''நான் சத்தியமா கமிட் ஆகலை பாஸ்... அவர் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்!’’ - ஜாக்குலின்

''நான் சத்தியமா கமிட் ஆகலை பாஸ்... அவர் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்!’’ - ஜாக்குலின்

'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் தொடங்கி ஏழாவது சீசன் வரை இந்த நிகழ்ச்சியை ரக்‌ஷன், ஜாக்குலின் இருவரும் தொகுத்து வழங்கினார்கள். பிறரை கலாய்த்தும், தன்னை கலாய்ப்பதற்கு அசட்டுத்தனமாக சிரிப்பதும் என செம கலாய்யாக சென்று கொண்டிருந்த  ஏழாவது சீசனின் ஃபைனல் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. அடுத்து என்னென்ன ஷோக்களில் கமிட்டாகியிருக்கிறார் என்பதை தெரிந்துக்கொள்ள ஜாக்குலினைத்  தொடர்பு கொண்டோம்.

ஜாக்குலின்

அடுத்து எத்தனை ஷோக்களுக்கு வீ.ஜே -யிங் பண்றீங்க... லிஸ்ட் சொல்லுங்க..!?

’’லிஸ்ட்டா... அட போங்க பாஸ். சும்மாதான் இருக்கேன். நயன்தாரா மேடமுக்கு தங்கச்சியா நான் நடிச்ச ’கோலமாவு கோகிலா’ இன்னும் ரிலீஸாகலை. அந்தப் படம் ரிலீஸானப்பிறகு சில பட வாய்ப்புகள் வரும். ரிலீஸாகுற வரை நானும் வேற படங்களில் கமிட்டாக மாட்டேன். ஏன்னா, நான் எப்படி நடிக்கிறேன்னு இயக்குநர்கள் பார்த்ததுக்கு அப்பறம், அவங்க கதைக்கு நான் சரியா இருப்பேன்னு அவங்களுக்கு தோணுச்சுன்னா வந்து கதை சொல்லலாம்ல. அதுக்காகத்தான் என்னோட முதல் படம் வெளியாகட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். எனக்கே என் நடிப்பு மேல ஒரு நம்பிக்கை வரணும்னா, என்னோட நடிப்பை முதல்ல பெரிய ஸ்கீரின்ல பார்க்கணும். அதுக்கப்பறம் மற்ற பட வாய்ப்புகள் வந்தா சரியா இருக்கும்னு நம்புறேன். இதுதான் நான் வெயிட் பண்றதுக்கான காரணம். வேற எதுவும் ஸ்பெஷல் ரீசனெல்லாம் இல்லை. இப்போ புது ஷோ எதுவும் இன்னும் கமிட்டாகலை. பட் நிறைய ஷோ ஸ்டார்ட் பண்றதுக்காக வேலைகள் போயிட்டு இருக்கு. கண்டிப்பா புது ஷோ வரும்.’’

'கோலமாவு கோகிலா' படத்தில் உங்க ரோல் பற்றிச் சொல்லுங்க..? முதல் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருந்தது..?

''நயன்தாரா மேடமுக்கு தங்கச்சி என்பதைத் தாண்டி என் ரோலைப் பற்றி இப்போ எதுவும் சொல்ல முடியாது. ஷூட்டிங் ஸ்பாட் செம ஜாலியா இருக்கும் ஜி. நயன்தாரா மேடம், சரண்யா மேடம் ரொம்ப நல்லா கேர் பண்ணிப்பாங்க. விஜய் டிவியில் இருந்த நெல்சன் அண்ணாதான் இந்தப் படத்தோட டைரக்டர். அதுனால ஸ்பாட்ல எனக்கு எந்த பதட்டமும் இல்லை. எதாவது சரியில்லைன்னா, அவரே பக்கத்துல வந்து சொல்லிக்கொடுத்துட்டு போவார். அதைப் அப்படியே பண்ணிடுவேன். அவரோட அசிஸ்டெண்ட்ஸ் எல்லாமே எனக்கு முன்னாடியே தெரிஞ்சவங்களா இருந்தனால ரொம்ப ஈசியா இருந்துச்சு.''

ஜாக்குலின்

நீங்க இப்போ சிங்கிள் இல்லையாமே... கமிட்டாகிட்டதா கேள்விப்பட்டோம்..?

''அய்யய்யோ... சத்தியமா நான் கமிட்டாகலை பாஸ். நானும் என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஷாமும் இன்ஸ்டால எப்போதுமே அப்படித்தான் பேசிப்போம். அதைப் பார்த்தா யாருக்கோ அது லவ்னு ஃபீல் ஆகியிருக்கு. அதை வச்சு நிறைய மீம், வீடியோனு போட்டுட்டு இருக்காங்க. ரெண்டு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் எப்படி இருப்பாங்களோ அப்படித்தான் நாங்க இருக்கோம். நாங்க ரெண்டு பேரும் ஃபேமிலி லெவல்லையும் ஃப்ரெண்ட்ஸாகத்தான் இருக்கோம். இதுவரைக்கும் நான் எந்த பையனோட போட்டோக்கும் அப்படி கமெண்ட் பண்ணுனது இல்லை. அதுனாலக்கூட தப்பா புரிஞ்சுருக்கலாம். அப்பறம் இந்த மீம் வீடியோ போடும்போது கொஞ்சம் பார்த்து பண்ணுனா நல்லாயிருக்கும். ஏன்னா, ஒரு முறை நான் விஜய் டிவியை விட்டு வெளியேறிட்டேன்னு போட்டு விட்டுட்டாங்க. எனக்கு பக்குனு ஆகியிருச்சு.'' என்ற ஜாக்குலின் அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தவாறே, ‘செலிபிரிட்டிக்கு இதெல்லாம் சாதரணம்தானே’ என்றுச் சொல்லிவிட்டு பறந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!