Published:Updated:

"சில சினிமா பிரபலங்கள் நான் போன் பண்ணாலே எடுக்க மாட்டாங்க!" - மூத்த கலைஞர் பிந்து கோஷ் ஆதங்கம்!

பிந்து கோஷ்

"எம்.ஜி.ஆர் உடன் பல படங்களில் நடனம் ஆடியிருக்கேன். அந்த காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு. இனி அதைப் பற்றி பேசி ஒண்ணும் ஆகப் போறதில்லை!" - பிந்து கோஷ்

"சில சினிமா பிரபலங்கள் நான் போன் பண்ணாலே எடுக்க மாட்டாங்க!" - மூத்த கலைஞர் பிந்து கோஷ் ஆதங்கம்!

"எம்.ஜி.ஆர் உடன் பல படங்களில் நடனம் ஆடியிருக்கேன். அந்த காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு. இனி அதைப் பற்றி பேசி ஒண்ணும் ஆகப் போறதில்லை!" - பிந்து கோஷ்

Published:Updated:
பிந்து கோஷ்

தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர், நடிகை பிந்து கோஷ். மூத்த கலைஞர்களுள் ஒருவரான இவர் விருகம்பாக்கத்தில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், வயது மூப்பின் காரணமாகவும் அவரது சகோதரிகள் ஆந்திராவிற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அவரிடம் பேசினோம்.

பிந்து கோஷ்
பிந்து கோஷ்

"எம்.ஜி.ஆர் உடன் பல படங்களில் நடனம் ஆடியிருக்கேன். அந்தக் காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு. இனி அதைப் பற்றி பேசி ஒண்ணும் ஆகப் போறதில்லை. முன்னாடி நடிகர் சங்கம் சார்பாக விஷால் 2500 ரூபாய் மாதமாதம் கொடுத்துட்டு இருந்தார். பிறகு, அதுவும் இல்லாமல் போச்சு. யாரும் எந்த உதவியும் பண்ணலை. நானும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்கலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சில சினிமா பிரபலங்கள் நான் போன் பண்ணினா கூட எடுக்க மாட்டாங்க. அவ்வளவுதான் எல்லாமே! இப்போ நிறைய மாத்திரைகள் போட்டுட்டு இருக்கேன். தைராய்டு, கொலஸ்ட்ரால் பிரச்னைன்னு எல்லாத்துக்கும் ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கேன். வாழ்நாள் முழுமைக்கும் எல்லா மாத்திரைகளும் போடணும். அதிகமா மூட்டுவலி இருக்கு. தனியா என்னால நடக்க முடியாது. உடல் ரீதியா சில பிரச்னைகள் ஏற்பட்டுச்சு. அதனால, என் சகோதரிகள் கூப்பிட்டாங்கன்னு அவங்க வீட்டுக்கு வந்துட்டேன்.

பிந்து கோஷ்
பிந்து கோஷ்

இப்போ எனக்கு 71 வயசாகுது. இனிமே இருந்து எதை சாதிக்கப் போறேன்... கடவுள் எப்போ கூப்டுறாரோ அப்போ போய் சேர வேண்டியதுதான்!

இதுக்கப்புறம் இப்படி வாழணும், இது வேணும், இவங்களை பார்க்கணும்னுலாம் எனக்கு எந்த ஆசையும் இல்லை!" என்று வருத்தத்துடன் பேசி முடித்தார்.