Published:Updated:

` சரித்திரத்தில் நாம இல்லாமல் இருக்கலாம். ஆனா...' - வெளியானது 'சைரா நரசிம்மா ரெட்டி'யின் டீசர்!

'சைரா நரசிம்மா ரெட்டி'யின் டீசர் வெளியானது.

ஆந்திராவில் வாழ்ந்த சுதந்தரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான், `சைரா நரசிம்ம ரெட்டி'. சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில், சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். மிகப்பெரிய பொருள் செலவில் தயாராகிவரும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு என அனைத்து மொழி நடிகர்களும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Actor chiranjeevi
Actor chiranjeevi

பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசை, ரத்னவேலு ஒளிப்பதிவு, ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங், ராஜீவன் கலை இயக்கம், கமலக்கண்ணன் விஷுவல் எஃபக்ட்ஸ் எனப் பிரமாண்டமாக உருவாகிவருகிறது, `சைரா நரசிம்ம ரெட்டி'.

தற்போது, இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஒவ்வொரு நடிகரின் பிறந்த நாளன்றும் இந்தப் படத்தில் அவர்களின் லுக் என்ன என்பதை மோஷன் போஸ்டராக வெளியிட்டுவந்தது, படக்குழு. சமீபத்தில் வெளியான மேக்கிங் வீடியோவுக்கு இணையத்தில் செம ரெஸ்பான்ஸ். ஒன்றரை நிமிடங்கள் உள்ள அந்த வீடியோவில் சண்டைக்காட்சிகள், ஒவ்வொரு கேரக்டருக்குமான அறிமுகங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்திற்கு, எதிர்பார்ப்பு கிளம்பிய வண்ணம் உள்ளது.