''சேத்துல விழுறப்ப சேலை கட்டிட்டு விழுந்தா கிளாமராதான் தெரியும்!'' - 'கிராமத்தில் ஒருநாள்' கிருத்திகா

`மெட்டி ஒலி' சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கிருத்திகா. சின்னத்திரையில் 12 வருடங்களாக பாசிட்டிவ், நெகட்டிவ் என ரெண்டு கதாபாத்திரங்களிலும் வெளுத்து வாங்கும் அவரது நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அவரிடம் பேசத் தொடங்குவதற்கு முன்னர், குட்டி பயோ...

கிருத்திகா

பெயர்: கிருத்திகா

முதல் சீரியல்: மெட்டி ஒலி

தற்போது: `சின்னதம்பி' சீரியல், கிராமத்தில் ஒருநாள்

ஃபேமிலி: கணவர் பிசினஸ் பண்றார். கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியா வாழறேன்.

குழந்தைகள்: ஒரே பையன். 5 வயசு.

பிடித்த கதாபாத்திரம்: சைக்கோ மாதிரி வித்தியாசமான கதாபாத்திரம்

 

`` `மெட்டி ஒலி' வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?''

``சின்ன வயசிலிருந்தே ஸ்கூல் கல்ச்சுரல்ஸில் கலந்துப்பேன். அப்படி ஸ்கூல் கல்ச்சுரலில் என்னைப் பார்த்துட்டுதான் `மெட்டி ஒலி' வாய்ப்பு கிடைச்சது. ஆரம்பத்தில், சீரியலில் நடிக்க விருப்பமில்லை. நல்லா படிக்கணும். காலேஜ் லைஃபை என்ஜாய் பண்ணனும்னு தோணுச்சு. என் அம்மாவுக்கோ நான் நடிக்கணும்னு ஆசை. அப்புறம்தான் நடிக்க ஆரம்பிச்சேன்.''

``நிறைய நெகட்டிவ் ரோலில் நடிக்கிறீங்களே...''

``எனக்கு ரெண்டு ரோலுமே செட்டாகும். `வம்சம்' சீரியலில் பாசிட்டிவ் ரோலில் நடிச்சேன். என்னதான் அமைதியான பொண்ணா நடிச்சாலும், ஒரு நிமிடம் வரும் நெகட்டிவ் ரோலுக்கு மவுசு அதிகம். இப்போ. விஜய் டிவியில் `சின்னதம்பி' சீரியலில் நெகட்டிவ் பண்ணிட்டிருக்கேன்.''

கிருத்திகா

`` `கிராமத்தில் ஒருநாள்' நிகழ்ச்சி ரொம்ப கிளாமரான நிகழ்ச்சியா இருக்கும்னு பேசப்படுதே...''

``அந்த ஷோவில் நிறைய கஷ்டமான டாஸ்க் இருக்கும். அது முழுக்க முழுக்க கோயம்புத்தூருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் நடக்கும். ஒவ்வொரு டாஸ்க்கும் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். பயங்கர ரிஸ்க் எடுத்துதான் விளையாடறோம். சேற்றில் விழும் டாஸ்கில் எல்லாம் பக்காவா டிரெஸ் போட்டு பண்ண முடியாது. கம்ஃபர்டபிளா இருக்குற டிரெஸ் போட்டுக்கிறாங்க. ஜீன்ஸ், குர்தி என எனக்கு கம்ஃபர்டபிளான டிரெஸை நான் போட்டுக்கிறேன். கேமரா ஆங்கிள் காட்டும் விதம், பார்க்கிறவங்களுக்குக் கிளாமரா தெரியுது. அதுக்கு நாங்க எதுவும் பண்ண முடியாது. சேலை கட்டி நாடகத்துல நடிச்சாலும், அதையும் கிளாமரா பார்க்கிறவங்க இருக்கத்தான் செய்றாங்க. ஜீன்ஸ், குர்த்தி இல்லாம நான் சேலை கட்டி சேத்துல குதிச்சாலும் அது கிளாமராதான் தெரியும்.''

``உங்க காஸ்டியூம் செலக்‌ஷன்ஸ் பற்றிச் சொல்லுங்களேன்...''

`` `சின்னதம்பி' சீரியலில் மார்டனா டிரெஸ் பண்ணுவேன். அதனால், 70,000 ரூபாய்க்கு டிரெஸ் எடுத்திருக்கேன். ஒரு சீரியலில் பயன்படுத்தின காஸ்டியூமை இன்னொரு சீரியலுக்குப் பயன்படுத்த மாட்டேன். நான் கொஞ்சம் உயரமா இருக்கிறதால், பெரும்பாலும் குர்தி டிரை பண்ணுவேன். பிளைன் சேலை, காட்டன் சேலை, பூனம் சேலைன்னு ஒவ்வொரு சீரியலுக்கும் ஒவ்வொரு பேட்டர்ன் தயார் பண்ணிட்டு, ஃபாலோ பண்ணுவேன்.''

``ஃபேமிலி சப்போர்ட் எப்படி இருக்கு?''

``என் அம்மாதான் எனக்கு ஃபுல் சப்போர்ட். ஆரம்பத்தில் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் என் சீன் வரும்வரை தவிப்பேன். பொறுமைன்னா என்னன்னே தெரியாது. அப்போ, என் அம்மாதான் எனக்குப் புரியவெச்சு முழு ஒத்துழைப்பு கொடுப்பாங்க. இப்போ, எவ்வளவு லேட்டானாலும் காத்திட்டிருப்பேன். அம்மா, முன்னாடி என்னைப் பார்த்துக்கிட்டாங்க. இப்போ, என் பையனைப் பார்த்துக்கிறாங்க. ஐ லவ் யூ அம்மா!''

கிருத்திகா

``ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்...''

``நான் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேனோ, அந்தக் கதாபாத்திரம் பெயர் சொல்லித்தான் கூப்பிடறாங்க. `கிராமத்தில் ஒருநாள்' நிகழ்ச்சிக்கும், `சின்னதம்பி' சீரியலுக்கும் மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு.''

``எதிர்கால திட்டம்...''

``தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கணும். நடிப்புக்காக ஒரே ஒரு அவார்டாச்சும் வாங்கிடணும் அதுதான் இப்போதைக்கு என் பிளான். பாசிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டு விதமாவும் நடிச்சிருக்கேன். சைக்கோ போன்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!