Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓவியா அக்காவைப் பிடிச்சது... ஆனா ஜூலி அக்கா..! - 'குட்டி ஓவியா' மிருதுளா ஶ்ரீ #Oviya

ள்ளே நுழைந்த ஓரிரு நொடிகளிலேயே தனது குறும்பான பேச்சால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துவிடுகிறாள் மிருதுளா ஶ்ரீ (குட்டி ஓவியா). அலுவலகத்தில் இருந்தவர்களோடு செஃல்பி, ஆளுக்கு ஒரு பட்டப் பெயர் வைப்பது என நொடிக்கு நொடி அமர்க்களம். 'குட்டிமா சேட்டைப் பண்ணாதே' என்ற அம்மாவிடம், 'எனக்குத் தெரியும்... நீங்க ஷெட்டப் பண்ணுங்க' என குறும்பாகச் சொல்லிவிட்டு துறுதுறுவென ஓட ஆரம்பித்தவளைப் பாய்ந்து பிடித்து, இருக்கையில் அமரவைத்து அரும்பாடுபட்டு எடுத்த பேட்டி... 

குட்டி ஓவியா

''குட்டிமா என்ன படிக்கறீங்க?'' 

''நான் செகன்ட் ஸ்டாண்டர்டு 'ஏ' செக்‌ஷன் படிக்கறேன். வீட்டிலேயே டான்ஸ் கத்துக்கறேன்.'' 

''உங்களுக்கு நடிக்கறது ரொம்ப பிடிக்குமா?'' 

''ரொம்ப ரொம்ப பிடிக்கும். நடிச்சுட்டே இருந்தாதானே எல்லாரும் என்கூட செல்ஃபி எடுத்துப்பாங்க. அதனால்தான் நடிக்கறது பிடிக்கும்.'' 

''எப்படி டயலாக்கை ஞாபகம் வெச்சுப் பேசறீங்க?'' 

''அம்மா முதல்ல சொல்லுவாங்க. நான் அவங்க பின்னாடியே சொல்வேன். ரெண்டு தடவை இதேமாதிரி சொல்வேன். அப்புறம் நானே சொல்லிடுவேன்.'' 

''படிப்புல மிருதுளா எப்படி?'' 

''அக்கா, நான் எல்லாப் பாடத்துலேயும் 98 மார்க் எடுப்பேன். அதனால்தான் நான் ஸ்கூலுக்கு லீவுப் போட்டாலும் மிஸ் என்னைத் திட்டவே மாட்டாங்க.'' 

'' 'கிங்ஸ் ஆஃப் காமெடி' புரோகிராமில் நீங்க யாருடைய செல்லம்?'' 

''ரம்பா மேமுக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும். ஷூட்டிங் ஸ்பார்ட்ல எப்பவும் எனக்கு முத்தமும் சாக்லெட்டும் கொடுத்துட்டே இருப்பாங்க.'' 

'' 'பிக் பாஸ்' பார்த்திருக்கீங்களா?'' 

''தினமும் பார்த்தேன். அங்கே எல்லாரும் பேசிக்கிட்டு விளையாடிட்டு இருப்பாங்களா... பார்க்கறதுக்கு ஜாலியா இருக்கும்.'' 

குட்டி ஓவியா

''பிக்பாஸ்ல யாரை உங்களுக்குப் பிடிக்கும்?'' 

''ஓவியா அக்காவை ரொம்பப் பிடிக்கும். அவங்க எல்லார்கிட்டெயும் அன்பாகப் பேசினாங்க. அதனால்தான் ஓவியா அக்காவைப் பிடிச்சது. ஆனா, ஜூலி அக்கா... ம்ஹும்'' 

''ஓவியா அக்காவோடு டான்ஸ் ஆடுனீங்களாமே...'' 

''ஆமாம்! நானும் ஓவியா அக்காவும் சேர்ந்து ஃபைனல்ல 'கொக்கு நெட்டை கொக்கு' பாட்டுக்கு டான்ஸ் ஆடுனோம். ஆனால், அது டிவி-யில் வரவே இல்லே.'' 

''அவங்க உங்ககிட்ட என்ன சொன்னாங்க?'' 

'' 'நீ ரொம்ப க்யூட்டா இருக்கே'னு சொன்னாங்க. என் கன்னத்துல கிஸ் பண்ணிட்டு தூக்கி இடுப்பில் வெச்சுக்கிட்டாங்க.'' 

''ஓவியா அக்காவைப் பார்த்துதான் இந்த ஹேர்ஸ்டைல் வெச்சீங்களா?'' 

''இல்லே... இது அம்மாவும் அப்பாவும் கூட்டிட்டு போய் பண்ணினது. எனக்கு அப்புறம்தான் என்னை மாதிரி ஓவியா அக்கா ஹேர்கட் பண்ணிக்கிட்டாங்க.'' 

''டப்ஸ்மாஷ் பண்றீங்களே பிடிச்சிருக்கா?'' 

 

 

''ஆமா! நிறைய பேர் என் டப்ஸ்மாஷ் பார்த்துட்டு சூப்பரா இருக்குன்னு பாராட்டுவாங்க.'' 

குட்டி ஓவியா

''உங்களை எல்லாரும் குட்டி ஓவியானு கூப்பிடறது தெரியுமா?'' 

''என்னை அப்படி கூப்பிடறது ஜாலியா இருக்கு. ஓவியா அக்காவே என்னை குட்டி ஓவியானுதான் கூப்பிட்டாங்க. எனக்கு அந்த பெட் நேம் நல்லா இருக்குனு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க.'' 

''ஸ்கூல்ல மிருதுளா அமைதியான பொண்ணா, சேட்டைக்காரப் பொண்ணா?'' 

''நான் ரொம்ப அமைதியா இருப்பேன். மிஸ் என்னை திட்டவே மாட்டாங்க. பாசமா பார்த்துப்பாங்க.'' 

''உங்களுக்கு ஃபாய் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்களா?'' 

''எனக்கு ஒன்லி கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான். பாய்ஸ்கூட பேச மாட்டேன்.'' 

''வருங்காலத்தில் என்ன ஆகணும்னு ஆசை?'' 

''காமெடியனா ஆகறதுதான் என் ஆசை. காமெடியனா இருந்தாதான் நிறைய பந்துவெச்சு விளையாட்டு காட்டி எல்லாரையும் சிரிக்கவைக்கலாம்.''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்