Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“கனடால ஆங்கரிங், பிக்பாஸ் ஷேரிங்!” ‘மிஸ் மிஸ்’ குட்டி பூஜா

'ஜோடி நம்பர் 1' டைட்டில் வின்னரை (சீசன் 1) ஞாபகம் இருக்கா மக்களே... புன்னகையால் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த குட்டி பூஜா. குழந்தைக் குறும்போடு சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருந்தவர். திருமணம் முடிந்த கையோடு சின்னத்திரைக்கு 'டாட்டா' சொல்லிவிட்டு சென்றவர், கனடாவில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். அவரை அலைபேசியில் பிடித்து, 'ஹலோ நலமா?' எனக் கேட்டோம். 

குட்டி பூஜா

''வாவ்... என்னையெல்லாம் இன்னும் ஞாபகம் வெச்சிருக்கீங்களா? என்னது பேட்டி வேணுமா? பாருய்யா இந்த பூஜாவுக்கு கிடைச்ச பெருமையை! 2002-ம் வருஷம் 'அண்ணாமலை' சீரியல் மூலமா சின்னத்திரையில் நுழைஞ்சேன். 'ஜோடி நம்பர் 1' என்னை மக்களிடம் அவங்க வீட்டுப் பொண்ணாக மாத்திச்சு. தொடர்ந்து நிறைய சீரியல்ஸ் பண்ணினேன். இன்னொரு பக்கம் வீட்டுல கல்யாணப் பேச்சு நடந்துட்டிருந்துச்சு. 'அழகி', 'முந்தானை முடிச்சு' போன்ற சீரியல்களில் நடிச்சுட்டிருந்தேன். கல்யணம் முடிஞ்சதும் சீரியலுக்கு குட்பை சொல்லிட்டு கணவரோடு கனடா வந்துட்டேன். இப்போ எங்களுக்கு ரெண்டு குட்டி இளவரசிகள் இருக்காங்க. முதல் இளவரசி, நான்காம் வகுப்பு படிக்கிறாள். அடுத்த இளவரசிக்கு இரண்டரை வயசாகுது'' என்கிறபோதே, குட்டி பாப்பாவின் அழுகை குரல் கேட்க, 'ஒரு நிமிஷம்' என்றபடி குழந்தையைச் சமாதானம் செய்கிறார்.

குட்டி பூஜா

“அவளைப் பற்றி சொன்னதும் குரல் கொடுக்க ஆரம்பிச்சுட்டா. சொல்ல மறந்துட்டேன். நான் என் புரொபஷலை விட்டுடலை. கனடாவில் டிவி தொகுப்பாளி, ஆர்ஜே எனப் பகுதி நேரமாக செஞ்சுட்டுதான் இருக்கேன். இங்கே இருக்கிற தமிழ் ரசிகர்கள், வெலியில் பார்க்கும்போதெல்லாம் 'நீங்கதானே குட்டி பூஜா?'னு கேட்பாங்க. இவ்வளவு தூரம் நம்ம முகம் ரீச் ஆகியிருக்கானு சந்தோஷப்படுவேன். ரியாலிட்டி ஷோவுல முகம் காட்டினா அதோட ரீச் எப்படியிருக்கும்னு கனடா வந்தபிறகு தெரிஞ்சுகிட்டேன். என் பெரிய மகள்கிட்டே இப்பவே நடிப்புக்கான அறிகுறி தென்படுது. ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு க்யூட்டா செய்யறா. அவளுக்கு இயல்பாக ஆர்வம் இருந்தால், நடிக்க விடுவோம். என் கணவரும் தடையா இருக்க மாட்டார். 

ஒரு விஷயம் தெரியுமா? 'ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சியில் கலந்துக்கறதுக்கு முன்னாடி வரை நான் டான்ஸ் கிளாஸ் போனதில்லே. நிகழ்ச்சிக்கு முன்னாடி சொல்லிக்கொடுக்கும் ஸ்டெப்பை ஆடினேன். டைட்டில் வின்னரானதும் எனக்கே ஷாக்கிங்கா இருந்துச்சு. டான்ஸ் கிளாஸ் போனதில்லேன்னு சொன்னா இப்போ வரைக்கும் யாரும் நம்பவே மாட்டேங்கறாங்க. என் முதல் பெண்ணை டான்ஸ் கத்துகட்டுமேனு சேர்த்துவிட்டேன். ஆனால், அவளுக்கு ஆர்வம் இல்லை. அதனால், நிறுத்திட்டேன். டிராயிங், ஸ்விம்மிங் கிளாஸுக்கு விரும்பி போயிட்டிருக்கிறாள்'' என்று குழந்தைகள் பெருமை பேசிய பூஜா தொடர்ந்தார். 

குட்டி பூஜா

“கனடாவில் இருந்தாலும் தமிழ் சீரியல்ஸ், ஷோ எல்லாம் தொடர்ந்து பார்த்துட்டிருக்கேன். 'பிக் பாஸ்' அடிமை நான். அந்த ஹேங் ஓவரிலிருந்து வெளியில் வர்றதுக்கு ரொம்ப நாள் ஆச்சு. சீரியலுக்கு நான் பிரேக் விட்டப்போது கமிட் ஆகியிருந்த சீரியல்கள், ரியாலிட்டி ஷோ என ரொம்பவே மிஸ் பண்றேன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'மிசஸ் சின்னத்திரை' ஷோவில் இருக்கும் பாதி பேர் என் நண்பர்கள்தான். இந்தியாவில் இருந்திருந்தால் நானும் கலந்துக்கிட்டு பின்னி எடுத்திருப்பேன். இன்னும் மூணு மாசத்தில் குழந்தையின் ஸ்கூல் லீவு வருது. அப்போ, சென்னைக்கு வருவோம். ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து ஊரெல்லாம் சுத்துணும். பயங்கர பிளானோடு இருக்கேன். அப்போ, சந்திப்போம்'' என்கிற குட்டி பூஜா குரலில் ஒரு டன் உற்சாகம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?