வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (02/05/2018)

கடைசி தொடர்பு:11:12 (02/05/2018)

'சீரியலுக்கு பிரேக் எடுத்துட்டு பிசினஸில் இறங்கியிருக்கேன்..!' - 'கோலங்கள்' ஶ்ரீவித்யா

என் அம்மாதான் என் முடியை அவ்வளவு பொறுமையா பராமரிச்சாங்க. அவங்க அளவுக்கு என்கிட்ட பொறுமை இல்லீங்க. இப்போ, அந்த நீளமான முடியை வெட்டிட்டேன்.

'கோலங்கள்' சீரியல் வழியே நம் வீட்டு வரவேற்பறையில் வலம்வந்தவர், நடிகை ஶ்ரீவித்யா. சிறு வயதிலேயே நடிப்புத் துறைக்கு வந்தவர். 30 வருடங்களாக நடிப்புத் துறையில் இருந்தவர், தற்போது பிஸினஸில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டமைப்புகளைத் தவிர்த்து எல்லாத் துறைகளிலும் முத்திரை பதிக்க விரும்பும் பெண். தன்னம்பிக்கையுடன் பிசினஸில் இறங்கியிருப்பவரை ஒரு குட்டி பயோடேட்டாவுடன் அவரைச் சந்திப்போமா?


ஶ்ரீவித்யா

பெயர்: ஶ்ரீவித்யா

படிப்பு: எம்.பி.ஏ

ரீ-என்ட்ரி சீரியல்: கைராசி குடும்பம்

தற்போது: பிசினஸ்

குழந்தை: ஒரு பையன், வயது 5.

எதிர்கால திட்டம்: பிசினஸ், உதவி இயக்குநர்

 

''என் சொந்த ஊர், சென்னை. எம்.பி.ஏ படிச்சிருக்கேன். சின்ன வயசிலேயே நடிக்க வந்துட்டேன். எங்க ஃபேமிலி நண்பர் மூலமா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. குழந்தை நட்சத்திரமாக நிறைய சீரியல்களிலும், ஒரு சில படங்களிலும் நடிச்சிருக்கேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, 'கோலங்கள்' சீரியலில் நடிக்கவந்தேன். பாலா சாரின் 'நந்தா' படத்திலும் நடிச்சிருக்கேன்'' என்கிற ஶ்ரீவித்யா, 'கோலங்கள்' பற்றிப் பேசும்போதே பரவசமாகிறார்.


ஶ்ரீவித்யாஶ்ரீவித்யா

'' 'கோலங்கள்' எனக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுத்துச்சு. ஒன்பதாவது படிக்கும்போது நடிக்க ஆரம்பிச்சது, பி.காம் படிக்கும்போது முடிஞ்சது. கிட்டத்தட்ட 7 வருஷங்கள். அமைதியான பொண்ணு, கோபக்கார பொண்ணுன்னு நடிப்பின் எல்லாப் பரிமாணங்களையும் அந்த சீரியல் மூலமா காட்டினேன். பெரிய ரசிகர் பட்டாளத்தின் அன்பை கொடுத்த சீரியல் அது. வெளியில் என்னைப் பார்க்கும் பலரும், 'ஏன்மா இவ்வளவு கோபமா நடிக்கிறீங்க'னும் கேட்டிருக்காங்க. 'இவ்வளவு அமைதியான பொண்ணா நீங்க?'னும் வியந்திருக்காங்க. ஒரு ஆர்ட்டிஸ்ட்னா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கணும்தானே'' என்கிறவர் பேச்சில் அத்தனை மகிழ்ச்சி.

''என் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். என் ஐந்து வயது பையனை என் மாமியார்தான் பார்த்துக்கிறாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி சீரியலுக்கு பிரேக் எடுத்திருந்தேன். அப்புறம் 'சித்திரம் பேசுதடி' என்ற சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்தேன். தொடர்ந்து, 'கைராசி குடும்பம்' சீரியலில் நடிச்சேன். இப்போ, சீரியல் நடிப்புக்கு பிரேக் எடுத்துட்டு பிசினஸில் இறங்கியிருக்கேன். இப்போதைக்கு சீரியலில் நடிக்கும் பிளான் இல்லை. 'கிளவுட்ஸ் கிச்சன்' என்கிற பெயரில் ஒரு பிஸினஸை ஆரம்பிச்சிருக்கேன். அது என்ன பிசினஸ்னா, ஃபேச்சுலர்ஸுக்கு அவங்க விருப்பப்படும் இரவு உணவுக்கான மெனுவை கேட்டு, செஞ்சுக் கொடுக்கிறது.  இப்போதைக்கு இதில் முழுமையா கவனம் செலுத்தறேன். வருங்காலத்தில், அசிஸ்டென்ட் இயக்குநராகவும் விருப்பம் இருக்கு. தொடர்ந்து நிறைய சீரியலில் நடிச்சாச்சு. இயக்குநர் துறை எப்படி இருக்குன்னு பார்க்கணும்; அதையும் கத்துக்கணும்னு விரும்புறேன். என் விருப்பத்துக்கு என் கணவரும், என் குடும்பமும் முழு ஒத்துழைப்பு கொடுக்குறாங்க. அதுனால தான் சுதந்திரமா என் விருப்பத்தை என்னால நிறைவேற்ற முடிகிறது என்கிறார்.

ஸ்ரீவித்யா

என்னைவிட என் நீளமான முடிக்கு நிறைய ரசிகைகள் இருந்தாங்க. என் அம்மாதான் என் முடியை அவ்வளவு பொறுமையா பராமரிச்சாங்க. அவங்க அளவுக்கு என்கிட்ட பொறுமை இல்லீங்க. இப்போ, அந்த நீளமான முடியை வெட்டிட்டேன். முன்னாடி சீரியலில் நடிக்கும்போது டயட் மெயின்டெயின் பண்ணிட்டிருந்தேன், இப்போ, கொஞ்சம் குண்டாகிட்டேன். மற்றபடி, எப்பவும் செம எனர்ஜியா இருக்கேன்'' எனப் புன்னகைக்கிறார் ஶ்ரீவித்யா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்