Published:Updated:

ஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கும் தமிழ் சினிமா!

அஜித்
பிரீமியம் ஸ்டோரி
அஜித்

ராமோஜிராவ் மாதிரி கம்ளீட் செட்டப் பிலிம்சிட்டி சென்னையில் கிடையாது.

ஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கும் தமிழ் சினிமா!

ராமோஜிராவ் மாதிரி கம்ளீட் செட்டப் பிலிம்சிட்டி சென்னையில் கிடையாது.

Published:Updated:
அஜித்
பிரீமியம் ஸ்டோரி
அஜித்

பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என எல்லா ‘வுட்’களும் ஒருகாலத்தில் டாப் அடிக்கும் இடம் சென்னை. ஆனால், இப்போது ஹைதராபாத்தில்தான் ரஜினியின் ‘அண்ணாத்த’, அஜித்தின் ‘வலிமை’, ‘தனுஷ் -43’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, விஷாலின் ‘எனிமி’ எனப் பல படங்களின் ஷூட்டிங்குகள் நடக்கின்றன. சென்னையில் ஷூட் செய்வதில் என்ன பிரச்னை? ஹைதராபாத் ஏன் போகிறார்கள்? தமிழ்த்திரையுலகினர் சிலரிடம் பேசினேன்.

“ராமோஜிராவ் மாதிரி கம்ளீட் செட்டப் பிலிம்சிட்டி சென்னையில் கிடையாது. கொரோனா காலம் என்பதால் வெளியாட்கள் உள்ளே வராமலும் உள்ளேயிருக்கிற ஆட்கள் வெளியே போகாமலும் இருப்பதற்கான ஏற்பாட்டை பயோ பபிள் என்போம். படப்பிடிப்புக்கு பாதுகாப்பு தரும் இந்த வசதி ராமோஜி திரைப்பட நகரத்தில் இருக்கு. சென்னையில் பெரும்பாலான ஸ்டூடியோக்களில் இந்த வசதி கிடையாது என்பதுதான் ஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கக் காரணம்” என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

ஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கும் தமிழ் சினிமா!
ஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கும் தமிழ் சினிமா!

“சென்னையில ஸ்டூடியோக்கள் அதிகம் கிடையாதுதான். இருக்கற ஒரு சில பெரிய ஸ்டூடியோக்களையும் டி.வி சீரியல் ஷூட்டிங், ரியாலிட்டி ஷோக்களுக்கு மாசக்கணக்கா புக் பண்ணிடுறாங்க’’ என்றபடி பேச ஆரம்பிக்கிறார் சுந்தர்பாலு. த்ரிஷாவின் ‘கர்ஜனை’, வரலட்சுமியின் ‘கன்னித்தீவு’ படங்களின் இயக்குநர், தயாரிப்பாளர்.

“இங்கே நாம நினைக்கற லொக்கேஷன்கள் கிடைக்க மாட்டேங்குது. ஹைதராபாத்ல இருக்கற மாதிரி லொக்கேஷன்கள் இங்கே கிடையாது. உதாரணத்துக்கு, தெருவுல நடந்து போற மாதிரியோ, பைக்ல போற மாதிரியோ ஷூட் பண்ணணும்னா முன்னாடி யெல்லாம் ஏவிஎம், டி.ஆர்.கார்டன், அம்பிகா கார்டன்ல எல்லாம் ஸ்ட்ரீட் லொக்கேஷன் இருந்துச்சு. இன்னிக்கு அந்த மாதிரி பர்மனன்ட் லொக்கேஷன்கள் இல்ல. ஏவிஎம் ஸ்டூடியோ மாதிரி அங்கே சாரதி ஸ்டூடியோ ரொம்ப ஃபேமஸ். 1939லேயே அங்கே படப்பிடிப்பு நடந்திருக்கு. அப்படி ஒரு ஸ்டூடியோ இடையே மூடப்போறதாகவும் பேச்சு கிளம்புச்சு. ஆனா, இப்ப அது பலகோடி செலவில் கிராபிக்ஸ், டப்பிங்னு அத்தனை வசதிகளும் இருக்கற ஸ்டூடியோவா ரெடியாகிடுச்சு. என்னோட விளம்பரப் படம் ஒண்ணு அங்கேதான் ஷூட் பண்ணினேன். அங்கே ராமோஜி பிலிம்சிட்டி, ராமநாயுடு ஸ்டூடியோஸ், சாரதி ஸ்டூடியோஸ், அன்னபூரணா ஸ்டூடியோஸ்னு ஐம்பது வருஷத்துக்கு முந்தின ஸ்டூடியோக்களும் நல்ல முறையில இயங்கிட்டு இருக்கு. ஆனா, இங்கே ஏவிஎம், முருகாலயா, பரணி, சியாமளான்னு நிறைய ஸ்டூடியோக்களை மூடிட்டாங்க.

ஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கும் தமிழ் சினிமா!
ஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கும் தமிழ் சினிமா!

போன ஆட்சியில பையனூர் நிலத்துல அண்ணா பிலிம் சிட்டி ஆரம்பிக்கறதா அறிவிச்சாங்க. அது நடக்கவே இல்ல. இருக்கற தரமணி பிலிம்சிட்டியில பாதி நிலம் டைடல் பார்க்கிற்குப் போயிடுச்சு. என்னோட படங்களுக்கே கோர்ட் லொக்கேஷன்களுக்கு ஹைதராபாத்தான் போனோம். ரஜினி சார் மாதிரி பெரிய ஹீரோக்கள் ராமோஜி ராவ் போனா பிரைவசி கிடைக்கறதா நினைக்கறாங்க. பாரம்பரியமான சில பெரிய ஸ்டூடியோக்களுக்கு ஏக்கர் கணக்கா, சென்னையில் இடம் இருக்கு. அவங்க மனசு வெச்சா ஷூட்டிங்கிற்கான லொக்கேஷன்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம். ஆனா யாரும் முன்வர்றதில்ல” என்கிறார் சுந்தர்பாலு.

ஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கும் தமிழ் சினிமா!
ஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கும் தமிழ் சினிமா!

பெயர் சொல்ல விரும்பாத புரொடக்‌ஷன் நிர்வாகி ஒருவர், ‘`சென்னைன்னு கிடையாது, நம்ம தமிழ்நாட்டுல ரோடுகள்ல ஷூட் பண்றது சிரமமான விஷயமா இருக்கு. ரோட்டுல ஒரு சீன் ஷூட் பண்ணணும்னா, போலீஸ் பர்மிஷன் வாங்கணும். அதுக்கே சிரமப்பட வேண்டியிருக்கு. செலவும் ஆகுது. அப்புறம் சென்னையைப் பொறுத்தவரை ரோடுகள்ல பகல்ல ஷூட் செய்ய அனுமதி கிடைக்கறதில்ல. நைட் 11 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரைதான் ஷூட் செய்ய அனுமதிக்கறாங்க. ஸோ, ஆர்ட்டிஸ்ட் டைமிங்கைக் கணக்கிட்டா அஞ்சாறு மணி நேரம்தான் எடுக்க முடியும். நமக்கு ஒரு கால்ஷீட் ஒர்க்கிங் ஹவர்னா, 8 மணி நேரம். ஆனா, அந்த டைமிங் காரணத்தால் ஒரு கால்ஷீட் அஞ்சு மணி நேரமா மாறும் போது, ஷூட் செய்ய வேண்டிய நாள்கள் அதிகமாகுது. இதனால தயாரிப்பாளர்களுக்குச் செலவு அதிகமாகுது.

எஸ்.ஆர்.பிரபு,
எஸ்.ஆர்.பிரபு,
சுந்தர் பாலு
சுந்தர் பாலு

ஹைதராபாத்ல இன்னொரு வசதி, லொக்கேஷன்கள் அதிகம் இருப்பதுபோல ஷூட்டிங் ஹவுஸ்களும் அதிகமிருக்கு. சென்னையைப் பொறுத்தவரை வீடுகளில் ஷூட் பண்ணணும்னா ஈ.சி.ஆர். ரோடுகளுக்குத்தான் போகணும். கிழக்குக் கடற்கரைச் சாலையைப் பொறுத்தவரை குப்பங்கள் அதிகம். ஸோ, ஒரு வீட்டுல ஷூட் செய்யணும்னா நீங்க அந்த வீட்டுக்காரருக்கும் பணம் கட்ட வேண்டியிருக்கும். அந்த வீடு இருக்கற குப்பத்துக்கும் பணம் கட்டணும். அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணம் கட்டணும். இந்தத் தொல்லைகள் எதுவும் ஹைதராபாத்ல இல்ல. அங்கே நீங்க எந்த வீட்டுல ஷூட் பண்றீங்களோ அந்த வீட்டு ஓனருக்கு மட்டும் பணம் செலுத்தினா போதும். ராமோஜி பிலிம்சிட்டியில எல்லா ஆர்ட்டிஸ்ட்களுமே ஒரே இடத்துல இருப்பாங்க. தங்கியிருக்கற இடத்தை விட்டுப் பத்து நிமிஷத்துல ஸ்பாட் வந்திடலாம். இன்னும் சொல்லப்போனா, எல்லாருமே எல்லா ஷாட்களுக்கும் பக்கத்துல ரெடியா நிற்பாங்க. இங்கே அப்படியில்ல. ஸ்டூடியோ ஓரிடத்துல இருக்கும். ஆர்ட்டிஸ்ட் வேற இடத்துல தங்கியிருப்பாங்க. ஸோ, நமக்கு டைமிங் அடிபடும். ஸோ, நமக்கு அங்கே நேரமும் மிச்சமாகுது. வெளித் தொல்லைகளும் இல்லை. இதான் மெயின் காரணங்கள்” என்கிறார்.

சினிமா ஷூட்டிங் என்றாலே ஏவிஎம் உலக உருண்டையைக் காட்டும் காலம் முடிந்துவிட்டது போல!