Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''தமிழ்நாட்டு சேலைதான் என் ஃபேவரைட்!'' - 'முள்ளும் மலரும்' தேஜஸ்வினி

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் 'முள்ளும் மலரும்' சீரியலில் மகாலட்சுமியாக அனைவரையும் கவர்ந்திழுப்பவர், தேஜஸ்வினி. தாய்மொழி கன்னடம் என்றாலும், தமிழில் இவருக்குத் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவருடன் ஒரு சந்திப்பு... 

 

''தமிழ் மக்களின் மனசில் மகாலட்சுமியாக நுழைந்திருக்கும் உங்களைப் பற்றி..'' 

''எங்க பூர்வீகம், மைசூர். நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே பெங்களூரில். நான், அப்பா, அம்மா, தம்பி... நாலு பேரும் சேர்ந்தா, மணிக்கணக்கா கலகலனு பேசிட்டிருப்போம். ஐ லவ் மை ஃபேமிலி.'' 

முள்ளும் மலரும் தேஜஸ்வினி

''இன்னும் தமிழ் பேச கத்துக்கலையா?'' 

''எனக்குத் தமிழ் பேசத் தெரியாது. ஆனா, பேசறதைப் புரிஞ்சுக்க முடியும். சீக்கிரமா பேசவும் ஆரம்பிச்சிருவேன். அதுக்கான முயற்சியை எடுத்துட்டிருக்கேன்.'' 

''சின்னத்திரைக்குள் நுழைஞ்சது எப்போ?'' 

''என் ஆசையே சிஏ பண்றதுதான். அதுக்காக, பிளஸ் டூ முடிச்சதும், பி.காம் குரூப் எடுத்தேன். பலருக்கும் மனசு ஓரத்தில் இருக்கும் நடிப்பு ஆசை எனக்கும் இருந்துச்சு. ஆனால், அது பெரிய கனவெல்லாம் கிடையாது. சரியா காலேஜ் முடிக்கும்போது, என் போட்டோக்களைப் பார்த்துட்டு கன்னட சீரியலில் நடிக்கக் கூப்பிட்டாங்க. சரி, வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கலாமேனு நினைச்சேன். அப்படித்தான் சீரியலுக்குள் நுழைஞ்சேன்.'' 

தேஜஸ்வினி

''இதுக்கு உங்க ஃபேமிலி சப்போர்ட் இருந்துச்சா?'' 

''என் அப்பா ஒரு டாக்டர். என்னையும் டாக்டரா பார்க்கணும்னு ஆசை. எனக்கோ சிஏ விருப்பம். எனக்காக டாக்டர் கனவை விட்டுக்கொடுத்திருந்தார். ஆனா, அதையும் செய்யாமல், என் கனவையும் விட்டுட்டு திடீர்னு மீடியாவுக்குப் போறேனு சொன்னது யாருக்கும் பிடிக்கலை. என் அம்மா மட்டுமே பக்கபலமா இருந்தாங்க. சீரியல்ல நடிச்சு ஸ்கிரீன்ல என்னைப் பார்த்ததுக்கு அப்புறம் அப்பாவும் கூலாகிட்டார்.'' 

'' 'முள்ளும் மலரும்' சீரியலில் நடிக்கும் அனுபவம் பற்றி...'' 

''தமிழில் 'வள்ளி' சீரியலில் ஒரு சின்ன கேரக்டர் ரோல் பண்ணியிருக்கேன். கன்னட சீரியலில் என் நடிப்பைப் பார்த்துட்டு, இந்த வாய்ப்பு வந்துச்சு. தமிழில் முதன்முதலா மெயின் ரோல் பண்றது, முள்ளும் மலரும் சீரியலில்தான்.'' 

''அடிக்கடி ஷாப்பிங் பண்ற பொருள் எது?'' 

''எனக்கு ஆன்லைன் ஷாப்பிங் ரொம்ப பிடிச்ச விஷயம். பெரும்பாலும் நேரில் போய் வாங்குறதைவிட ஆன்லைன்லதான் எனக்கு ஷூட்டாகும். அதிகமா ஷாப் பண்றது டிரெஸ். என் ஃபேவரைட் டிரெஸ், தமிழ்நாட்டுச் சேலைதான்.'' 

தேஜஸ்வினி

''மறக்கமுடியாத அனுபவம்...'' 

''பெங்களூரில் ஷாப்பிங் போயிருந்தேன். அங்கே வந்திருந்த தமிழ் ஆடியன்ஸ் என்னை அடையாளம் கண்டுபிடிச்சுட்டாங்க. 'நீங்கதானே முள்ளும் மலரும் சீரியலில் நடிக்கறீங்க?'னு பாராட்டினாங்க. அந்த நாளை எப்பவுமே மறக்கமுடியாது. தமிழ் ரசிகர்கள் அவங்க வீட்டு பொண்ணா என்னை ஏத்துக்கிட்டதை நினைக்கும்போது ஹேப்பியா இருக்கு.'' 

''லவ் புரொப்போசல்ஸ்...'' 

''எனக்கு நிறைய லவ் புரொப்போசல்ஸ் வந்திருக்கு. ஆனா, இப்போதான் 24 வயசாகுது. இன்னும் சாதிக்கவேண்டியது நிறைய இருக்கு. ஸோ, இப்போதைக்கு லவ் பண்ற எண்ணம் இல்லே.'' 

முள்ளும் மலரும் தேஜஸ்வினி

''எதிர்கால திட்டம் என்ன?'' 

''உண்மையைச் சொல்லணும்னா எந்த பிளானும் இல்லே. தமிழில் ஒரு சீரியல், கன்னடத்தில் ஒரு சீரியல்னு இப்போதைக்கு பிஸியா நடிச்சுட்டிருக்கேன். போகுற போக்கில் ஹேப்பியா வாழணும். சினிமா ஆஃபர் வருது. சீரியலில் நடிக்கவே நேரம் சரியா இருக்கிறதால் எந்த முடிவும் எடுக்கலை. அசத்துற மாதிரியான கதாபாத்திரம் அமைந்தால், சினிமாவுக்கு கிரீன் சிக்னல் கொடுப்பேன்.''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்