Published:Updated:

மீண்டும் ஜிம் ஜிம்!

சைத்ரா ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
சைத்ரா ரெட்டி

டி.வி உலகம்

மீண்டும் ஜிம் ஜிம்!

டி.வி உலகம்

Published:Updated:
சைத்ரா ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
சைத்ரா ரெட்டி
 அன்வர் - சமீரா
அன்வர் - சமீரா

பல வருட காதல், எளிய திருமணம், பிரான்ஸில் தேனிலவு என்று திருமண நாள்களைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் சின்னத்திரையின் ரீல் & ரியல் காதல் ஜோடி அன்வர் - சமீரா. ``கல்யாணத்துக்குப்பிறகு ஈஃபிள் டவர் முன்னாடி செல்ஃபி எடுக்கணும்கிறது அவரோட ரொம்ப நாள் ஆசை. இப்போ ஆசை நிறைவேறிடுச்சு!'' என்று இன்ஸ்டாவில் கூட்டாக ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்கள் இந்தத் தம்பதி.

மகேஸ்வரி
மகேஸ்வரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`சூப்பர் சிங்கர்’ இயக்குநர் ரெளஃபா, `ராஜா ராணி’ இயக்குநர் பிரவீன் பென்னெட் போன்றோர் பார்ட் டைம் பிசினஸாக ஹோட்டல் நடத்தி வருகிறார்கள்.தொகுப்பாளர் நட்சத்திரா, வீட்டிலிருந்தபடியே ஆர்டரின் பெயரில் பண்டிகைகளுக்கான கேக் பிசினஸ் செய்கிறார். இந்த வரிசையில் இப்போது மகேஸ்வரியும் மெஸ் தொடங்க முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சைத்ரா ரெட்டி
சைத்ரா ரெட்டி

தமிழ் வாசிக்கத் தெரியாமல் இருப்பதைப் பெரிய மனக்குறையாக நினைக்கும் சைத்ரா ரெட்டி, அதற்காக நல்ல தமிழாசிரியரைத் தேடி வருகிறாராம்.

கீதாஞ்சலி
கீதாஞ்சலி

தொடர்ந்து சீரியலில் நடித்துக்கொண்டிருப்பதைக் காரணம் காட்டி, திருமணத்தைத் தள்ளிப்போட்டு வந்த `நாதஸ்வரம்’ கீதாஞ்சலிக்கு வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளார்களாம். `உன் தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு. இனியும் உன் கல்யாணத்தை தள்ளிப்போட முடியாது' என கண்டிப்பாக சொல்லிவிட்டார்களாம் கீதாஞ்சலியின் பெற்றோர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிஷா
நிஷா

நிஷாவுக்கு சமீப காலமாக எடை கூடிவிட்ட கவலை. இடையில் நிறுத்திவிட்ட ஜிம் பழக்கத்தை மறுபடியும் ஆரம்பித்திருக்கிறார்.

 நித்யா
நித்யா

பாலாஜியையும் அவர் மனைவி நித்யாவையும் விஜய் டி.வி-க்கு அறிமுகம் செய்து வைத்தது தொகுப்பாளர் தீபக்கும் அவர் மனைவி சிவரஞ்சனியும்தான். இன்றுவரை பாலாஜிக்கு விஜய் டி.வி-யுடன் சிறந்த தொடர்பு இருந்துவர, நித்யாவும் பிக் பாஸ் வரை வந்து புகழடைந்து விட்டார். இதை ரொம்பவே சென்டிமென்ட்டாக நினைக்கிறார் நித்யா. இதனாலேயே இப்போது ஜீ தமிழ் சேனலில் நடக்கும் `சூப்பர் மாம் - 2' நிகழ்ச்சிக்கு தீபக் - சிவரஞ்சனி ஜோடி அழைக்க, உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம் நித்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism