Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``இப்படிலாம் வீட்ல பண்ணா, கைல கிடைக்கிற பொருளாலயே அடிச்சுடுவாங்க!” ‘அழகு’ மெளனிகா

மெளனிகா


“ரியல் லைஃப்ல சத்தம் போட்டே பேச மாட்டேன். ஆனால், சீரியலில் பெரும்பாலும் நெகட்டிவ் ரோலாகவே கிடைக்குது. அதனால், ஒவ்வொரு நாள் ஷூட்டிங் அனுபவமும் சுவாரஸ்யமா போகுது” - உற்சாகமாகப் பேசுகிறார், மெளனிகா. சன் டிவி ‘அழகு’ சீரியலில் மனிஷா கேரக்டரில் நடித்துக்கொண்டிருப்பவர். 

“முதல் மீடியா வாய்ப்பு பற்றி...” 

“என் பூர்வீகம் ஆந்திரப்பிரதேசம். கல்யாணத்துக்குப் பிறகு சென்னையில் செட்டில் ஆனேன். சின்ன வயசிலிருந்து மீடியா ஆசை. சென்னை வந்ததும் அந்த ஆசை அதிகமாக, ஒவ்வொரு சேனலா வாய்ப்பு கேட்டு ஏறி இறங்கினேன். நிறைய ஏமாற்றங்கள். அதெல்லாம் முடியாத காலகட்டம். நிச்சயம் ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும்னு தொடர்ந்து அலைஞ்சேன். ராஜ் மியூசிக்ல வாய்ப்பு கிடைக்க, தொகுப்பாளினியா மீடியா பயணத்தைத் தொடங்கினேன்.” 

மெளனிகா

“தொகுப்பாளினி டு ஆக்டிங் பயணம் எப்படி?” 

“தொகுப்பாளினியா சில மாதங்கள் வொர்க் பண்ணினதும் அடுத்தக் கட்டத்துக்குப் போக நினைச்சேன். சீரியலுக்கு டிரைப் பண்ணினேன். சன் டிவியின் 'தேவதை' சீரியலில் வில்லி ரோல் கிடைச்சுது. தமிழ்த் தெரியாமல் நடிக்கிறது ஆரம்பத்தில் ரொம்பவே சிரமமா இருந்துச்சு. நிறைய டேக், திட்டு வாங்குவேன். ஒரு சவாலா எடுத்துகிட்டு, சில மாசத்திலேயே நல்ல தமிழ் உச்சரிப்போடு டயலாக் பேச ஆரம்பிச்சுட்டேன். 'வள்ளி', 'வம்சம்' உள்ளிட்ட பல சீரியல்கள் தேடி வந்துச்சு. எல்லாமே நெகட்டிவ் ரோல்.” 

“தற்போது நடிக்கும் ‘அழகு’ சீரியல் பற்றி...” 

“அம்மா இல்லாத, அப்பா மற்றும் ரெண்டு அண்ணன்களோடு வாழும் பெண். யார் பேச்சையும் கேட்காத, திமிர் பிடிச்ச கேரக்டர். என் கேரக்டரை ரொம்பவே ரசிச்சு நடிக்கிறேன். சமீபத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான காட்சி. எனக்கு காபி கொடுக்கும் அண்ணனிடம், 'எனக்கு ஃப்ரீயா காபி கொடுத்தாலும் பிடிக்காது; ஃப்ரீயா அட்வைஸ் பண்ணினாலும் பிடிக்காது'னு சொல்லிட்டு, காபி கப்பை கீழே போட்டு உடைச்சுடுவேன். அந்தக் காட்சியை ஆவேசமா நடிச்சு முடிச்சதும் பயங்கரமா சிரிச்சுட்டேன். 'இப்படி என் வீட்டுல பண்ணியிருந்தால், கையில் கிடைச்சதை தூக்கி அடிச்சிருப்பாங்க'னு சொன்னதும் எல்லோரும் சிரிச்சுட்டாங்க. இப்படி ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கும் செம காமெடியா போகுது."

மெளனிகா

“அதிகமா நெகட்டிவ் ரோல்களிலேயே நடிக்கக் காரணம் என்ன?” 

“ரியல் லைஃப்ல நான் ரொம்பவே அமைதியானவள். ஆனால், தொடர்ந்து நெகட்டிவ் ரோல்தான் வருது. என் கண்கள் பெருசா இருக்கிறது, நெகட்டிவ் கேரக்டருக்கு ரொம்பவே பொருத்தமா இருக்கிறதா சொல்றாங்க. பாசிட்டிவ் ரோலில் அமைதியா நடிக்கிறது ரொம்ப ஈஸி. ஆனால், கண்களிலும் முகபாவனையிலும் மாடுலேஷன் காட்டி நெகட்டிவ் ரோல் பண்றது ரொம்பவே சவாலானது. ஒரே நேரத்தில் ரெண்டு சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறது வித்தியாசமான அனுபவம்.  மக்களிடமிருந்து கிடைக்கும் திட்டு, எனக்கான அங்கீகாரமா இருக்கு.'' 

“சினிமா வாய்ப்புகள் வந்திருக்கிறதா?”

“மீடியா லைஃப் சிறப்பா போய்ட்டிருக்கு. புதுசா ரெண்டு சீரியல்களில் கமிட்டாயிருக்கேன். இது போதது. இன்னும் மக்கள் மனசுல இடம்பெறணும். சினிமாவில் ஸ்டார் நடிகர்களின் தங்கச்சியாக, பாராட்டு கிடைக்கும் ரோலில் நடிக்க ஆசைப்படறேன். எதிர்காலத்துல பிஸினஸ் செய்யும் எண்ணமும் இருக்கு. அதுக்கான முயற்சிகளையும் ஃப்ரீ டைம்ல செய்திட்டிருக்கேன்” எனப் புன்னகைக்கிறார் மெளனிகா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்