வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (04/06/2018)

கடைசி தொடர்பு:12:49 (04/06/2018)

"கலர் ஸ்கின் மலை ஏறிப்போச்சு; டஸ்கி ஸ்கின்தான் இப்போ மவுசு!" 'பூவே பூச்சூடவா' ரேஷ்மா

ஒரு செலிபிரெட்டி என்றாலே, ரொம்ப கலரா இருக்கணும் என்பது சில ஆண்டுக்கு முன்னாடி வரையான நிலைமை. அது மலை ஏறிப்போச்சு. டஸ்கி ஸ்கின்னுக்கும் இப்போ மவுசு.

முதல் சீரியலிலே ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர், 'பூவே பூச்சுடவா' ரேஷ்மா. சக்தி கதாபாத்திரத்தில் தன்னுடைய க்யூட்டான நடிப்பால், ஸ்ட்ராங் அட்டென்சன் பெற்றுள்ள ரேஷ்மா, ஆடைத் தேர்விலும் கிளாப்ஸ் அள்ளுகிறார். ''நான் படிச்சது எல்லாமே சென்னை. ஸோ, நான் பக்கா சென்னைப் பொண்ணு. கல்லூரி படிக்கும்போதே மாடலிங் பண்ணிட்டிருந்தேன். திடீர்னு 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' வாய்ப்பு கிடைச்சது. இப்போ, சீரியலிலும் பிஸி'' என்கிற ரேஷ்மா, டஸ்கி ஸ்கின் ஸ்பெஷல் பற்றியும் தன்னுடைய வார்ட்ரோப் பற்றி  பகிர்ந்துகொள்கிறார்.

டஸ்கி ஸ்கின்

டஸ்கி ஸ்கின்தான் சூப்பர்!

ஒரு செலிபிரெட்டி என்றாலே, ரொம்ப கலரா இருக்கணும் என்பது சில ஆண்டுக்கு முன்னாடி வரையான நிலைமை. அது மலை ஏறிப்போச்சு. டஸ்கி ஸ்கின்னுக்கும் இப்போ மவுசு. நான் மாடலிங் பண்ணிட்டிருக்கும்போதே இதை உணர்ந்துட்டேன். அதனால், சீரியல் வாய்ப்பு வந்ததும், தயங்காமல் களத்தில் இறங்கிட்டேன். சீரியலில் ஆடைகளுக்கு அதிக கவனம் செலுத்துவேன். என் அம்மாதான் எனக்கு காஸ்டியூம் டிசைனர். ஃபேஷனில் என்னைவிட ரொம்ப அப்டேட் அவங்க. ஸோ, சீரியலில் புதுப் புது டிசைன்களில் நான் கலக்க அம்மாதான் காரணம். இப்போ, பல டஸ்கி ஸ்கின் கேர்ள்ஸுக்கு சக்திதான் ஃபேஷன் ஐகான்.

கலர் காம்போ!

நிறத் தேர்வுகளில் நான் ரொம்பவே கவனமாக இருப்பேன். நிறத் தேர்வுதான் நம்மை அழகாகக் காட்ட உதவும். இப்போ, சீரியலில் டபுள் கலர் புடவைகளையே தேர்வுசெய்து பயன்படுத்தறேன். புடவை முழுக்க ஒரு நிறமாகவும், பார்டர் ஒரு நிறமாகவும் டிசைன் செய்த புடவை. அதனுடன் போட் நெக், பேக் ஒப்பன், முக்கால் கை பிளவுஸ்கள் இப்போ டிரண்ட். அம்மா எனக்காக நிறைய டிசைன்களில் பார்டர்கள் ரெடி செய்து, புடவையில் மிக்ஸ் மேட்ச் பண்றாங்க. அதுதான் என்னை சீரியலில் ஸ்பெஷலாக காட்டுது.

அக்ஸசரிஸ்!

எனக்கு நிறைய ஜமிக்கி ஒர்க், ஸ்டோன் ஒர்க் ஆடைகள் போட்டுக்க பிடிக்காது. அக்ஸசரிஸும் பொட்டுக்கலைன்னா ரொம்பவே நார்மலாக இருக்கும்னு, அக்ஸசரிஸில் அதிக கவனம் செலுத்துவேன். நார்மலான ஆடைகளுக்குச் சின்ன ஸ்டெட் டைப் போட்டுப்பேன். எந்த நெக் பீஸ்களும் போட்டுக்கப் பிடிக்காது. ஆனால், சீரியலில் புடவைதான் என் காஸ்டியூம். அதுக்கு தகுந்தமாதிரி கொஞ்சம் ஸ்டைலை மாற்றவேண்டி இருந்துச்சு. அதிலும் இப்போ போயிட்டிருக்கும் எபிசோடுகளில் என்னை மெச்சூடாக காட்டறாங்க. அதுக்காக, போல்கி டைப் கம்மல்கள், ஜிமிக்கிக் கம்மல்கள் தேர்வுசெய்யறேன். இப்போ, கம்மல் கலெக்‌ஷனில் தீவிரமாக இறங்கிட்டேன். பிடிச்ச மாடல்களை ஆன்லைனிலும் ஆர்டர் கொடுக்கிறேன். ஆனால், எப்பவும் பிளாக் ஷூ என் ஆல்டைப் ஃபேவரை அக்ஸசரிஸ்.

ஃபேவரைட் டிரஸ்!

ஜீன்ஸ் அண்டு ஷர்ட்தான் எனக்கு கம்பர்டபிள். எங்கே போனாலும் அதையே போட்டுட்டிருந்தேன். சீரியலுக்கு வந்து கொஞ்சம் ஸ்டைல் மாத்தியாச்சு. அம்மாவும் அப்பாவும் நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே எனக்காக வாங்கிவைத்த ஜம் ஷூட் டிரஸ்தான் என் ஆல்டைம் ஃபேவரைட். அந்த டிரஸ்ஸுக்கு என்னுடைய வார்ட்ரோப்பில் தனி இடம் உண்டு.

செலிபிரெட்டி டிரண்ட்!

பிரியங்கா சோப்ராவின் டிரஸ்ஸிங் சென்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க எந்த ஆடையை அணிந்தாலும், நீட் லுக்கில் இருப்பாங்க. நானும் சில நேரங்களில் அவங்களை மாதிரியே டிரை பண்ணியிருக்கேன்.


டிரெண்டிங் @ விகடன்