Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெயர்க்காரணம், ஓட்டு வீடு, மெக்கானிக் ஷெட், ஆர்டிஸ்ட் தேர்வு... 'திருமதி செல்வம்' பற்றிய 10 ரகசியங்கள்! #10yearsofThirumathi Selvam

அபிதா

மிழ் சீரியல் வரிசையில் சாதனை படைத்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த தொடர், 'திருமதி செல்வம்'. 2007 நவம்பர் 5-ம் தேதி சன் டி.வியில் ஆரம்பித்தது. மதிய நேரத்தில் ஒளிபரப்பான இந்த சீரியல் பிறகு, மக்களின் வரவேற்பால் பிரைம் டைமான இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாக ஆரம்பித்தது. தொடர்ந்து ஐந்து வருடங்கள், ரசிகர்களைக் கட்டிப்போட்டது. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் மாபெரும் ஹிட் அடித்த 'திருமதி செல்வம்' சீரியலுக்கு இந்த நவம்பர் ஐந்தாம் தேதி, பத்தாம் ஆண்டு. திருமதி செல்வம் சீரியலின்போது சந்தித்த சுவாரஸ்ய விஷயங்களைப் பத்து கேள்விகளில் பகிர்கிறார், இயக்குநர் எஸ்.குமரன். 

குமரன்''பெண் பெயர்களே தலைப்பாக வந்துகொண்டிருந்தபோது, 'திருமதி செல்வம்' என பெயர் வைக்க காரணம்... 

''கதைப்படி கணவன், மனைவி இருவருமே குடும்பத்துக்காகக் கஷ்டப்பட்டு உழைப்பவர்கள். அதனால், டைட்டிலிலும் இருவரும் சேர்ந்து இருக்கட்டும் என நினைத்தேன். ஆண்களின் உழைப்பு, வலியையும் பதிவுசெய்ய வேண்டும் என்பது முக்கிய நோக்கம். ' 

''இந்த சீரியலின் ஒன்லைன் ஸ்டோரியைப் பிடித்தது எப்படி?'' 

''ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இப்படி ஒரு குடும்பத்தைப் பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால், என் அப்பா, அம்மாவின்  கதைதான் இது. மேலும், என்னைச் சுற்றியுள்ள, என்னைப் பாதித்த மனிதர்களையே கதாபாத்திரமாக மாற்றினேன். அதுதான் மக்களிடம் மிக நெருக்கமாகச் சென்றடைந்தது. 2007-ல் ஆரம்பித்து 2013-ம் ஆண்டு நிறைவடைந்தது.'' 

திருமதி செல்வம்

'' 'திருமதி செல்வம்' சீரியலின் ஒன்லைன் ஸ்டோரி பற்றி கொஞ்சம் ரீவைன்ட் பண்ணுங்களேன்...'' 

''ஓர் ஆணும் பெண்ணும் படிக்காதவர்கள். குடும்பத்துக்காக உழைப்பவர்கள். இருவரும் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தின் முன்னேற்றத்துக்காக கொடுக்கும் உழைப்பு, சந்திக்கும் சோதனைகளே கதை. முக்கியமாக, ஒரு மெக்கானிக் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அசலாகப் பிரதிபலித்தது என்று நம்புகிறேன்.'' 

''அந்த கதாபாத்திரங்களுக்கு அபிதா மற்றும் சஞ்சீவ் சரியான தேர்வாக இருப்பார்கள் என எப்படித் தோன்றியது?'' 

''எனக்கு 'திருமதி செல்வம்' சீரியலுக்கு முன்பே சஞ்சீவை நன்றாகத் தெரியும். அந்தச் சமயத்தில் சஞ்சீவ் வில்லனாகக் கலக்கிக்கொண்டிருந்தார். அவர், பாசிட்டிவ் ரோலில் நடித்தால், அதுவும் மெக்கானிக் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும்னு நினைச்சேன். 'நான் இந்த கேரக்டருக்கு செட் ஆவேனா?'னு தயங்கினார். ஆனால், அவர்தான் டெடிகேட்டிவ்வான ஆள் என எனக்குத் தெரியும். அதனால், 'நீங்கதான் பண்றீங்க'னு சொல்லிட்டேன். அபிதாவும் அதேமாதிரியான குணம் மற்றும் பாவனை இருக்கறவங்க. குறைவான மேக்கப், சாதுவான முகம் என அவரை மாற்றியபோது ஆரம்பத்தில் தயங்கினார். தங்கள் நடிப்புக்கான வரவேற்பைப் பார்த்துவிட்டு சந்தோஷமாக நடிக்க ஆரம்பிச்சாங்க.'' 

''ஐந்து வருடக் கதையை இரண்டரை மணி நேரத்தில் சொல்லி ஓகே வாங்கினீங்களாமே...'' 

''ஆமாம். விகடன் எம்.டி சீனிவாசன் மற்றும் அவர் மனைவியிடம் ஒரே மூச்சில் சொல்லி முடிச்சேன். 'இந்தக் கதையை நாம நிச்சயம் பண்றோம். ஸ்கிரீன் பிளே பண்ணுங்க'னு சொல்லிட்டாங்க. ஐந்து எபிசோடை ஏற்கெனவே ஸ்கிரீன் பிளே பண்ணி வெச்சிருந்தேன். அதை அவரிடம் காட்டிட்டு, விறுவிறுனு வேலையை ஆரம்பிச்சுட்டேன்.'' 

திருமதி செல்வம்

''ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மறக்கமுடியாத விஷயங்கள்...'' 

''சீரியலின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வடிவமைச்சதுதான். ஒவ்வொரு நடிகர்களின் நிஜப் பெயரும் மறந்து, சீரியல் பெயரே மக்கள் மனதில் பதிஞ்சதைப் பெரிய வெற்றியா நினைக்கிறேன். கதையை வடிவமைச்சதும் நான் தேடினது, பெரிய மெக்கானிக் செட் மற்றும் பழைய ஓட்டு வீடுதான். அதுவும் பக்காவாக அமைஞ்சது. சவாலான ஆர்ட்டிஸ்டான வடிவுக்கரசி அவர்களும், அவருக்குக் கொடுத்த ரோலில் பின்னி எடுத்தாங்க. ஒவ்வொரு ஆர்ட்டிஸ்டுமே அர்ப்பணிப்போடு குடும்பமாகவே மாறி நடிச்சாங்க.'' 

''நவம்பர் 5 அன்று டெலிகாஸ்ட் ஆரம்பிச்சதுக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?'' 

''காரணம் எதுவும் பெருசா இல்லே. அந்த வருடம் தீபாவளிக்கு கொஞ்ச நாள் முன்னாடி டெலிகாஸ்ட் ஆரம்பிச்சது. தீபாவளி நாளிலிருந்து மக்கள் விரும்பிப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த நாள் எங்களுக்குத் தானாகவே அமைஞ்சது.'' 

''நான்குக்கு மேற்பட்ட தமிழ்நாடு ஸ்டேட் அவார்டு உள்பட 25 அவார்ட்ஸ் இந்தத் தொடருக்கு கிடைச்சதை எப்படி ஃபீல் பண்றீங்க?'' 

''உழைப்புக்கு கிடைச்ச அங்கீகாரம்தான். முன்னாடி சினிமாவில் இப்படி அமையும். பத்து வருடங்களாக ஒரே நிறுவனம், டைரக்டர், ரைட்டர், சினிமோட்டோகிராஃபர், ஸ்கிரீன்பிளே என மாறாமல் இருக்கும். பிறகு, சின்னத்திரையில் இப்படி ஒரு காம்பினேஷன் 'திருமதி செல்வம்' சீரியலில் அமைஞ்சது. அதுதான் அத்தனை வெற்றிக்கும் காரணம். சினிமோட்டோகிராஃபர் மார்ட்ஸ், ரைட்டிங், ஸ்கிரீன்பிளே - அமிர்தராஜ், அமுல்ராஜ் போன்றவர்கள் தூணாக நின்றார்கள்.'' 

''1360 எபிசோடு வரை ஒளிபரப்பான இந்த சீரியலுக்கான ஓப்பனிங் தீம் பற்றி...'' 

''இந்த சீரியலுக்கான பாடல் இசைக்காக இமான் சாரைச் சந்தித்தேன். அவர் ஏற்கெனவே ஒரு டியூன் போட்டு வெச்சிருந்தார். அதைக் கேட்டதுமே பிடிச்சுப்போச்சு. யுகபாரதி பாடல் வரிகளை எழுத, ஸ்வேத்தா மோகன் பாடினாங்க. அந்தப் பாடல் பலரை ரசிக்கவைத்தது. தொடர்ந்து யுகபாரதிதான் மூன்று சீரியலுக்கும் பாடல் எழுதினார்.'' 

'' 'திருமதி செல்வம்' சீரியல், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் டெலிகாஸ்ட் ஆனது எப்படிச் சாத்தியமாச்சு? 

''இந்தக் கதையின் தேர்வு அப்படி. இந்தியா முழுக்க லோயர் மிடில் கிளாஸ் இப்படித்தான் இருக்காங்க என்பதால், எல்லா மொழி மக்களையும் கவர்ந்துடுச்சு. 'தோனி' படத்தில் நடித்த ஹீரோதான், ஹிந்தி திருமதி செல்வம் சீரியலின் ஹீரோ. அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகையையே திருமணமும் செய்து கொண்டார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்