வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (06/03/2018)

கடைசி தொடர்பு:15:50 (06/03/2018)

"நான் மலையாளி இல்லைனு சொன்னா... யாருமே நம்ப மாட்டாங்க!"' - 'அழகிய தமிழ் மகள்' சாதனா

சினிமாவிலிருந்து சின்னத்திரைக்குள் நுழைந்தவர், சாதனா. 15 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் வலம்வருபவர். சீரியலில் சீரியஸாக இருந்தாலும், நேரில் பயங்கர சுட்டித்தனமாக இருக்கிறார். அவருடன் ஒரு ஸ்வீட் சாட்! 

சாதனா

"சாதனாவைப் பற்றி சின்ன அறிமுகம் கொடுங்களேன்..!"

''என் தாய்மொழி தெலுங்கு. பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். அம்மா, அப்பாவுக்கு ஒரே பொண்ணு. சின்ன வயசுலேயே மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துச்சு. நிறையப் படங்களில் நடிச்சிருக்கேன். என் கணவர் பிசினஸ் பண்றார். எங்களுக்கு ஒரே பொண்ணு. இதுதான் சாதனாவுடைய சுருக்கம்.'' 

"வெள்ளித்திரை டு சின்னத்திரை எப்படி?" 

''மலையாளம், தெலுங்கு, தமிழ் என பிஸியாக நடிச்சுட்டிருந்தேன். திருமணமாகி பொண்ணு பிறந்ததும், நடிப்பை விட்டுட்டேன். என் குளோஸ் ஃப்ரெண்டு குட்டி பத்மினி. அவங்கதான் சீரியலில் என்னை நடிக்கச் சொன்னாங்க. அவங்க வழிகாட்டலில் சின்னத்திரைக்குள் நுழைஞ்சேன்.'' 

"உங்க காஸ்டியூம்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கே, யாருடைய செலெக்‌ஷன்?" 

''நிறையப் பேர் இதைச் சொல்வாங்க. எனக்குனு தனியா டிசைனர்ஸ் யாரும் இல்லை. என் காஸ்டியூம் அழகா இருக்கக் காரணம், என் பொண்ணுதான். டிரெண்டான புடவையை எங்கே பார்த்தாலும் வாங்கிட்டு வந்திருவா. என் காஸ்டியூமிற்கான பாராட்டு முழுக்கமுழுக்க என் பொண்ணுக்குத்தான்.'' 

சாதனா

"பாசமான அம்மாவாகவும் அசத்துறீங்க, வில்லியாகவும் மிரட்டுறீங்களே எப்படி?'' 

''ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிச்சுட்டிருந்தால் மக்களுக்கு போர் அடிச்சிரும். அவங்களுக்கு வெரைட்டி கொடுத்துட்டே இருக்கணும். சன் டிவி 'வள்ளி' சீரியலில் பாசமான கேரக்டர், விஜய் டி.வி 'சின்னத்தம்பி' சீரியலில் ஸ்டிரிக்ட்டான அம்மா, ஜீ தமிழ் 'அழகிய தமிழ்மகள்' சீரியலில் வில்லி என நடிக்கிறேன். ஒவ்வொரு சீரியலிலும் வித்தியாசமா காட்டிக்க விரும்பறேன். அதுக்கு ஏற்ற மாதிரி கேரக்டர்ஸ் கொடுத்திருக்கும் டைரக்டர்ஸுக்கு நன்றி.'' 

"நீங்க வீட்டுல எப்படி?" 

''நிஜத்தில் நான் ரொம்பவே ஜாலி பெர்சன். என் பொண்ணுக்கு குளோஸ் ஃப்ரெண்டு. மகள் கல்யாணி, புரொபஷனல் கோர்ஸ் படிச்டுட்டிருக்கா. நான் ஃப்ரீயா இருக்கும்போது அவளின் ஃப்ரெண்ட்ஸ்கூடச் சேர்ந்து ஊர் சுற்றுவேன். ஷூட்டிங்கில் நடக்கும் விஷயங்களைப் பொண்ணுகிட்டே ஷேர் பண்ணிக்குவேன். அவளும் காலேஜில் நடக்கும் கலாட்டக்களைச் சொல்வாள்.'' 

"நடிப்பைத் தவிர வேறு எதில் ஆர்வம்?" 

''சமைக்கிறது ரொம்பப் பிடிக்கும். ருசியாவே சமைப்பேன். என் பொண்ணுக்கு நான் சமைக்கிற எல்லாமே பிடிக்கும். நான்வெஜ்ல மசாலா போட்டாலே டேஸ்ட் வந்துரும். ஆனா, வெஜ் சாப்பாட்டை டேஸ்ட்டா பண்றது சவால். நான் ரெண்டிலும் அசத்துவேன். ஒருநாள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப்பாருங்க.'' 

சாதனா

"உங்களைப் பற்றி யாருக்கும் தெரியாத விஷயம்..?" 

''மலையாள உலகில், என் பெயர் 'ஷாரி'. நிறைய மலையாளப் படங்களில் நடிச்சதால் நிறையப் பேர் என்னை மலையாளின்னு நினைக்கிறாங்க. இல்லைனு சொன்னாலும் அத்தனை சுலபமா நம்பறதில்லை. அதை நினைச்சா சிரிப்பா இருக்கும்.'' 

"உங்களுக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் எப்படி?" 

''வெளியில் சந்திக்கிறவங்க, 'நீங்க அந்த சீரியலில் நடிக்கிறவங்கதானே உங்களை ரொம்பப் பிடிக்கும், உங்க புடவை சூப்பரா இருக்கு'னு பலவிதமா சொல்லுவாங்க. 'தென்றல்' சீரியலில் நடிச்ச சமயத்தில் என்னைப் பார்க்கிறவங்க எல்லாரும் கடுமையா திட்டி, விமர்சனம் பண்ணுவாங்க. அதையும் ஒரு பாராட்டாவே எடுத்துப்பேன். இப்போ, தொடர்ந்து மூணு சீரியலில் பிஸியா இருந்தாலும், குடும்பத்துக்காகவும் நேரம் ஒதுக்கறதில் கவனமா இருக்கேன். நான் நடிக்கும் எல்லா சீரியலிலுமே, ஒரு ஃபேமிலி மாதிரிதான் பழகுவேன். மத்தவங்களை சந்தோஷப்படுத்தி நாமும் சந்தோஷப்படறதைவிட வேற என்ன வேணும்.''

நீங்க எப்படி பீல் பண்றீங்க