Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``செவிலியர்களின் போராட்டத்தில் கலந்துகொள்ள என்னைப் போலீஸார் அனுமதிக்கவில்லை!'' - ஜூலி

ஜூலி

விஜய் டி.வி 'பிக் பாஸ்' நிகழ்ச்சிமூலம் பிரபலமானவர்கள், தற்போது அவர்களுக்கான மீடியத்தில் பயணித்து வருகிறார்கள். அதில், குறிப்பிடத்தக்கவர், ஜூலி. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றவர், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பெரும் விமர்சனத்தைச் சந்தித்தார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. 'தொகுப்பாளராக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை' என 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அதற்கு சக போட்டியாளர்கள் விமர்சித்தது அனைவரும் அறிந்ததே. 'பிக் பாஸ்' முடிந்ததும், கலைஞர் டி.வி-யில், 'ஓடி விளையாடு பாப்பா' நடன நிகழ்ச்சியின் தொகுப்பாளராகக் களம் இறங்கினார். 'கலா மாஸ்டர் தந்துள்ள வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்துவேன்' எனவும் கூறியிருந்தார். ஒரு விளம்பரப் படத்திலும் தோன்றினார். 

''அந்த ஏழைப் பெண்ணுக்கு வாய்ப்பு அளிக்கணும்னு தோணுச்சு. அதனால், இந்த வாய்ப்பை வழங்கினேன். சொன்ன விஷயத்தை நல்லாவே உள்வாங்கி, சரியாப் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க'' என டான்ஸ் மாஸ்டர் கலாவும் ஜூலியைப் பாராட்டிப் பேசியிருந்தார். 

இந்நிலையில், ட்விட்டரில் நடிகர் விமலுடன் ஜூலி மேக்கப் மற்றும் மாலையுடன் இருக்கும் படம் நேற்று வெளியாகி வைரலானது. தற்போது, சென்னையில் நடந்துவரும் செவிலியர் போராட்டத்தில் கலந்துகொள்ளவும் சென்றிருக்கிறார். அந்தப் படங்களும் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. இதுகுறித்து கேட்பதற்காக ஜூலியைத் தொடர்புகொண்டோம். 

''ஹீரோயினாக நடிக்கப்போவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கிறதே...'' 

''அப்படியா, எனக்கு அதுபற்றி எதுவும் தெரியவில்லை.'' 

''நடிகர் விமலும் நீங்களும் இருப்பதுபோன்ற போட்டோ வெளியானது பற்றி...'' 

''இப்போதைக்கு அதுபற்றி பேச வேண்டாமே. அதுபற்றி பேச வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். மற்றபடி என் ரொட்டீன் வேலைகளைத் தொடர்ந்து செய்துட்டிருக்கேன்.'' 

ஜூலி

''தற்போது நடந்துவரும் செவிலியர்கள் போராட்டத்தில் செவிலியராக உங்களின் கருத்து?'' 

''செவிலியர் போராட்டத்தில் கலந்துகொண்டிருப்பவர்களின் நோக்கம் சரியானதுதான். ஒரு செவிலியராக என்னால் அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.'' 

''போராட்டத்தில் கலந்துகொண்டீர்களா?'' 

''அவர்களுக்கு எப்போதும் என் ஆரதவு உண்டு. அந்தப் போராட்டத்தில் ஆதரவளிக்கச் சென்றபோது, என்னை போலீஸார் உள்ளே விடவில்லை. செவிலியர்களைச் சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் உள்ளே விடாததால் திரும்பி வந்துவிட்டேன். இதற்கு மேல் பேச விருப்பமில்லை'' என்றதோடு முடித்துக்கொண்டார் ஜூலி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்