Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''வரன் பார்க்க ஆரம்பிச்சாங்க... அதான் ஹுசைனை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்!'' - மணிமேகலையின் காதல் கதை #VikatanExclusive

ன் மியூசிக் விஜேக்களுள் ஒருவர், மணிமேகலை. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் இவருக்கும், இவரது நெருங்கிய நண்பரான ஹுசைனுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட மணிமேகலை, தன் காதல் திருமணம் குறித்த அனுபவத்தைப் பகிர்கிறார். 

மணிமேகலை

''ஒரு நாள் யதார்த்தமா சன் மியூசிக்கில், லாரன்ஸ் மாஸ்டர் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் 'ஆடலுடன் பாடலைக் கேட்டு...' பாட்டைப் பார்த்துட்டிருந்தேன். அந்தப் பாட்டுல ஒரு பையன், லாரன்ஸ் மாஸ்டரோடு ஆடுவான். அவனுடைய டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. 'யாருப்பா இவன்? ரொம்ப நல்லா ஆடுறான். இவனைப் பாராட்டியே ஆகணும்'னு நினைச்சேன். நாம ஒரு முயற்சியில் இறங்கிட்டா முடிக்காமல் விடமாட்டோம்ல. எப்படியோ அங்கே இங்கே கேட்டு, அவன் நம்பரை புடிச்சுட்டேன். அவர், சினிமாவில் உதவி நடன இயக்குநரா இருக்கிறது தெரிஞ்சது. போன் பண்ணி 'செமையா ஆடுனீங்க?'னு பாராட்டினேன். நாம ஃபேமஸ் வீஜே. நம்மோடு கொஞ்ச நேரமாவது பேசுவாருனு எதிர்பார்த்தேன். ஆனா, 'நன்றிங்க' என ஒற்றை வார்த்தையில் கட் பண்ணிட்டார். அது ஆச்சர்யமா இருந்துச்சு. அவர் குணம் பிடிச்சுப்போச்சு. தொடர்ந்து நட்பா பேசிட்டிருந்தோம். 

அவருடைய பிறந்தநாள் சமயத்தில், ஒரு தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார். அவரைப் பார்க்கிறதுக்காக தனியாக காரிலேயே ஹைதராபாத் போயிட்டேன். அங்கே வெச்சு என் லவ்வை சொன்னேன். அப்போதான் அவருக்கு என் மேலே இரக்கமே வந்துச்சு. 'நாமும் அழகாதான் இருக்கோம்போல. நம்மளையும் ஒரு பொண்ணு லவ் பண்ணுது'னு ஓகே சொல்லிட்டார். அதுக்கப்புறம் எங்க லவ் ஸ்மூத்தா போய்ட்டிருந்துச்சு. 

மணிமேகலை

லவ் பண்ண ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே என் வீட்டுல நான் லவ் பண்றதை சொல்லிட்டேன். என் அப்பா என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. என் தம்பியைக்கூட கண்டுக்க மாட்டாங்க. நான் என்ன கேட்டாலும் வாங்கித் தந்துருவாங்க. ஆனா, நானும் ஹூசைனும் வேற, வேற மதம் என்பதால் கல்யாணத்துக்கு அப்பா ஒத்துக்கலை. அவர் மனசை மாற்ற எவ்வளவோ முயற்சி பண்ணினோம். ஒரு கட்டத்தில் எனக்கு வேற திருமண ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. 'எனக்கு நீ மட்டும் போதும். வேற எதுவும் தேவையில்லை'னு ஹூசைன் நம்பிக்கை கொடுத்தார். வீட்டைவிட்டு வந்து ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். 

இப்போ நான் ஹூசைன் வீட்டில்தான் இருக்கேன். என்னை அவங்க வீட்டுல உள்ளவங்க அவங்க பொண்ணு மாதிரி பார்த்துக்குறாங்க. ஹூசைன், குடும்பத்தின் மீது ரொம்ப அக்கறையா உள்ளவர். அதேமாதிரி என்னையும் நிச்சயம் நல்லா பார்த்துப்பார். நான் சந்தோசமா வாழறதைப் பார்த்து, என் அப்பா எங்களைப் புரிஞ்சுப்பாங்க. நான் எந்த முடிவு எடுத்தாலும் அது தப்பா இருக்காதுனு தெரியவரும். சீக்கிரமே எங்களை ஏத்துப்பாங்கனு நம்புறேன். இவ்வளவு தூரம் என் மேலே பாசமா இருந்த அப்பா, என்னுடைய காதலை ஏத்துக்கலையேனு வருத்தமாதான் இருக்கு. என் அப்பா மேலே நான் வழக்கு தொடுத்ததா சில வதந்திகள் போயிட்டிருக்கு. அது எதுவுமே உண்மை இல்லை. ஐ லவ் மை டாடி. 

மணிமேகலை

ஹூசைனும் நானும் ஒருத்தருக்கொருத்தர் புரிதலோடு வாழ்க்கையைத் தொடங்கியிருக்கோம். இந்தப் புரிதல் வாழ்நாள் முழுவதும் நிச்சயம் நிலைச்சிருக்கும். திடீர் கல்யாணம் என்பதால், யாரையும் கூப்பிட முடியலை. வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. அதேநேரம் எங்களை சோஷியல் மீடியாவில் திட்டிட்டு இருக்கிறவங்களுக்கும் நன்றி'' என்கிறார் மணிமேகலை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?