Published:Updated:

"டீச்சர் ஆகணும்னு கனவு; ஆனா, வாழ்க்கை வேற திட்டம் வச்சிருந்தது"- 'கில்லி'யம்மா ஜானகி சபேஷ் ஷேரிங்ஸ்!

ஜானகி சபேஷ்

தைரியத்தை வளர்க்கணும்னு எனக்கு எங்க அப்பா புரியவச்சார். அதனாலதான் நாடகங்கள்ல தைரியமா நடிச்சேன். - ஜானகி சபேஷ்

"டீச்சர் ஆகணும்னு கனவு; ஆனா, வாழ்க்கை வேற திட்டம் வச்சிருந்தது"- 'கில்லி'யம்மா ஜானகி சபேஷ் ஷேரிங்ஸ்!

தைரியத்தை வளர்க்கணும்னு எனக்கு எங்க அப்பா புரியவச்சார். அதனாலதான் நாடகங்கள்ல தைரியமா நடிச்சேன். - ஜானகி சபேஷ்

Published:Updated:
ஜானகி சபேஷ்

இவரைப் பார்ப்பவர்கள், இவங்க 'கில்லி' படத்துல விஜய்யோட அம்மா, 'சிங்கம் படத்துல அனுஷ்காவோட அம்மா, 'பில்லா-2' படத்துல அஜித்தோட அம்மா என நினைவில் வைத்துக்கோண்டு கூறலாம். ஆனால், அதைத் தாண்டியும் பல திறமைகளை கொண்டவர் ஜானகி சபேஷ். குழந்தைகளுக்கான கதை சொல்லி, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், வாய்ஸ் ஓவர் ஆர்ஸ்டிஸ்ட் என பன்முகமாக புன்னகைப்பவர் இவர்.

janaki sabesh
janaki sabesh

''நான் வளர்ந்தெல்லாம் கல்கத்தா, டெல்லி, மும்பைனு மெட்ரோ நகரங்கள். என் சின்னவயசில ப்ளே ஸ்கூல்ல சேர்ந்தப்ப, அங்கே உள்ள டீச்சர்ஸைப் பார்த்து பிரமிப்பானேன். அம்மா, அப்பாவை விட ஒரு டீச்சர் நினைச்சா, எல்லாரையும் கன்ட்ரோல் பண்ண முடியும்னு நினைச்சேன். டீச்சர் ஆகணும்ங்கறது என் மிகப்பெரிய கனவு. ஆனா, வாழ்க்கை வேற திட்டம் வச்சிருந்தது. இப்ப குழந்தைகளுக்கு ஸ்டோரி டெல்லிங் பண்றப்ப, என் கனவு நனவான மாதிரி உணர்றேன். இப்ப இளைஞர்களுக்கு வணிகம் சார்ந்த விஷயங்களைக் கத்துக்கொடுக்கற விசிட்டிவ் பெகல்டியாகவும் இருக்கேன். நிறைய இடங்கள்ல ஒர்க் ஷாப்ஸ் நடத்துறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

janaki
janaki

நாங்க டெல்லியில வசிக்கறப்பதான் எங்க வீட்ல வீடியோ பிளேயர் இருந்துச்சு. எங்க அப்பா மூன்றாம் பிறை படத்தோட வீடியோ கேசட் வாங்கிட்டு வந்திருந்தார். அந்தப் படத்தை பார்த்தப்ப ஶ்ரீதேவியோட நடிப்பைப் பார்த்து பிரமிச்சேன். என் வீட்டுல அவங்க குரல்ல பேசிக்காட்டினேன். அப்பாவுக்கு ஆச்சரியம், வீட்டுக்கு வந்த எல்லோர்கிட்டேயும் அதை ஆச்சரியமா சொல்லிக்காட்டி என்னை அந்த குரல்ல பேச வைப்பாங்க. அப்ப கிடைச்ச கைத்தட்டலை இப்ப நினைச்சாலும் சிலிர்க்கும். எங்க வீட்டுல என்கரேஜ் ரொம்ப பண்ணுவாங்க. என் தாத்தா பெரிய ஓவியர். நான் வீட்டுல எதாவது சின்னதா வரைஞ்சாக்கூட அதைப் பார்த்து எங்க அப்பா 'ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கே... ஸ்டெடி ஹேன்ட்'னு பிரமிப்பா பாராட்டுவார். பெத்தவங்க என்கரேஜ் பண்ணினா பிள்ளைங்க தன்னம்பிக்கைல மின்னுவாங்கனு சொல்றதை எங்க அப்பா உண்மையாக்கினார். எல்லாமே வெற்றிகரமா இருக்கணும்னு விதி கிடையாது. ஆனா, கைத்தட்டல்கள் நமக்கு உற்சாகத்தைக் கொடுக்கும், தைரியத்தை வளர்க்கணும்னு எனக்கு எங்க அப்பா புரியவச்சார். அதனாலதான் நாடகங்கள்ல தைரியமா நடிச்சேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கனெக்ட்டிங் தான் டாட்ஸ்க்னு ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்ற மாதிரி பின்னாடி பார்க்கும் போதுதான் புள்ளிகளை இணைக்க முடியும். நிறைய நகரங்கள்ல நான் வளர்ந்ததால, திடீர்னு நான் கொல்கத்தா போனால், எங்க ஆபீஸ் க்ளைன்ட்ஸ்கிட்ட ஒரு ரெண்டு வார்த்தை பெங்காலியில பேசினா, அவங்க முகம் அவ்ளோ மலரும். குழந்தைகளுக்கு கதை சொல்றப்ப, நமக்கு மொழி சரளமா தெரியுதோ இல்லியோ ஆனா, தெரிஞ்ச வரையும் அந்த ஸ்லாங்கோடு பேசும்போது கதை கேட்கற குழந்தைகள் இன்னும் ஆர்வமா கேட்பாங்க. ஆனா, சென்னை எனக்கொரு பட்டம் கொடுத்திருக்கு. அது 'கில்லியம்மா'. அதுக்கு நான் ரொம்ப பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கேன்..'' கில்லி படம், நடிப்பு என பல விஷயங்களை இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism