Published:Updated:

`இந்த அஜித்... அந்த வடிவேலுவுடன் இணைய வேண்டும்..!' - மேஜிக்கிற்குக் காத்திருக்கும் ரசிகர்கள் 

அஜித் - வடிவேலு
அஜித் - வடிவேலு

தமிழ் சினிமாவில், அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திய பல கூட்டணிகளில் சிலவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்...

தமிழ் சினிமாவின் சில கூட்டணிகளை மறக்க முடியாது. ஒரு முறையோ அல்லது சில முறையோ... அந்த `அதிசயங்களும் அற்புதங்களும்' இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கின்றன. வெற்றியெனும் பாதையில் ராஜநடைபோட்ட பல கூட்டணிகள், தற்போது என்ன செய்கின்றன என்பது தெரியாமலே இருக்கின்றன. அந்தக் கூட்டணிகளில் சிலவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்!

சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா
சூர்யா - ஜோதிகா

தமிழ் சினிமாவில் அஜித் - ஷாலினிக்குப் பிறகு போற்றிப் புகழும் காதல் ஜோடி, சூர்யா - ஜோதிகா. `பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின்மூலம் முதன்முறையாக ஜோடி சேர்ந்த சூர்யா - ஜோதிகா, `காக்க காக்க’, `பேரழகன்’, `மாயாவி’, `சில்லுனு ஒரு காதல்’ எனப் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்கள். திரையிலும் இவர்களது கெமிஸ்ட்ரியைப் பார்த்து மக்கள் கொண்டாடினார்கள். திரையில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும் காதல் வயப்பட, 2006-ல் இவர்களுக்கு `டும் டும் டும்’ என மேளம் கொட்டியது. திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா, 2015-ம் ஆண்டு `36 வயதினிலே’ படத்தின்மூலம் கம்பேக் கொடுத்தார். தற்போது, அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் ஜோதிகா, மீண்டும் எப்போது சூர்யாவோடு ஜோடியாக நடிப்பார் என்பதே பலரது எதிர்பார்ப்பு. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் - பிரகாஷ்ராஜ்

விஜய் - பிரகாஷ்ராஜ்
விஜய் - பிரகாஷ்ராஜ்

திரையில் தோன்றும் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவு முக்கியம் வில்லனுக்கும் இருக்கிறது. அப்படி, `கில்லி’ படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த முத்துப்பாண்டி கேரக்டரின் வீரியம்தான், சரவணவேலுவாக நடித்த விஜய்யை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியது. அதன் பிறகு, `சிவகாசி’, `போக்கிரி’, `வில்லு’ எனத் தொடர்ந்து பயணித்த இந்த ஹீரோ - வில்லன் காம்போவை, கடந்த 10 வருடங்களாக ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள். விஜய்-யின் மார்க்கெட் தமிழ் சினிமாவைத் தாண்டியும் இருப்பதால், அவரது படங்களில் பெரும்பாலும் மற்ற மொழி நடிகர்களையே வில்லன்களாக நடிக்க வைத்துவருகிறார்கள். சீக்கிரமே விஜய் - பிரகாஷ்ராஜ் காம்போ ஒரு படத்தில் இணைந்தால், மாஸுக்கு பஞ்சம் இருக்காது. 

அஜித் - வடிவேலு

அஜித் - வடிவேலு
அஜித் - வடிவேலு

`ஆனந்த பூங்காற்றே’ படத்தில் அஜித் - வடிவேலு சேர்ந்து நடித்திருந்தாலும், `ராஜா’ படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து அடித்த லூட்டிக்கு அளவே இல்லை. அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும், காமெடியில் இன்று வரை ராஜாவாக இருக்கிறது. ஆனால், இந்தப் படத்திற்குப் பிறகு அஜித் - வடிவேலு காம்போ இணையாததற்கு பல காரணங்களை கிசுகிசுத்துவருகிறது கோலிவுட். இதுகுறித்து `ராஜா’ பட இயக்குநர் எழிலும், `உண்மையிலயே ஷூட்டிங்ல அப்போ நான் இருந்த பரபரப்புல அவங்களுக்குள்ள என்ன நடந்துச்சுனு நோட் பண்ணலை. ஆனா, சின்ன கருத்து வேறுபாடு இருந்திருக்குங்கிறதை ரொம்ப லேட்டாதான் கேள்விப்பட்டேன். நிஜமாவே அது ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம்தான்’ என கூறியிருக்கிறார். இவர்களுக்கிடையே இருக்கும் பிரச்னை தீர்ந்து சீக்கிரமே சேர்ந்து நடிக்க வேண்டும்.

இன்னொரு பக்கம் பார்த்திபன் - வடிவேலு காம்போவில் வெளியான `குண்டக்க மண்டக்க' செம ஹிட். இன்னும் படத்தின் பெயர் தெரியாமலே அந்தக் காமெடியை மட்டும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள், ரசிகர்கள். சமீபத்தில்கூட, `நானும் வடிவேலும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என பார்த்திபன் கூறியிருந்தார். சீக்கிரம் வாங்கய்யா... சீக்கிரம் வாங்கய்யா...

விஜய் - யுவன்

விஜய் - யுவன்
விஜய் - யுவன்

விஜய்-யின் ரசிகர்களும் யுவனின் ரசிகர்களும் பல வருடங்களாகத் தவமிருந்து எதிர்பார்க்கும் காம்போ இது. இளையராஜா இசையமைத்திருந்த `ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் `ருக்கு ருக்கு ரூக்குஜா’ பாடலை யுவன் பாடியதில் இணைந்த இந்த காம்போ, `புதியகீதை’ படத்திலும் தொடர்ந்தது. ஆனால், அந்தப் படத்தின் பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்திருந்தார் யுவன். பின்னணி இசையை அவரது அண்ணன் கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார். இந்தக் காம்போ, அதற்குப் பிறகு இணையவே இல்லை. யுவன் தனது மாஸ் தீம் மியூசிக்கை, எப்போது விஜய்-யின் படத்திற்குப் போடுவார் எனப் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

அப்படியே அந்த `3’ படத்தில் இணைந்த தனுஷ் - அனிருத் காம்போவை இணைத்துவிட்டால் சிறப்பாக இருக்கும். திரையரங்கம் அதிரும் இந்தக் காம்போ, `மாரி’ படம் வரை தொடர்ந்தது. போக, பல மாஸ் தீம் மியூசிக், ஹிட்டான பாடல்கள் இவர்களது கூட்டணியில் வந்திருக்கின்றன. இந்த காம்போ சீக்கிரமே திரும்ப வரணும்... பழைய `தனுருத்' காம்போவா திரும்ப வரணும்.  

கமல் - மணிரத்னம்

கமல் - மணிரத்னம்
கமல் - மணிரத்னம்
`அதிசய' ரஜினி; `தம்பிமார்கள்' எஸ்.ஏ.சி; `சான்ஸ் கொடுங்க' விஜய் சேதுபதி... உலக நாயகனின் `உங்கள் நான்' விழாவில் நடந்தது என்ன?!

தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் கிளாஸிக் படங்களுள் ஒன்று, `நாயகன்’. மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவான `நாயகன்’ படத்தின் தாக்கம், இன்றுவரை பல படங்களில் பிரதிபலிக்கிறது. படத்திற்குப் படம் அப்டேட்டாகி வரும் மணிரத்னம், பல இளம் நடிகர்களைத் தனது படத்தில் நடிக்கவைக்கிறார். கமலும் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டதால், தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கிறார். ஆனால், இவர்கள் இருவரும் இணைந்து மற்றுமொரு கிளாஸிக் படத்தைக் கொடுத்தால், அது ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்டாக இருக்கும். அதில், இளையராஜாவும் இணைந்தால், `கேட்கவே இன்பமாய் இருக்குதய்யா.'

இதேபோல், அஜித் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியும் ஒரே ஒரு முறைதான் நிகழ்ந்திருக்கிறது. `தீனா’ படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய அஜித்திற்கு, இன்றுவரை பல பேட்டிகளில் நன்றி சொல்லிவருகிறார், ஏ.ஆர்.முருகதாஸ். இவர்களது கூட்டணியில் `கஜினி’ மிஸ்ஸானாலும், சீக்கிரமே வேறொரு படத்தில் இணைய வேண்டும் என்பதே அஜித் ரசிகர்களின் விருப்பம்.

இதேபோல், வேறு எந்த காம்போக்கள் மீண்டும் இணையவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அதை கமென்ட் பண்ணுங்க பாஸ்!

அடுத்த கட்டுரைக்கு