Published:Updated:

2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...

தனுஷ், ரஜினி, விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
தனுஷ், ரஜினி, விஜய்

2020-ல் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் திட்டங்கள் இவை...

ரஜினி
ரஜினி

ரஜினி

சிவா இயக்கத்தில் தற்போது ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில், இன்னும் பெயரிடப்படாத 168-வது படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் ரஜினி. இந்த ஆண்டிலேயே தனது 169-வது படத்தின் வேலைகளிலும் ரஜினி இறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ரஜினி பட இயக்குநர் லிஸ்ட்டில் கெளதம் வாசுதேவ் மேனனும், லோகேஷ் கனகராஜும் இருக்கிறார்கள்.

2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`2021 சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக நாங்கள் போட்டியிடுவோம்’ என ரஜினி சொல்லியிருப்பதால், தனது அரசியல் கட்சி குறித்த அப்டேட்களையும் இந்த வருடத்தில் வெளியிட வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கமல்
கமல்

கமல்

ல பிரச்னைகளுக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட `இந்தியன் - 2’ படத்தின் ஷூட்டிங், தற்போது எந்தத் தடையுமில்லாமல் நடந்துவருகிறது. 2021 பொங்கலுக்கு `இந்தியன் - 2’ வெளியாகும் என்ற முன்னறிவிப்போடு ஆரம்பிக்கப்பட்டதால், இந்த வருடத்தின் பாதிக்கும் மேலான காலத்தை, இந்தப் படத்திற்காகக் கமல் செலவழிப்பார். அதேபோல், அடுத்ததாக கமல் இயக்கி, நடிக்கும் `தலைவன் இருக்கின்றான்’ பட வேலைகளிலும் பிஸியாக இருப்பார். சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் பிஸியாக இருக்கும் கமல், இந்த வருடத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் வேலைகளிலும் கவனம் செலுத்துவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...

விஜய்

விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு, தனது 65 படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தோடு இணையும் விஜய், அந்தப் படத்தை இயக்கப்போகும் இயக்குநருக்கான செலக்‌ஷனில் தற்போது கவனம் செலுத்திவருகிறார். அவரது லிஸ்ட்டில் இருந்த மகிழ் திருமேனி, வெற்றிமாறன் இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருப்பதால், மற்ற சில இயக்குநர்களிடமும் கதை கேட்டுவருகிறார்.

2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...

அஜித்

ஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவான முதல் படம் ரீமேக் என்பதால், அந்தக் கதையில் வினோத்தின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், `வலிமை’ படம் வினோத்தின் கதை என்பதால், அதிக நாள்கள் கதை விவாதம் செய்துவிட்டு, தற்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்த வருடம் ஏப்ரலுக்கு `வலிமை’ படத்தை ரிலீஸ் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்த படக்குழு, பட வேலைகள் அதிகம் இருப்பதால் தீபாவளிக்குத் தள்ளிப்போகும் என அறிவித்திருக்கிறது.

2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...

விக்ரம்

ஜய் ஞானமுத்து இயக்கத்தில் `கோப்ரா’ படத்தில் நடித்துவருகிறார் விக்ரம். இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான இர்ஃபான் பதான் வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில், விக்ரமுக்குப் பல கெட்டப்புகள் இருக்கின்றனவாம். ஏப்ரலில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தை முடித்துவிட்டு, மணிரத்னம் இயக்கத்தில் `பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இரண்டு பாகங்களாக எடுக்கப்படவுள்ள இந்தப் படத்திற்காக, இந்த வருடத்தின் பெரும்பகுதியைச் செலவிடவிருக்கிறார்.

சூர்யா

`சூரரைப் போற்று’ படத்தை முடித்தவுடன் சூர்யாவை இயக்குவதற்குத் தயாராக இருந்த இயக்குநர் சிவாவிற்கு, ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், ரஜினி படத்தை முடித்தபிறகுதான் சூர்யா படத்தை இயக்கவுள்ளார். அதனால், தற்போது இயக்குநர் ஹரியுடன் இணைந்து படம் பண்ணுவதற்கான பேச்சுவார்த்தையில் சூர்யா இருக்கிறார். ஹரி படத்தை முடித்துவிட்டு, இதே வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் தனது அடுத்த படத்தையும் ஆரம்பிக்கவிருக்கிறார் சூர்யா.

2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...
2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...

தனுஷ்

னவரி 16-ம் தேதி தான் நடித்திருக்கும் `பட்டாஸ்’ படம் ரிலீஸாவதற்கு முன்பே, அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்காகக் கோவில்பட்டி செல்கிறார் தனுஷ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் சமயத்தில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் `கேங்ஸ்டர்’ படமும் ரிலீஸுக்கு ரெடியாகிவிடும். இந்தப் படங்களுக்குப் பிறகு `முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம்குமாரின் படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். அதே சமயத்தில், தன்னை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய `ஆனந்த் எல் ராய்’ இயக்கத்தில் ஹிந்தியில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.

2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...

சிம்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் `மாநாடு’ படம் ட்ராப் என அறிவிக்கப்பட்டு, மீண்டும் அது உயிர்த்தெழுந்துள்ளது. ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கும் `மாநாடு’ ஷூட்டிங், ஏப்ரல் முதல் வாரம் வரைக்கும் இடைவெளி இல்லாமல் எடுக்கப்படவிருக்கிறதாம். ஹன்சிகாவின் 50-வது படமான `மகா’வில் ஒரு சின்ன கதாபாத்திரத்திலும் சிம்பு நடிக்கிறார். கெளதம் கார்த்திக்கோடு சிம்பு இணைந்து நடிக்கும் `மஃப்டி’ பட ரீமேக்கும் எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது.

2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...

கார்த்தி

`ரெமோ’ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணனின் இயக்கத்தில் `சுல்தான்’ படத்தில் நடித்துவந்த கார்த்தி அதை முடித்துவிட்டு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் `பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துவருகிறார். இந்த வருடம் சம்மருக்கு `சுல்தான்’ படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், `பொன்னியின் செல்வன்’ படத்தை முடித்தபிறகே புதிய படங்களில் கார்த்தி கமிட்டாவார் எனவும் கூறப்படுகிறது. `8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீகணேஷிடம் கதை கேட்டு வைத்திருக்கிறார் கார்த்தி.

2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...

‘ஜெயம்’ ரவி

`ஜெயம்’ ரவி தனது 25-வது படமான `பூமி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, மணிரத்னம் இயக்கத்தில் `பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துவருகிறார். மேலும் அஹமத் இயக்கத்தில் ராணுவ வீரராக ரவி ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு `ஜன கண மன’ எனப் பெயர் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தன் அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் `தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருக்கிறார் ‘ஜெயம்’ ரவி.

2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...

சிவகார்த்திகேயன்

‘இன்று நேற்று நாளை’ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் பணப் பிரச்னையால் படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது. இப்போது கே.ஜே.ஆர் நிறுவனம் அந்தப் படத்தை வாங்கிவிட்டதாகவும், இந்த வருடம் எந்தத் தடையும் இல்லாமல் படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் `கோலமாவு கோகிலா’ நெல்சன் இயக்கத்தில் `டாக்டர்’ படத்தில் நடித்துவரும் சிவா, இந்தப் படங்களை முடித்த பிறகு, ஏற்கெனவே கமிட் செய்து வைத்திருக்கும் விக்னேஷ் சிவன் படத்திலும் நடிக்கவுள்ளார்.

2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...

விஜய் சேதுபதி

ணிகண்டன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் `கடைசி விவசாயி’ படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் `லாபம்’ படத்தைத் தயாரித்து, நடித்துவருகிறார். எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளரான வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் `யாதும் ஊரே யாரும் கேளிர்’ படத்திலும், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் `துக்ளக் தர்பார்’ படத்திலும் நடிக்கவுள்ளார். விஜய்யுடன் இணைந்து நடிக்கும் லோகேஷ் கனகராஜ் படம், அமீர்கானுடன் நடிக்கும் இந்திப்படம், மஞ்சு வாரியருடன் நடிக்கும் மலையாளப்படம், வில்லனாக நடிக்கும் தெலுங்குப்படம் எனப் பல மொழிப்படங்களிலும் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.

2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...

ஜோதிகா

ரீ-என்ட்ரிக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்துவரும் ஜோதிகா, இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே இரண்டு படங்களில் பிஸியாகவுள்ளார். அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ஃபெட்ரிக் இயக்கும் `பொன்மகள் வந்தாள்’ படத்தில் நடிப்பதோடு `கத்துக்குட்டி’ இரா.சரவணன் இயக்கும் படத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனியோடு நடிக்கிறார். இந்த இரு படங்களையும் சூர்யாதான் தயாரித்து வருகிறார். இந்தப் படங்களை முடித்த பின்னர், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...

நயன்தாரா

2020-ல் `நெற்றிக்கண்’, `மூக்குத்தி அம்மன்’ படங்களில் நடிக்கவுள்ளார் நயன். செவித்திறன் பாதிக்கப்பட்ட பெண்ணாக `நானும் ரெளடிதான்’ படத்திலும், வாய் பேசமுடியாத பெண்ணாக `கொலையுதிர்காலம்’ படத்திலும் நடித்த நயன்தாரா, `நெற்றிக்கண்’ படத்தில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும், ஆர்.ஜே பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கும் `மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மனாகவும் நடிக்கிறார். தொடர்ந்து இதே வருடம் வேறு சில படங்களை கமிட் செய்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.