Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``பாடுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா, இது இன்ப அதிர்ச்சின்னு சொன்னார், மாதவன்" - ஆங்கர் பாவனா

யூ-டியூபில் உலவிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது அந்த வீடியோ. பாப் சிங்கர் கமிலா கபலோவின் வெஸ்டர்ன் லிரிக்கில் அழகான ஹம்மிங் ப்ளஸ் அசத்தலான மூவ்மென்ட்ஸ் கலந்து, `பார்த்த ஞாபகம் இல்லையோ...' எனக் கேட்ட அந்த முகத்தைக் கூர்ந்து கவனித்தால்.... அட, நம்ம `சூப்பர் சிங்கர்' பாவனா!. `சூப்பர் சிங்கர்' சீசனில் ஆளைக் காணவில்லையே எனப் பார்த்தால், `கிடைத்த கேப்பில் கிடா வெட்டிடலாம்' எனப் புதிய ஒரு இனிஷியேட்டிவாக `மாஷ் சாங்' ரிலீஸில் இறங்கியிருக்கிறார். ஒரு லைக் போட்டுவிட்டு அப்படியே போன் போட்டோம்.

பாவனா

சினிமாவுல டூயட் பாடுவீங்கனு நினைச்சா, என்னது இது?

``புது முயற்சியா இதுல இறங்கி ஃபர்ஸ்ட் சாங் வெளியிட்டிருக்கிறேன். தமன்னாவும், ஆர்.ஜே.பாலாஜியும் வெளியிட்டாங்க. மாதவன்ல இருந்து பல திரைப் பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்திக்கிட்டு இருக்காங்க. மாதவன், `` `சூப்பர் சிங்கர்' எக்ஸ்பீரியன்ஸை வெச்சே கண்டிப்பா ஒரு நாள் பாடுவாங்கனு எதிர்பார்த்தேன். ஆனா, பாடலோட ஆடலுமா? எனக்கு இது இன்ப அதிர்ச்சி"னு சொன்னார்.

தொகுப்பாளினியா இன்னைக்கு அறியப்பட்டாலும் பாடணும், ஆடணும்கிறது சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள இருந்துட்டே வந்திருக்கு. பாடுறது பாத்ரூம் சிங்கர்ங்கிற அளவுல மட்டுமே இருந்திச்சு. முயற்சி பண்ணிப் பார்க்கலாமேனு `சூப்பர் சிங்கர்'ல அப்பப்போ பாடினேன். ஆனா, அதெல்லாம் நீங்க டிவியில் பார்த்திருக்க மாட்டீங்க. ஒரு பெர்ஃபார்மன்ஸோட சேர்ந்து பாடணும்கிறது ஸ்கூல நாள்கள்ல வீட்டுலேயே தொடங்கின பயிற்சி. வீட்டுல யாரும் இல்லாத நேரத்துல தனியா கண்ணாடி முன்னாடி நின்னு ட்ரை பண்ணிப் பார்ப்பேன். எனக்கே இது பிடிக்கப் போக, அப்படியே டெவலப் ஆகி இன்னைக்கு ஃபர்ஸ்ட் கவர் சாங் ரிலீஸாகி இருக்கிற நிலைக்கு வந்துடுச்சு. `பார்த்த ஞாபகம் இல்லையோ...' பாட்டு இன்னைக்கு உள்ள இளைஞர்களையும் கவர்ந்த பாடல். அதனால, அதுல இருந்து தொடங்கியிருக்கோம். இது என்னோட தனிப்பட்ட முயற்சி இல்லை. இந்த முயற்சிக்குப் பின்னாடி பெரிய டீம் வொர்க் இருக்கு. இந்த சாங்ல என்னோடு ஆடிய சஞ்சய் ஜெயராமனே இதுக்கு கோரியோவும் பண்ணினார். இந்த அனுபவம் புதுசா இருந்தது. இதேபோல இன்னும் நிறைய இருக்கு. அடுத்தடுத்து வரும்!" 

பாவனா

பின்னணிப் பாடகி, நடிகை... ரெண்டுல எது முதல்ல க்ளிக் ஆகும்னு நினைக்கிறீங்க?

``நான் இப்பவும் ஆங்கர் பாவனாதான். பேசியே பேர் வாங்கினேன். ஆங்கரிங்ல வித்தியாசமா என்ன பண்ணலாம்ங்கிற யோசனைதான் தினமும் போயிட்டிருக்கும். அதுக்கே ஒண்ணும் க்ளிக் ஆக மாட்டேங்குது. அதனால, இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியாதா? சும்மா மனசுக்குப் பிடிச்ச விஷயத்தைச் செஞ்சேன். என் குரலும் நல்லா இருக்குனு யாராவது பாடக் கேட்டு வரட்டும், பிறகு பார்க்கலாம். உங்களுக்கு இன்னொரு சேதி சொல்லட்டுமா,.. இந்த வீடியோ வெளியிடறதுக்கு முன்னாடி `நான் பாடலாமா'னு என்னோட வாய்ஸ் கன்சல்டன்ட்கிட்ட கேட்டதுக்கு, `பேசறதைக் குறைக்க வேண்டியிருக்கும்'னு சொல்லியிருக்காங்க. அதனால, பார்க்கலாம்."

சினிமா வாய்ப்புகள் வந்ததாகக் கேள்விப்பட்டோம்...

``ஆமா. சமீபத்துல ஒரு முன்னணி இயக்குநர்கிட்ட இருந்து கால் வந்தது. ஆனா, எனக்கு சினிமா பத்தி முடிவெடுக்க டைம் தேவைப்படுது. என்னோட ஃபேமிலி, கணவர். இவங்களோட அபிப்ராயம் அவசியம். அதனால, இப்போதைக்கு அந்த வாய்ப்பை ஏத்துக்க முடியலை."

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்