Published:Updated:

`செத்துக்கிட்டிருக்க தமிழ்சினிமா உன்னாலதான் பொழைக்கப் போகுது!'- தமன்னாவின் 'பெட்ரோமாக்ஸ்' டிரெய்லர்

தமிழ் சினிமாவின் ஃபேவரைட் ஜார்னரான பேய்க் கதையை மையமாக வைத்து படம் உருவாகி உள்ளது.

``அதே கண்கள்” படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் யோகிபாபு, காளி வெங்கட், முனீஸ் காந்த், சத்யன், பேபி மோனிகா, ஸ்ரீஜா, ஆகியோர் நடிக்க உருவாகி வரும் படம் தான் `பெட்ரோமாக்ஸ்'. தமிழ் சினிமாவின் ஃபேவரைட் ஜார்னரான பேய்க் கதையை மையமாக வைத்து படம் உருவாகி உள்ளது.

ஜிப்ரான் இசை அமைக்க, டானி ரெய்மான்ட் ஒளிப்பதிவு அமைத்துள்ளார். ஈகிள் ஐ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க காமெடியாக உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 11ம் தேதி ரிலீஸாகவுள்ளது.