பவர் பாண்டி முதல் புரூஸ் லீ வரை..! - பூஜை விடுமுறைக்கு சின்னத்திரையில் என்னென்ன படங்கள்..! | These are the movies for pooja holidays in tamil channels

வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (27/09/2017)

கடைசி தொடர்பு:13:41 (27/09/2017)

பவர் பாண்டி முதல் புரூஸ் லீ வரை..! - பூஜை விடுமுறைக்கு சின்னத்திரையில் என்னென்ன படங்கள்..!

எந்த ஒரு பெரிய பண்டிகை வந்தாலும் தியேட்டரில் என்னென்ன படங்கள் ரிலீஸாகிறது என்பதை தெரிந்துக்கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அதேபோன்ற ஆர்வம், சின்னத்திரையில் என்னென்ன படங்கள் ஒளிபரப்புகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்வதிலும் காட்டுகிறார்கள். வரும் ஆயுதபூஜை விடுமுறை நாள்களில் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் படங்களின் பட்டியல் இதோ... 

விஜய் டிவி:

விஜய் டிவி

'அடிக்கடி ஒரே படத்தை போடாதீங்க பாஸ்' என விஜய் டிவியை சமூக வலைதளங்களில் சிலர் கலாய்த்தாலும், பண்டிகை என வந்துவிட்டாலும் புதுப்படங்களை தேர்வு செய்வதில் விஜய் டிவி கில்லி. அந்த வரிசையில் பூஜை விடுமுறைக்கு ஜீவா நடித்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, நடிகர் தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ ஆகிய இரு புதுப்படங்களும் உதயநிதி நடித்த ‘சரவணன் இருக்க பயமேன்’, விஜய் நடித்த ‘துப்பாக்கி’, விஷ்ணு விஷால் நடித்த ‘குள்ளநரிக்கூட்டம்’ ஆகிய படங்களையும் ஒளிபரப்புகின்றனர். 

ஜெயா டிவி:

ஜெயா டிவி

இந்த முறை ஜெயா டிவியில் புது படங்கள் எதுவும் ஒளிபரப்பாகவில்லை. இந்த விடுமுறைக்கு நான்கு படங்களை ஒளிபரப்புகிறார்கள். அவை நான்கும் ஏற்கெனவே இவர்கள் ஒளிபரப்பிய படங்கள்தான். விக்ரம் நடித்த ‘ஐ’, சூர்யா நடித்த ‘24’, மாதவன் நடிப்பில் உருவான ‘இறுதிச்சுற்று’ மற்றும் விஜய் நடித்து மோகன் ராஜா இயக்கிய ‘வேலாயுதம்’ ஆகிய நான்கு படங்களும் நான்கு நாள்களுக்கு ஒளிபரப்ப உள்ளனர்.

ஜி தமிழ்:

ஜி தமிழ்

வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள், புதுபுதுப் படங்கள் என ரசிகர்களின் லைக்ஸை அள்ளிவரும் ஜி தமிழ், பூஜை விடுமுறைக்கும் பல படங்களுடன் படையெடுத்து வருகிறது. சமுத்திரக்கனி இயக்கி  நடித்த ‘தொண்டன்’, விஜய் ஆண்டனி நடித்த ‘எமன்’, ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ் லீ’, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான‘ சிவலிங்கா’, அமீர்கான் நடித்து உலகமெங்கும் வசூலை குவித்த ‘டங்கல்’, சிவ கார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ என கலவையான காம்போவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளனர். 

கலைஞர் டிவி:

nayanthara

2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான திரைப்படம், ‘புதிய நியமம்’. ஏகே சஜன் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா இருவரும் இணைந்து நடித்த இந்தப் படம், நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான அந்த மாநில விருதையும் பெற்று தந்தது. வாசுகி என்கிற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்ட இந்தப் படத்தை தமிழில் டப் செய்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பவுள்ளனர். ‘புதிய நியமம்’ படத்தின் தமிழ் வெர்ஷன் தியேட்டரில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோக ஜீவா நடித்த ‘கோ’, அனுஷ்காவின் ‘அருந்ததி’, ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான ‘சிவாஜி’ என இவர்கள் ஏற்கெனவே ஒளிபரப்பிய படங்களையும் பூஜை விடுமுறைக்கு  ஒளிபரப்புயுள்ளனர். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close