``நம்புங்க... நான் `சல்சா' மணியோட கூடப்பிறந்த அக்காதான்!" `அழகி' ஜெயஶ்ரீ

'ஒரு கை ஓசை' சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர், ஜெயஶ்ரீ நாயர்.  'குலதெய்வம்' சீரியலில், நாதனின் அம்மா கதாபாத்திரத்தில் நம் அனைவரையும் ஈர்த்தவர். நடிகையாக மட்டும் தான் நமக்கு அவர் அறிமுகமாகியிருக்கிறார். ஆனால், இவர் ஒரு நடன ஆசிரியரும் கூட. அதுமட்டுமின்றி பிசினஸிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவரிடம் பேசுவதற்கு முன்னர், அவரைப் பற்றிய குட்டி பயோ..!

 

ஜெயஶ்ரீ

 

பெயர்: ஜெயஶ்ரீ நாயர்

முதல் சீரியல்: ஒரு கை ஓசை

குடும்பம்: கணவர் பிசினஸ் பண்றார். ஒரு பொண்ணு, ஒரு பையன்.

தற்போது நடிப்பது: மலையாளப் படங்கள் மற்றும் மலையாள சீரியல்.

நடிப்பு தவிர: பரதநாட்டிய டான்ஸர், பியூட்டீஷியன்

எதிர்காலத் திட்டம்: நடிகையாக இன்னும் பல சாதனை!

''மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். நிறைய மலையாளப் படங்களிலும், சில மலையாள சீரியல்களிலும் நடிச்சிருக்கேன். கல்யாணத்துக்கு அப்புறம் நடிப்புக்கு பிரேக். குழந்தைகளைப் பார்த்துக்கிறதுக்கே நேரம் சரியாக இருந்துச்சு. அவங்க கொஞ்சம் வளர்ந்ததும், மீடியாவில் ரீ-என்ட்ரி. ஏவி.எம்மில் வாய்ப்பு கிடைச்சது. 'ஒரு கை ஓசை' தமிழில் என் முதல் சீரியல். அந்த சீரியலில் என் கதாபாத்திரம் பெரிய அளவில் இல்லைன்னாலும் அந்த சீரியலைத் தொடர்ந்து தமிழில் நிறைய சீரியல்களில் வாய்ப்பு வரத் தொடர்ந்து நடிச்சேன். 'அழகி' சீரியல், எனக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்துச்சு'' என்ற ஜெயஶ்ரீ, குடும்பம் பற்றி பகிர்கிறார்.

 

தம்பி சல்சா மணியுடன் ஜெயஶ்ரீ

தம்பி சல்சா மணியுடன் ஜெயஶ்ரீ

``கணவர் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார். என் பொண்ணு இப்போதான் காலேஜ் முடிச்சிருக்காங்க. பையன் ஒன்பதாவது படிக்கிறான். என் தம்பி 'சல்சா மணி'. கோரியோகிராஃபரா இருக்கான். தம்பி மனைவி ஷீலாவும் ஆர்ட்டிஸ்ட். இவங்க எல்லோரும்தான் என் பலம். 'சல்சா மணி' என் சொந்தத் தம்பிங்கிறது பலருக்கும் தெரியாது. அவனுக்கு டான்ஸ்னா உயிர். வெறித்தனமா டான்ஸ் ஆடுவான். அவன்தான் என் முதல் பையன். அவனுக்குச் சின்னதா அடிபட்டாலும் என்னால் தாங்கிக்க முடியாது. அவனும் என் மேல அன்பா இருப்பான். நானும் பரதநாட்டிய டான்ஸர்தான். டான்ஸால தான் உயிர் வாழுறேன். எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் நடனமாடும்போது அந்த மனஅழுத்தம் காணாமல் போயிடுங்க. இப்போ என்கிட்ட நிறைய குழந்தைகள் டான்ஸ் கத்துக்கிறாங்க. தவிர, நான் பிரைடல் மேக்கப்பும் பண்ணுவேன்.

தமிழ் சீரியல்களில் தொடர்ந்து நடிப்பேன். இப்போ, ரெண்டு மலையாளப் படங்களிலும் ஒரு மலையாள சீரியலிலும் நடிச்சுட்டிருக்கேன். தமிழ்ப் படங்களில் நல்ல கதாபாத்திரம் அமைஞ்சா நிச்சயம் பண்ணுவேன். ஃப்ரீ டைமில், 'மியூசிக்கலி'யில் பரதநாட்டியம் ஆடி போஸ்ட் பண்ணுவேன். அதைப் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டறாங்க. மக்கள் என்னை எங்கே பார்த்தாலும், 'நீங்க நாதன் அம்மாதானே?'னு கேட்கிறாங்க. அந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்கேன். முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருக்கு. ஆர்ட்டிஸ்டா எவ்வளவு பிஸியா இருந்தாலும், கிடைக்கும் நேரத்தை எப்படி யூஸ் பண்ணலாம்னு யோசிப்பேன். அப்படித்தான் இப்போ ஒரு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன். ஆன்லைனில் மெட்டீரியல்ஸ் சேல் பண்றேன். கொஞ்சம் கொஞ்சமா இந்த பிசினஸையும் டெவலப் பண்ணனும்'' எனப் புன்னகைக்கிறார் ஜெயஶ்ரீ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!