Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஐஸ்வர்யா தத்தா
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா தத்தா

`பிக்பாஸ்' அல்டிமேட்டுக்குச் செல்ல இருந்த ஓவியாவால் கடைசி நிமிடத்தில் கலந்துகொள்ள முடியாமல்போக, அவருக்குப் பதில் ஐஸ்வர்யா தத்தாவை அணுகினார்களாம்

விகடன் TV: ரிமோட் பட்டன்

`பிக்பாஸ்' அல்டிமேட்டுக்குச் செல்ல இருந்த ஓவியாவால் கடைசி நிமிடத்தில் கலந்துகொள்ள முடியாமல்போக, அவருக்குப் பதில் ஐஸ்வர்யா தத்தாவை அணுகினார்களாம்

Published:Updated:
ஐஸ்வர்யா தத்தா
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா தத்தா
விகடன் TV: ரிமோட் பட்டன்

தொடர்ச்சியாக அப்பாவி அம்மா கேரக்டர்களே கிடைப்பதாக வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார் சிந்து ஷியாம். இப்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் நெகட்டிவ் கேரக்டர் கிடைத்துள்ளதாம். வில்லி வேடத்தில் தன்னுடைய நடிப்புக்குக் கிடைக்கும் வரவேற்பைத் தெரிந்து கொள்ள ஆர்வ‌மாகக் காத்திருக்கிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுக்க ஜெகனைத் தேர்வு செய்ய விரும்பிய அந்தச் சேனல், நேரடியாக அவரிடம் விஷயத்தைச் சொல்லாமல், சில தினங்களுக்கு முன் வேறு ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கச் சொல்லி, அதன் மூலம் ட்ரையல் பார்த்ததாம். விசாரித்தால், `காம்பியரிங்கில் கொஞ்சம் அதிகம் பேசிவிடுவார் என இவர் குறித்துச் சொல்லப்படுவதாலேயே இந்தப் பரீட்சை' என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`பிக்பாஸ்' அல்டிமேட்டுக்குச் செல்ல இருந்த ஓவியாவால் கடைசி நிமிடத்தில் கலந்துகொள்ள முடியாமல்போக, அவருக்குப் பதில் ஐஸ்வர்யா தத்தாவை அணுகினார்களாம். அப்போது சம்பளத்தைத் தாறுமாறாக உயர்த்திக் கேட்டாராம் அவர். அதனாலேயே அவரை விட்டுவிட்டு சுஜா வருணியை கமிட் செய்தார்கள். இப்போது ஜீ தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் போட்டியாளராகத் தேர்வாகியுள்ளார் தத்தா.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`வெயிட் போட்டுவிட்டார்' எனச் சொல்லி சமீபத்தில் ஒரு சீரியலிலிருந்து ஹீரோயின் வெளியேற்றப்பட்ட நிலையில், `உடல் எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்யாதீர்கள்; உடற்பயிற்சியையே நம்புங்கள்' என வேண்டுகோள் வைக்கிறார் `ஊர்வம்பு' லக்ஷ்மி. எடை குறைக்க அறுவை சிகிச்சை செய்து அதனால் பெரிதும் அவதிப்பட்டவராம் இவர்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

`மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் சில செலவுகளை ஏற்றுக் கொள்வதாகச் சொன்ன நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், கடைசியில் அதைத் தரவில்லை எனக் கிளம்பிய புகார்கள் குறித்து இதே `விகடன் டி.வி' பகுதியில் சுட்டிக் காட்டியிருந்தோம். தற்போது பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார், போட்டியாளர்களில் ஒருவரான சுனிதா. “சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டபோது நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்த நிறுவனங்களையும் அதில் டேக் செய்திருந்தோம். அதனால் அந்த நிறுவனங்கள் உடனடியா இந்த விவகாரத்துல தலையிட, எங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைச்சிடுச்சு” என்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க

தமிழ் சீரியல் ஹீரோக்களிலேயே அதிக சம்பளம் வாங்குகிறவராம் அந்த நடிகர். எபிசோடுக்கு முப்பதாயிரம் என்கிறார்கள். அவ்வளவு சம்பளம் கொடுத்தும், ஷூட்டிங்கில் அவரது வருகைக்காகக் ‘காத்திருக்க' வேண்டூம் என்றால், எந்தத் தயாரிப்பாளர்தான் தாக்குப்பிடிப்பார்? தொடங்கிய வேகத்தில் அந்த சீரியல் முடிவடைந்ததன் பின்னணியில் இதையும் ஒரு காரணமாகச் சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism