‘பிக் பாஸ்-2’வில் ஓவியா யார், ஜூலி யார்? உங்கள் விருப்பத்தை பதியுங்கள்

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி தொடர்ந்து 100 நாள்கள் நடந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு ஏக வரவேற்பு. அதைத் தொகுத்த கமல்ஹாசன், நிகழ்ச்சிக்கிடையே அடித்த கமென்ட்ஸ் ஒவ்வொன்றும் வைரலாகின. அதுநாள்வரை ரிலாக்ஸாக இருந்த ஓவியா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் பரபரப்பானார். ஜூலி, காயத்ரி ரகுராம் போன்றோர் வேறுமாதிரி வைரலானார்கள். அனைத்துக்கும் மேலாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பிறகு கமல், கட்சி தொடங்கினார்... 

பிக் பாஸ்2

இப்படி நம்மைப் பரபரப்பிலேயே வைத்திருந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வரும் ஜூன் மாதம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனுக்கான ஹவுஸ்மேட்ஸ் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ‘அமலாபாலை அணுகினார்கள். அவர் மிகப்பெரிய தொகை கேட்டார். ராய் லட்சுமியிடம் பேசி இருக்கிறார்கள்...’ இப்படி தகவல் தட்டுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சினிமா, டிவி, அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரிடமும் சேனல் தரப்பில் இருந்து பேசி வருகிறார்களாம். 

நமக்குத் தெரிந்தவகையில் கீழ்க்கண்ட 30 பேர்களில் பலர் தேர்வாக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்த 30 பேரில் தேர்வாக உள்ள அந்த 15 பேர் யாராக இருக்கும் என்பதை யூகிக்க நம் வாசகர்களுக்கு ஒரு வாய்ப்பு. யூகியுங்கள்...

பிக் பாஸ் 2

கீழ்க்கண்ட 30 பேர்களில் பலர் தேர்வாக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்த 30 பேரில் தேர்வாக உள்ள அந்த 15 பேர் யாராக இருக்கும் என்பதை யூகிக்க நம் வாசகர்களுக்கு ஒரு வாய்ப்பு. யூகியுங்கள்...

 

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

 

...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!