’’திவ்யலட்சுமி பெர்சனல் பத்தி பேச வேண்டாம்னு பாக்குறோம்!’’ - கிருஷ்ணகுமாரி

மிமிக்ரி கலைஞர் நவீன் - திவ்யலட்சுமி பிரச்னை கடந்த இரண்டு நாளாக பூதாகரமாக வெடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி ஒருவரைப் பற்றி ஒருவர் புகார் கூறிவரும் நிலையில், நவீன் திருமணம் செய்துகொள்ள இருந்த கிருஷ்ணகுமாரியிடம் பேசினோம்.

நவீன்

’’நானும்  நவீனும் சொந்தகாரர்கள்தான். நான் மலேசியாவில் இருந்து சென்னைக்கு படிக்க வந்தேன். எனக்கு மலேசியாவிலேயே வேறு ஒருத்தரோடு திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. சென்னைக்கு வந்த இடத்தில் நம்ம சொந்தகாரர் ஒருத்தர் செலிபிரிட்டியா இருக்காரேனு நவீனோடு சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்ல போட்டேன். அதை திவ்யா பார்த்துட்டு, என்னைப் பற்றி தப்புத் தப்பா ஃபேஸ்புக்ல எழுதிட்டாங்க. நான் இதைப் பற்றி சைபர் க்ரைம்ல புகார் கொடுக்கப்போனேன். ஆனா அதை அவங்க வாங்கவேயில்லை. திவ்யாவினால் என் பெயர் கெட்டுப்போய், எனக்கு நடக்கவிருந்த கல்யாணமும் நின்னுபோச்சு. ‘என்னாலதான உனக்கு இப்படி ஆச்சு. உனக்கு ஓகேனா நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு நவீன் சொன்னார். அப்படித்தான் நாங்க பழக ஆரம்பிச்சோம். 

நவீனும் திவ்யாவும் லவ் பண்ணுனது உண்மைதான். ஆனால், திவ்யாவோட நடவடிக்கைகள் பிடிக்காமதான் நவீன் அவங்களை விட்டுட்டு வந்தார். ’என்னை திருமணம் பண்ணிக்கணும்’னு விடாம நவீனை டார்ச்சர் பண்ணிட்டு இருந்தாங்க. அதுமட்டுமில்லாம நவீனோட தங்கச்சியைப் பற்றி ஃபேஸ்புக்ல தப்புத் தப்பா எழுதியிருக்காங்க. 

நவீனை மிரட்டிதான் ரிஜிஸ்டர் ஆஃபிஸ் ஃபார்ம்ல கையெழுத்து வாங்கியிருக்காங்க. ரவிங்கிற ஒருத்தர் வீட்ல கல்யாணம் நடந்ததாகவும் அதை அரக்கோணம் ரிஜிஸ்டர் ஆஃபிஸ்ல ரிஜிஸ்டர் பண்ணின மாதிரிதான் அந்த சர்டிஃபிகேட்ல இருக்கு. ஆனா, ரவி வீட்ல அப்படி ஒரு கல்யாணம் நடக்கவே இல்லை. ரிஜிஸ்டர் ஆபிஸ்ல இந்த மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணும்போது நவீன் அந்த இடத்துல இல்லை. நவீனும் திவ்யாவும் மாலையும் கழுத்துமா நிக்கிற ஒரு போட்டோவாவது அவங்ககிட்ட இருக்கானு கேளுங்க? அந்தமாதிரி எந்த சம்பவமும் நடக்கலை என்பதுதான் உண்மை. 

திவ்யா - நவீன்

’நவீன் என்கிட்ட பணத்துக்காகப் பழகுனான்’னு திவ்யா சொல்றாங்க; ஆரம்பத்துல இருந்தே இவர்தான் திவ்யாவுக்கு பணம் கொடுத்திருக்கார். இவர் அக்கவுன்ட்ல இருந்து அவங்களே பல முறை பணம் எடுத்திருக்காங்க. எங்களோட கல்யாணம் நடக்குறதா இருந்த இந்த மாதம் 10ஆம் தேதிக்கு இரண்டு நாள் முன்னாடிக்கூட, ‘எனக்கு இரண்டு லட்சம் பணம் கொடுத்தா உன் கல்யாணத்தை நிறுத்த மாட்டேன்’னு சொல்லி நவீன்ட்ட பணம் வாங்கிட்டு போயிருக்காங்க. திவ்யாவும் நவீனுக்கு சில பொருள்கள்  வாங்கிக்கொடுத்திருக்காங்க. ஆனால், அதை எல்லாம் இப்போ வரை யூஸ் பண்ணாம அவங்ககிட்ட திரும்பிக்கொடுக்கணும்னு வச்சிருக்கார். 

நவீனுக்கும் திவ்யாவுக்கும் இருந்த பழக்கம் பற்றி எங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும். மலேசியாவுல நிச்சயதார்த்தம் ஆனதுல இருந்து எனக்கும் போன் பண்ணி திவ்யா மிரட்டினாங்க. நான் அப்பவே, ‘நவீன்கூட வாழணும்னா சொல்லுங்க, நான் விட்டுட்டு போயிடுறேன்’னு சொன்னேன். ’யாருக்கு வேணும் நவீன். எனக்கு அவன் தேவையில்லை. நான் நவீன்கூட வாழ விரும்பலை. எனக்கு அவனை பழி வாங்கணும். அவன் ஜெயிலுக்கு போயிட்டா நான் வேற கல்யாணம் பண்ணிக்குவேன்’னு சொன்னாங்க.

எங்க கல்யாணம் நடக்குற அன்னைக்கு, ‘ஸ்டேஷனுக்கு வந்துட்டு போங்க’னு போலீஸ்ல இருந்து கூப்பிட்டாங்க. அவரை கைது பண்ணிட்டு போகலை. ’திவ்யானு ஒரு பொண்ணு பிரச்னை பண்றாங்க; நீங்க ஸ்டேஷனுக்கு வாங்க’னு கூப்பிட்டு நவீனுக்கு பாதுகாப்பு கொடுத்தாங்க. இப்போக்கூட நவீன் என்கூடத்தான் இருக்கார். 

திவ்யாவோட சில பெர்சனல் போட்டோஸ் எங்ககிட்ட இருக்கு. அதை வெளியில விட்டா அவங்க யார் என்ற உண்மை புரியும். ஆனா, ஒரு பெண்ணுக்கு எதிரா அந்தளவுக்கு இறங்கக்கூடாதுனு நாங்க பொறுமையா இருக்கோம். அதனாலதான் இதுவரை நாங்க அதை மீடியாவுக்கு கொடுக்கலை; அவங்க மேல போலீஸ்லயும் புகார் கொடுக்கலை. 

ஆனால், திவ்யா எங்களுக்கு டார்ச்சர் கொடுக்குறதை இன்னும் நிறுத்தலை.  ’நவீனை விட்டுடணும்னா 15 லட்சம் கொடு’னு மிரட்டுறாங்க. தப்பே பண்ணாம எவ்வளவு நாள்தான் இவங்களுக்கு இரக்கம் காட்டுறது? இனிமேல் எங்களால பொறுத்துக்க முடியாது. அதனால எங்கப் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்த்த ஆதாரத்தை வெளியிடப்போறோம். அந்த ஆதாரங்களோடு அவங்க மேல புகாரும் கொடுக்கப்போறோம்’’ என்று முடித்தார் கிருஷ்ணகுமாரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!