தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் 2022-24-ம் ஆண்டிற்கான தேர்தல் வருகிற 25-ம் தேதி சென்னையில் நடக்கிறது. தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. விக்ரமனின் `புது வசந்தம்' அணி சார்பில் தலைவராக ஆர்.கே.செல்வமணியும், இயக்குநர் பாரதிராஜாவின் `இமயம்' அணி சார்பில் தலைவராக கே.பாக்யராஜும் போட்டியிடுகின்றனர். இதில் ஆர்.கே.செல்மணி மீண்டும் தலைவராகப் போட்டியிடுகிறார். `புது வசந்தம்' அணி சார்பில் துணைத் தலைவர்களாக முதலில் கே.எஸ்.ரவிகுமாரும், எஸ்.ரவிமரியாவும் போட்டி போட்டனர். ஆனால் அவர்களது வேட்புமனு சரியாக பூர்த்தி செய்யப்படாததால், அவர்களது விண்ணப்பம் ரிஜெக்ட் ஆனது. அதனால் மற்ற இயக்குநர்கள் அவர்களது பதவிகளை அன்னபோஸ்ட் ஆக தேர்வு செய்ய விரும்பினர்கள். அதில் பாக்யராஜின் அணி சார்பில் போட்டியிட்ட எழிலும், ஆர்.மாதேஷும் துணைத் தலைவர்களாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தல் குறித்து புது வசந்தம் அணி சார்பில் இயக்குநரும் நடிகருமான ரவிமரியாவிடம் பேசினோம்,
''ஆர்.கே.செல்வமணி சார் அணியுடன் நானும் மீண்டும் போட்டியிடுவது சந்தோஷமானது. சூழல் காரணமாக அவர் தலைவராக மீண்டும் போட்டியிடுவதற்கான நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. என்னுடைய விண்ணப்பத்தில் தவறு இருந்ததால், வேட்புமனு ரிஜெக்ட் ஆனது. இப்போது செயற்குழு உறுப்பினராக நிற்கிறேன். நாங்க வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. 'செய்தோம். செய்வோம்' என்ற தைரியத்தோடு போட்டியிடுறோம். எங்க அணித் தலைவராக ஆர்.கே.செல்வமணியும், செயலாளராக ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளராக எம்.பேரரசுவும் இணை செயலாளர்களாக சுந்தர்.சி., ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, என்.ஏகம்பவாணன் போட்டியிடுறாங்க. ஜனவரி 23-ம் தேதி தேர்தல் நடப்பதாக இருந்தது. அன்று ஞாயிறு லாக்டவுன் வருவதால், ஜனவரி 25-ம் தேதியில் தேர்தல் நடக்கிறது.'' என்கிறார் ரவிமரியா.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இமயம் அணி சார்பில் இணை செயலாளராக போட்டியிடும் 'க/பெ.ரணசிங்கம்' இயக்குநர் விருமாண்டியிடம் பேசினேன்.
''அணித் தலைவராக கே.பாக்யராஜ் சார் போட்டியிடுறார். செயலாளராக ஆர்.பார்த்திபன், பொருளாளராக வெங்கட்பிரபுவும் போட்டியிடுறாங்க. தேர்தலுக்கான வாக்குறுதிகள் தயாரிக்கும் வேலைகள் நடந்துட்டு இருக்கு.'' என்கிறார் விருமாண்டி.