வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (23/11/2017)

கடைசி தொடர்பு:19:19 (23/11/2017)

''கோர்ட்ல கேஸ் இருக்கு... நல்லபடியா தீர்ப்பு வரும்'' - நடிகை மதுமிதா

மதுமிதா

'ஓ.கே ஓ.கே' படம் மூலம் 'தேனடை மதுமிதா' எனப் பிரபலமானவர் மதுமிதா.  'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஞ்சனா 2', 'புலி', 'சரவணன் இருக்க பயமேன்' எனப் பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல், ராஜ் டி.வியில் 'ஊர் வம்பு' என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருவதோடு, 'சின்னப் பாப்பா பெரிய பாப்பா' போன்ற சீரியல்களிலும் நடித்தவர். இப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் காமெடி நடிகைகளின் வரிசையில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் மதுமிதாவின் பெயர் சமீபத்தில் அடிபட்டது, பக்கத்து வீட்டுப் பெண்ணுடனான பிரச்னையில்... 

பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் ஏற்பட்ட வாய்த் தகராறு ஒருகட்டத்தில் முற்றி, கைகலப்பாகி அந்தப் பெண்ணின் கையை மதுமிதா கடித்தார் என்று செய்தி வெளியானது. இதுகுறித்து விசாரித்தபோது, ' எங்கள் குடியிருப்பில் வசிக்கும் உஷா என்பவர் எங்களுக்குக் கொடுத்த டார்ச்சர் அதிகரித்து வந்தது. அதனால், குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லாரும் சேர்ந்து மீட்டிங் போட்டு உஷாவிடம் பேசினோம். அதற்குப் பிறகும் அவருடைய டார்ச்சர் நின்றபாடில்லை. அதனால்தான் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தோம். அதன் பேரில் போலீஸார் எங்கள் குடியிருப்புக்கு வந்து விசாரித்தார்கள். அப்போது கூட போலீஸாரின் முன்னிலையில் உஷா என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்துக்குமேல் என்னைத் தாக்க ஆரம்பித்தார். சுற்றியிருந்த பல பேர் தடுத்தும் அவர் நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவரிடமிருந்து என்னை தற்காத்துக் கொள்வதற்காகவே அவர் கையைக் கடிக்க வேண்டியதிருந்தது. அதுதான் பரபரப்பாகப் பேசப்பட்டது' என்று அப்போது விளக்கம் அளித்திருந்தார் மதுமிதா. 

இப்போது எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவருடன் பேசினேன். 

''இப்போது என்னென்ன படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?'' 

'எனக்குத் தொடர்ந்து படப்பிடிப்பு இருந்துட்டு இருக்கு. விக்ரம் சார் நடிக்கும் 'ஸ்கெட்ச்', கெளதம் கார்த்திக்  நடிக்கும் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து', ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 'குப்பத்து ராஜா' போன்ற படங்களில் காமெடி ரோல் பண்ணிட்டிக்கேன்''. 

''இன்னும் அதே வீட்டில்தான் இருக்கிறீர்களா அல்லது வேறு வீட்டில் குடியேறியிருக்கிறீர்களா?''

''நான் ஏங்க அந்த வீட்டை விட்டுப்போகணும்..? அது என்னுடைய சொந்த வீடு. நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வாங்கின வீடு. அப்படி நான் உழைச்சு வாங்கின வீட்டை, இந்த சண்டைக்காக நான் ஏன் காலி செய்துட்டுப் போகணும். கோர்ட்ல கேஸ் போட்டிருக்கேன். நல்ல தீர்ப்பா வரும்னு நம்பிக்கை இருக்கு. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு...'' 

''தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறீர்கள் போல?''

''ஆமாம். எனக்கும், பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குமான பிரச்னைப் பற்றிய விஷயம் முடிந்தது. கோர்ட்ல கேஸ் போட்டிருக்கேன். அதுபாட்டுக்கு நடந்துட்டு இருக்கு. அப்படி முடிஞ்சு போன விஷயத்தை ஏன் மறுபடியும் யோசிக்கணும். நான் எப்பவும் போல என்னுடைய வேலையைத் தொடர்ந்து செய்துட்டு இருக்கேன்.' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்