Published:Updated:

`பட்டாஸ்', `சிலம்பாட்டம்' மட்டுமல்ல; இந்தப் படங்களும் அதே டெய்லர், அதே வாடகை!

ஃப்ளாஷ்பேக் தந்தைகள்
ஃப்ளாஷ்பேக் தந்தைகள்

தன் தந்தையைக் கொன்ற வில்லனை, பழிக்குப்பழி வாங்க புறப்படும் மகனின் கதை. இந்தத் தொட்டுத்தொடரும் ஹிட் பாரம்பர்யத்தில் எத்தனை படங்கள் வெளியாகியிருக்கிறது என எண்ணுவதைவிட, விஜயகாந்த் கணக்கு சொன்ன மண்ணை மீண்டும் எண்ணிவிடுவது சுலபமான ஒன்று.

தன் தந்தையைக் கொன்ற வில்லனை, பழிக்குப்பழி வாங்க புறப்படும் மகனின் கதை. இந்தத் தொட்டுத்தொடரும் ஹிட் பாரம்பர்யத்தில் எத்தனை படங்கள் வெளியாகியிருக்கின்றன என எண்ணுவதைவிட, விஜயகாந்த் கணக்கு சொன்ன மண்ணை மீண்டும் எண்ணிவிடுவது சுலபமான ஒன்று. ஆதலால், தந்தை மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரத்திலும் ஒரே நடிகர் நடித்த படங்களைப் பட்டியலிடுவோம்.

`வானத்தைப் போல' விஜயகாந்த்
`வானத்தைப் போல' விஜயகாந்த்

கீழ்க்காணும் எல்லாப் படங்களுக்கும் ஒரே மாதிரியான திரைக்கதைதான். பெரும்பாலான படங்களில் மகன், எந்த வம்புதும்புக்கும் செல்லாமல் சாந்தமாக வாழ்ந்துகொண்டிருப்பார். ஒருநாள், விதியின் விளையாட்டால் வில்லனும் மகனும் சந்தித்துக்கொள்ள, விபரீதமும் தொடங்கும். தான் வளர்ப்புப் பிள்ளை என்றும், தனது குடும்பத்தை வில்லன் கொன்றழித்தான் என்பதும் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டால் தெரியவரும். அதில் வெறியாகும் மகன், வில்லனை பழிக்குபழி வாங்க கொலைவெறியோடு கிளம்புவார்.

இல்லையேல், அவருக்கு இந்த விஷயம் முன்கூட்டியே தெரிந்திருந்து, கமுக்கமாக பழிவாங்கிக்கொண்டிருப்பார். அவ்வளவுதான்!

`பட்டாஸ்' தனுஷ்
`பட்டாஸ்' தனுஷ்

தவிர, எல்லாப் படங்களிலும் ஒரேமாதிரியான சில காட்சிகள் இருக்கும். அதாவது ஸ்லோமோஷனில் நடந்துவரும் மகன், வில்லனின் கண்களுக்கு மட்டும் தந்தையைப் போன்று காட்சியளித்து திகில் கிளப்புவார். தந்தையைக் கத்தியால் குத்தி, அதுவும் துரோகத்தால்தான் வீழ்த்தியிருப்பார்கள். துரோகத்தால் வீழ்ந்தோம் உறவுகளே...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்று முகம் :

`மூன்று முகம்' அலெக்ஸ் பாண்டியன்
`மூன்று முகம்' அலெக்ஸ் பாண்டியன்

தங்களின் தந்தையான அலெக்ஸ் பாண்டியனைக் கொன்ற ஏகாம்பரம் (எ) ஏம்பர்நாத்தை பழிக்குப்பழி வாங்கும் அருண், ஜான் என்கிற இரு மகன்களின் கதையே `மூன்று முகம்'. அருண், இந்த முன்கதை எதுவும் அறியாத அப்பாவிப் பிள்ளையாக ராமநாதன் வீட்டில் வளர்ந்துகொண்டிருப்பார். ஒருநாள், இந்த உண்மைகள் எல்லாம் தெரியவர, புத்தியைத் தீட்டி ஏகாம்பரத்தை வீழ்த்துவார். பீட்டர் செல்வராஜின் கதையைத் திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட திரைக்கதையாக மாற்றியிருக்கும் படத்தின் திரைக்கதையாசியர்கள் குழு. ரஜினி நீண்ட நாள்கள் கழித்து மூன்று வேடங்களில் நடித்த `கோச்சடையான்' திரைப்படமும் இதே வகை கதைதான்.

அபூர்வ சகோதரர்கள் :

`அபூர்வ சகோதரர்கள்' சேதுபதி
`அபூர்வ சகோதரர்கள்' சேதுபதி

தங்களின் தந்தையான சேதுபதியைக் கொன்ற வில்லன்களை பழிக்குப்பழி வாங்கும் அப்பு, ராஜா என்கிற இரு மகன்களின் கதையே `அபூர்வ சகோதரர்கள்'. உயரம் குறைந்த அப்பு கதாபாத்திரம், தமிழ் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட். ரூப் கோல்ட்பெர்ஜியன் கான்ட்ராப்ஷன் கான்செப்ட்டைப் பயன்படுத்தி, வில்லன்களை அப்பு போட்டுத்தள்ளுவதும், தற்செயலாக ராஜா அதில் சிக்கிக்கொள்வதுமாகத் திரைக்கதையில் த்ரில்லரும் காமெடியும் கலந்து விளையாடியிருப்பார் கமல்.

மெர்சல் & வில்லு :

`மெர்சல்' வெற்றிமாறன்
`மெர்சல்' வெற்றிமாறன்

`அபூர்வ சகோதரர்கள்' என்றால், `மெர்சல்' படமும் இந்தப் பட்டியலில் இடம்பெறும் என்பதைப் புரிந்துகொள்க. இதுதவிர, விஜய் நடித்த `வில்லு' திரைப்படமும் இதே கதைதான். மேஜர் சரவணன், நேர்மை தவறாத ராணுவ வீரர். அவரை துரோகத்தால் வீழ்த்தி, தேசத்துரோகி என முத்திரை குத்திவிடும் வில்லன்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் பழிவாங்க புறப்படும் மகன் புகழ். இந்த வகையறா படங்களின் வழக்கமான ட்ரீட்மென்டான முதற்பாதி ஜாலி, இரண்டாம் பாதி சீரியஸ் எனும் அதே ஃபார்முலாவில்தான் பிரபுதேவாவின் `வில்லு'வும் வெளியானது. ஏனோ `வில்லு', இலக்கை குறிபார்த்து அடிக்கத் தவறிவிட்டது.

சிட்டிசன் :

`சிட்டிசன்' சுப்ரமணி
`சிட்டிசன்' சுப்ரமணி

தன் அப்பாவுக்காக மட்டுமல்ல, தன் அத்திபட்டி கிராமத்துக்காகவே பழிவாங்க கிளம்பும் இளைஞனின் கதை `சிட்டிசன்'. சுப்ரமணி எனும் மீனவரின் குடும்பத்தையும் அவர் வாழ்ந்த அத்திபட்டி கிராமத்தின் மக்களையும் கூண்டோடு கொன்றழிக்கும் வில்லன்களை, விதவிதமான கெட்டப்களில் வந்து கொலை செய்வார் சுப்ரமணியின் மகன் அறிவானந்தம் (எ) ஆண்டனி (எ) அப்துல்லா. சரவண சுப்பையா இயக்கத்தில் உருவான இப்படம், அஜித்தின் கரியரில் மிக முக்கியமான படமாக இன்றளவும் கருதப்படுகிறது.

மாசு (எ) மாசிலாமணி :

`பட்டாஸ்', `சிலம்பாட்டம்' மட்டுமல்ல; இந்தப் படங்களும் அதே டெய்லர், அதே வாடகை!

தன் குடும்பத்தைச் சிதைத்த ஆர்.கே அண்ட் டீமை, மாசு பழிக்குப்பழி வாங்கும் கதை. இந்த சீவகசிந்தாமணி காலத்துக்கும் முந்தைய காலத்துக் கதையில், சூப்பர் நேச்சுரல் அம்சங்களைத் தூவிவிட்டு `மாசு (எ) மாசிலாமணி' என்றார் இயக்குநர் வெங்கட் பிரபு. இதேபோல், ஹரி இயக்கிய `சாமி ஸ்கொயர்' படமும் சூப்பர் நேச்சுரல் படமா என்கிற குழப்பம் இன்றுவரை உள்ளது. `நான் சாமி இல்ல, பூதம்' எனத் திடீரென பேய் பிடித்தவர்போல் ராவண பிச்சையின் ஆட்களை பேயடி அடித்துக்கொண்டிருப்பார் ராமசாமி. ஆறுச்சாமியின் மகன் ராமசாமி. பெருமாள் பிச்சையின் மகன் ராவண பிச்சை. வாவ்ல!

சிலம்பாட்டம் :

`சிலம்பாட்டம்' தமிழ்
`சிலம்பாட்டம்' தமிழ்
`பட்டாஸ்' டிரெய்லரில் சொல்லப்படும் `அடிமுறை'க்குப் பின்னாலிருக்கும் வரலாறு இதுதான்!

மாஸ் ஹீரோ என்றாலே, இக்கதைக்குள் காலடி வைத்தாக வேண்டும் என்பது ஏதோ கோலிவுட் வட்டாரத்தின் சம்பிரதாயம் போல. சிம்பு, மாஸ் ஹீரோவாக உருமாறிக்கொண்டிருந்த காலத்தில்தான் `சிலம்பாட்டம்' தந்தார். தன் தந்தை தமிழை குத்திக்கொன்ற வில்லன் துரைசிங்கத்தை, பழிக்குப்பழி வாங்கப் புறப்படும் விச்சுவின் கதை. அதே `பட்டாஸ்' கதை! இதே பாணியில் வெளியான, உங்களுக்கு தெரிந்த வேறு படங்களையும் கமென்டில் பதிவிடுங்கள் மக்களே...

அடுத்த கட்டுரைக்கு