Published:Updated:

விகடன் TV - ரிமோட் பட்டன்

ரோஷினி ஹரிப்ரியன்
பிரீமியம் ஸ்டோரி
ரோஷினி ஹரிப்ரியன்

இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கக் காத்திருக்கும் `ராஜா ராணி’ ஆல்யா மானசாவுக்கு இது எட்டாவது மாதம்.

விகடன் TV - ரிமோட் பட்டன்

இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கக் காத்திருக்கும் `ராஜா ராணி’ ஆல்யா மானசாவுக்கு இது எட்டாவது மாதம்.

Published:Updated:
ரோஷினி ஹரிப்ரியன்
பிரீமியம் ஸ்டோரி
ரோஷினி ஹரிப்ரியன்
விகடன் TV - ரிமோட் பட்டன்

திவ்யா கணேஷ் திருமணத்துக்குத் தயாராகி விட்டதாகத் தெரிகிறது. `காதல் திருமணமா, வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையா’ என்றால், சிரிப்பையே பதிலாகத் தருகிறார். `யாரையோ காதலிக்கிறார்’ என்பதுதான் அவரைத் தெரிந்தவர்களிடமிருந்து வரும் தகவல்.

விகடன் TV - ரிமோட் பட்டன்

அல்டிமேட் அனுபவம் ‘பிக் பாஸ்’ போல அமையவில்லை என்கிறாராம் சுஜா வருணி. ‘எப்போது வெளியில் வருவோம் என்றுதான் இருந்தது’ என தனக்கு நெருக்கமான நட்பு வட்டத்தில் மனம்விட்டுப் பேசியிருக்கும் அவர், போகிற போக்கில் `போட்டியாளர்களுக்கு இப்போது பி.பா வீட்டுக்குள் கேட்ட வசதியெல்லாம் கிடைக்கிறது’ என்றும் சொல்லியிருக்கிறார்.

விகடன் TV - ரிமோட் பட்டன்

இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கக் காத்திருக்கும் `ராஜா ராணி’ ஆல்யா மானசாவுக்கு இது எட்டாவது மாதம். கடந்த மாதம் சிறிய அளவில் வீட்டில் வளைகாப்பு நடத்தினார்களாம். குழந்தை பெற்ற பிறகு ஒரு வருடத்துக்காவது எங்கும் வெளியில் செல்ல முடியாது என்பதால் சில தினங்களுக்கு முன் கணவருடன் ஜாலியாக கோவாவைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்திருக்கிறார்.

விகடன் TV - ரிமோட் பட்டன்

பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தான் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக ‘பாரதி கண்ணம்மா’ புகழ் ரோஷினி ஹரிப்ரியனை கமிட் செய்ய நினைக்கிறதாம். முதல்கட்டமாகப் பேசியிருப்பதாகத் தெரிகிறது.

விகடன் TV - ரிமோட் பட்டன்

சைத்ரா ரெட்டி, பியர்லி இரண்டு பேரைத் தாண்டி சின்னத்திரையிலிருந்து நடிகை ஸ்டெபியும் ‘வலிமை’ படத்தில் நடிக்க வேண்டியது. கிடைத்த அந்த வாய்ப்பு கோவிட் சூழல் காரணமாகக் கைநழுவிப்போனதாம். ஆனாலும் அஜித் ரசிகையான இவர் முதல் நாள் படத்தைப் பார்த்துவிட்டார்.

***

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

திடீரென ஆங்கர் அவதாரம் எடுத்திருக்கும் நடிகருக்கு ஊதியமாக வாரம் ஒன்றுக்கு ஒன்றரைக் கோடி பேசப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.