்னா, தயவுசெஞ்சு அதையே பண்ணுங்க. பாதுகாப்பா இருங்க. நிலைமை சீக்கிரம் மாறும்னு நம்புவோம்!”