Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நம்புங்க... எனக்கு நிச்சயதார்த்தம் ஆகலை. அந்தப் பொண்ணு...!" - 'பிக்பாஸ்' ஆரவ்

 

 

 

பிக் பாஸ்' வீடு, அந்த வீட்டில் வசித்தவர்களுக்கு மட்டுமன்றி, நமக்கும் பல்வேறு பாடங்களைக் கற்பித்து, நூறு நாள்களைத் தற்போது நிறைவு செய்துள்ளது. 'பிக் பாஸ்' டைட்டில் வின்னரான ஆரவ், அந்த 100 நாள் அனுபவம் குறித்துப் பேசினார். 

ஆரவ்

என் சொந்த ஊர் திருச்சி. படிச்சு முடிச்சு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தேன். ஆனால், எனக்கு சின்ன வயசிலிருந்து நடிப்பு மேல ஆர்வம். அதனால், வேலையை விட்டுட்டு மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். சினிமாவில் நடிக்க கிடைச்ச வாய்ப்புகள் சொல்லிக்கிற மாதிரி இல்லைன்னாலும், எனக்குப் பிடிச்ச தொழிலில் இருக்கும் திருப்தி. அப்போதான் 'பிக் பாஸ்' வாய்ப்பு கிடைச்சது. 100 நாள் இருப்போம்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை'' என்கிற ஆரவ், 'பிக் பாஸ்' தோழிகளைப் பற்றி பகிர்கிறார். 

''பிக் பாஸ்' வீட்டிலிருந்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் எனக்கு முக்கியமானவங்க. வையாபுரி அண்ணன் மற்றும் ஷக்தி அண்ணனிடமிருந்து நான் கத்துக்கிட்டது ஏராளம். ஹரிஷும், கணேஷ் ப்ரோவும் என் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்ல இடம்பிடிச்சுட்டாங்க. தோழிகள் எல்லாருமே ஒவ்வொரு வகையில் எனக்கு சப்போர்ட்டிவா இருந்தாங்க. அவங்க எல்லாரையும் பத்தி ஒவ்வொரு வரில சொல்லணும்னா, சுஜா - வில் பவர். நமீதா மேடம் - ஃபன், காயத்ரி மாஸ்டர் - எனர்ஜி. ஓவியா - ஹைபர் எனர்ஜி, ரைசா - ஃபன், காஜல் - டான், பிந்து மாதவி - குளோஸ் ஃப்ரெண்ட்... இதுதான் என் ஃப்ரெண்ட்ஸுக்கு நான் கொடுக்கும் ஒன்லைன் கேப்ஷன். முதல் 50 நாளில் இருந்ததைவிட கடைசி நாள்களில் எல்லாருமே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு சந்தோஷமா இருந்தோம். 

ஆரவ்

'பிக் பாஸ்' முடிஞ்சதும், சென்னையிலேயே கொஞ்ச நாள் இருக்கவேண்டிய கட்டாயம். அதனால், அம்மா, அப்பாவை உடனடியா மீட் பண்ண முடியல. அம்மாகிட்ட போனில் பேசினேன். அவங்க 'ஹலோ'னு சொன்னதுமே, என் கண்ணு கலங்கிடுச்சு. பேச ஆரம்பிச்சதும், அம்மா சொன்ன முதல் வார்த்தை, 'எப்போ வீட்டுக்கு வருவே?' என்பதுதான். எனக்கு அக்கா, ஒரு அண்ணன் இருக்காங்க. நான்தான் வீட்டுல கடைசி பையன். அதனாலேயே ரொம்ப செல்லம். வீட்டுல உள்ளவங்க சப்போர்ட் இல்லைன்னா என்னால நிச்சயம் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது'' என்கிற ஆரவ், ஓவியா குறித்துப் பேசினார். 

''ஓவியா எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவங்க மேல எந்த ஒரு ஈர்ப்பும் எனக்கு வந்ததேயில்ல. அதை அவங்களுக்குப் புரியவைக்க ரொம்ப முயற்சி பண்ணினேன். மக்கள் விரும்பினால், ஓவியாவோடு சேர்ந்து படத்தில் நிச்சயம் நடிப்பேன். நான் மாடலா இருக்கும்போது, வாய்ப்புக்காக நிறையப் பேரைச் சந்திச்சிருக்கேன். ரொம்ப கஷ்டப்பட்டுதான் சினிமாவில் நுழைஞ்சேன். நிறைய நாள் பட்டினியா இருந்திருக்கேன். 'மருத்துவ முத்தம்' என்னோட பெயரை எவ்வளவு கெடுத்தாலும், அது எந்தச் சூழ்நிலையில் நடந்துச்சுனு எனக்குத் தெரியும். என் அம்மாவுக்கும் நான் தப்பு பண்ணிருக்க மாட்டேன்னு புரியும். அதனால்தான் அதுபற்றி என்கிட்ட ஒரு வார்த்தைகூட கேட்கலை. அவங்க நம்பிக்கையை நான் எப்பவுமே கெடுக்க மாட்டேன். இப்போவரை நான் யாரையுமே லவ் பண்ணவும் இல்லை. நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவும் இல்லை. 'பிக் பாஸ்' வீட்ல நான் என்கேஜ்டுனு சொல்லியிருந்தா, அது ஓவியாவை தவிர்க்கிறதுக்கான ஐடியாவா இருந்திருக்கும். இப்போ, நானும் ஒரு பொண்ணும் இருக்கும் ஃபோட்டோ வைரலாகிட்டிருக்கு. அந்த ஃபோட்டோவில் இருக்கும் பொண்ணு என்னோடு மாடலிங் பண்ணினவங்க அவ்வளவுதான். ஒருவேளை எனக்கு யார் மேலயாச்சும் லவ் வந்தால், கண்டிப்பா மீடியாக்கள்கிட்ட சொல்வேன். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஜெயிச்ச 50 லட்சத்தில் விவசாயிகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்கும் உதவுவேன். சீக்கிரமே, வெள்ளித்திரையில் நாயகனா என்னைப் பார்க்கலாம்'' என மகிழ்ச்சி ததும்பப் பேசிமுடித்தார் ஆரவ்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்