கட்டுரைகள்
Published:Updated:

ஜாலியா பாருங்க!

ஜாலியா பாருங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜாலியா பாருங்க!

இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ், பல பேரால ஏத்துக்க முடியாததா இருக்கும்.

கொரோனா வைரஸால் வீட்டிலேயே அடைந்துகிடக்கும் இந்தச் சூழலில் பார்க்கவேண்டிய படங்கள் என இயக்குநர் வசந்தபாலன் பரிந்துரைப்பது...
ஜாலியா பாருங்க!
ஜாலியா பாருங்க!
``கொரோனா வைரஸ் தாக்கத்தினால எல்லாரும் வீட்டுக்குள்ளயே இருக்காங்க. இந்த நேரத்துல வீட்டுல இருக்கிறவங்க குடும்பத்தோடு உட்கார்ந்து சிரிச்சு, ரசிச்சுப் பார்க்கிற மாதிரியான படங்கள்தான் சொல்ல விரும்புறேன். என்னோட சாய்ஸ் இதுதான்... மிஸ் பண்ணாமப் பார்த்துடுங்க'' என்கிறார் இயக்குநர் சுந்தர் சி.
ஜாலியா பாருங்க!
``நிறைய பேர் இந்தப் படங்களைப் பார்த்திருப்பீங்க. பார்க்காதவங்க இருந்தா பாருங்க. இந்தப் படங்களை ஒவ்வொரு முறை பார்க்கிறபோதும் புதுசா ஏதாவது எனக்குத் தெரியும். உங்களுக்கும் இதே ஃபீல் கிடைக்கும்னு நம்புறேன்'' என்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
ஜாலியா பாருங்க!
இந்தக் காலத்தில் பார்ப்பதற்கு ஏற்ற படங்கள் என்று இயக்குநர் கே.வி.ஆனந்த் பரிந்துரைக்கும் பத்துப் படங்கள் இவை.

`` ‘தில்லானா மோகனாம்பாள்’ என்னோட ஆல்டைம் ஃபேவரைட். ரயிலில் நடக்கும் காட்சிகள், பாலையா காமெடி, அந்தத் திரைக்கதைன்னு பல விஷயங்கள் என்னை பிரமிக்க வெச்சது.

நான் பிலிம் இன்ஸ்டிட்யூட் படிச்ச காலத்தில் சினிமான்னா அது சத்யஜித் ரே-ன்னு சொல்லுவாங்க. அவர் எடுத்த படங்களிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது `The Apu trilogy’தான். இது அவர் எடுத்த ‘Pather Panchali’, ‘Aparajito’, ‘The World of Apu’ங்கிற மூணு படங்களின் தொகுப்புதான். ஒரு சிறுவன் வளர்ந்து பெரியவனாகுற வரைக்குமான கதை. பொதுவாவே சத்யஜித் ரே படங்களில் படம் முடியப்போற கடைசிப் பத்து நிமிஷக்காட்சிகளுக்காக அதிகமா உழைச்சிருப்பார்.

ஜாலியா பாருங்க!

`அவள் அப்படித்தான்’ காலத்தை மீறுன ஒரு படம். வெற்றி, தோல்வியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எடுத்த படமா இருக்கும். கமல்ஹாசன், ரஜினிகாந்த். ஸ்ரீபிரியா இவங்க மூணு பேருக்குமான உரையாடல்கள் எல்லாமே அந்தக் காலத்தை மீறுனதா இருக்கும். இந்தப் படத்தை இப்போ ரிலீஸ் பண்ணினாலும், இப்போ இருக்கிற இளைஞர்களுக்கும் பிடிக்கும். அந்த மாதிரியான ஒரு படத்தை ருத்ரய்யா கொடுத்திருக்கார்.

பிரபல ரஷ்ய இயக்குநர் Andrei tarkovsky எடுத்த `Solaris’ படம், சைக்காலஜியைத் தெளிவா பேசின படம். இந்தப் படம் பார்க்கிறதுக்கு மிகப்பெரிய பொறுமை வேணும். இப்போ எல்லாரும் கொரோனாவால வீட்டுல பொழுதுபோகாம இருக்கிற சமயத்தில் இந்தப் படத்தைக் கட்டாயம் பார்க்கலாம். சில படங்கள் பார்த்தால் ரெண்டு, மூணு நாள் நம்மளை தூங்கவிடாம இருக்கும்ல, அதில் இந்தப் படம் ரொம்ப முக்கியமானது.

‘உதிரிப் பூக்கள்’ என்னை அழவைத்த படம். மகேந்திரன் சாரோட இயக்கம், அசோக் சாரோட ஒளிப்பதிவுன்னு பல பிடித்த விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கு.

Krzysztof Kieslowski எடுத்த `Three colour: Blue’, எனக்கு ரொம்பப் பிடித்த படம். கணவனும் மகனும் இறந்த பிறகு மனைவியின் வாழ்க்கை எப்படி இருக்கும்னு காட்டிய படம். Krzysztof Kieslowski தன் படங்களில் சஸ்பென்ஸை டடக்குனு ஓப்பன் பண்ண மாட்டார். கதை நகருற அந்த வேகத்திலேயே ஒவ்வொரு சஸ்பென்ஸா வெளிய தெரியும். அதுவும் வசனத்தில் சொல்ல மாட்டார். படம் பார்க்கிற ஆடியன்ஸ், அந்தக் காட்சிகளின் வழியாக அதைப் புரிஞ்சுக்கணும்னு நினைப்பார்.

பிரபல இயக்குநர் Raoul peck எடுத்த `Lumumba’ ஒரு உண்மைக்கதை. காங்கோ நாட்டை பெல்ஜியம் ஆண்டுகொண்டிருந்த சமயத்தில், அவங்ககிட்ட இருந்து Lumumba-ங்கிற அரசன் எப்படி ஆட்சியைக் கைப்பற்றினான்; Lumumbaவை அழிச்சிட்டு மீண்டும் பெல்ஜியம் எப்படி காங்கோவைக் கைப்பற்றியது என்கிற உண்மை ரொம்பவே குரூரமா இருக்கும்.

`Incendies’ என்னை ரொம்பவே பாதிச்ச படம். பிரெஞ்சுல இருந்து ஹாலிவுட்டுக்குப் போன Denis Villineuve எடுத்தது. இது அவரோட கரியரின் ஆரம்பத்தில் எடுத்த படம். ஒரு இறந்துபோன அம்மாவின் கடைசி ஆசையை மையமா வெச்சு எடுத்த படம். இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ், பல பேரால ஏத்துக்க முடியாததா இருக்கும்.

Jean-Pierre Jeunet எடுத்த `Amelie’ ஒரு இன்னசென்ட்டான குழந்தை இந்த உலகத்தை எப்படிப் பார்க்குது என்பதை வெச்சு எடுத்தது. அந்தக் குழந்தை பெண்ணா வளர்ற வரைக்குமான படமா இருக்கும். ஃபேன்டஸி கலந்து இந்தப் படத்தை எடுத்திருப்பாங்க. முதல் முறையா கலர் கரெக்‌ஷனில் விளையாடிய படம். இப்போ பல பேர், `கேமராமேன் இந்தப் படத்தில் என்ன ‘டோன்’ யூஸ் பண்ணியிருக்கார்’னு பேசுறாங்கள்ல, அந்த டோனுக்கு தாத்தா இந்தப் படம். கேமராமேன் Bruno Delbonnel கலக்கியிருப்பார்.

Wong Kar-waiங்கிற சைனீஸ் டைரக்டர் எடுத்த படம், `In the mood for love.’ இந்தக் கதையை டைரக்டர், ஆடியன்ஸுக்கு கன்வே பண்ணின விதமே ரொம்ப அழகா இருக்கும். கணவன் - மனைவி உறவுமுறைகளை ரொம்ப அழகா எடுத்திருப்பாங்க.’’