வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (16/06/2018)

கடைசி தொடர்பு:10:19 (16/06/2018)

``மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல நவீனும் கிருஷ்ணகுமாரியும் என்ன பண்ணாங்க? ஆதாரம் காட்டவா?’’ - திவ்யலட்சுமி

மிமிக்ரி கலைஞர் நவீன் - திவ்யலட்சுமி பிரச்னை குறித்து இருவரும் மீடியாவில் தங்களது கருத்துகளைச் சொல்லிவந்த நிலையில், நவீன் திருமணம் செய்துக்கொள்ள இருந்த கிருஷ்ண குமாரியிடம் இரண்டு நாள்களுக்கு முன்னர் பேட்டி எடுத்திருந்தோம். கிருஷ்ணகுமாரி கொடுத்த அந்தப் பேட்டியைப் பார்த்த திவ்யலட்சுமி நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். 

கிருஷ்ணகுமாரி - திவ்யலட்சுமி - நவீன்

``கிருஷ்ண குமாரி கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்றேன். அதேமாதிரி நான் கேட்கும் கேள்விகளுக்கும் அவங்க பதில் சொல்லணும். நவீன்கிட்ட ஃபார்ம்ல கையெழுத்து மட்டும் வாங்கிட்டு மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணதா சொல்றாங்க. எந்த ரிஜிஸ்டர் ஆபீஸ்ல அப்படி பண்றாங்க. வேற இடத்துல நடந்த மேரேஜா இருந்தாலும், அதை ரிஜிஸ்டர் பண்ணும்போது ரெண்டுபேரும் நேர்ல வரணும். நாங்க ரெண்டுபேரும் நேர்ல போய்தான் எங்க கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணோம். ரிஜிஸ்டர் ஆபீஸ்ல இருக்கிற நோட்ல கையெழுத்து, கைரேகை வெச்சிருக்கோம். அங்க சிசிடிவி இருந்தது; அதில் எங்க மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன் பதிவாகியிருக்கும். இதெல்லாம்தான் எங்க மேரேஜ் நடந்ததுக்கு ஆதாரம். அதுமட்டுமில்லாமல், இந்த ரிஜிஸ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு செய்ததே நவீன்தான். அவரோட போன்லதான் அப்போ போட்டோஸ் எடுத்தோம். அவர் அந்த போட்டோஸை எனக்கு அனுப்பவேயில்லை. இதுதான் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல நடந்தது. ஆனால், கிருஷ்ண குமாரி சொல்வது, சட்டத்தின் மேலேயே குற்றம் சொல்வதற்குச் சமம்.

என்னுடைய சில பெர்ஷனல் போட்டோஸ் அவங்ககிட்ட இருக்கிறதா சொல்றாங்க. அதெல்லாம் மார்ஃபிங் போட்டோஸ்னு நான் சைபர் க்ரைம்ல புகார் கொடுத்திருக்கேன். அந்த போட்டோஸை நவீன் யூஸ் பண்ணக்கூடாதுனு சைபர் க்ரைம்ல எழுதி வாங்கியிருக்காங்க. அது உண்மையான போட்டோஸா இருந்தா, அதோட காப்பி ரைட்ஸை அவங்களால காட்டமுடியுமா? நானும் நவீனும் எடுத்துக்கிட்ட போட்டோஸுக்கான காப்பி ரைட்ஸ் என்கிட்ட இருக்கு. அதேமாதிரி நான் நவீன்கிட்ட காசு வாங்குனதா சொல்றாங்க. அதுக்கான ஆதாரங்கள் அவங்ககிட்ட இருக்கானு கேளுங்க. தன்னோட கல்யாணத்துக்காக நவீன் தங்கச்சி என்கிட்ட பணம் வாங்கினார். அதுக்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு. ’நவீனை விட்டுடு, உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் வாங்கிக்கோ’னு அவங்க வீட்டு ஆளுங்க என்கிட்ட பேரம் பேசுனாங்க. அப்படியிருக்கும்போது நான் ஏன் காசு வாங்கப்போறேன்.

நவீன்

ஜூன் 10-ம் தேதி நவீனுக்கும் கிருஷ்ண குமாரிக்கும் கல்யாணம் நடக்குறதா இருந்துச்சு. 9-ம் தேதி நீலாங்கரை ஸ்டேஷன்ல நான் புகார் கொடுத்ததும், நவீனைக் கூப்பிட்டு பேசுனாங்க. 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்துச்சு. கடைசியில, ’நான் விவாகரத்து வாங்காம கிருஷ்ண குமாரியை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்’னு போலீஸ் ஸ்டேஷனில் எழுதிக் கொடுத்தார் நவீன். ஆனால், அவங்க பிளான் பண்ண மாதிரியே, ஞாயிற்றுக்கிழமை ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. சென்னையில கல்யாணம் பண்ணாம, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அந்த போட்டோ என்கிட்ட இருக்கு. 

சைபர் க்ரைம் யூஸ் பண்ணக்கூடாதுனு சொல்லியும், மார்ஃபிங் போட்டோஸை நவீனும் கிருஷ்ண குமாரியும் யூஸ் பண்ணிட்டு இருக்கிறதுனால, நான் சைபர் க்ரைம்ல கொடுத்த புகாரை எடுத்துட்டு கமிஷனர் ஆபீஸ் போனேன். நான் கொடுத்த எல்லா ஆதாரத்தையும் பார்த்துட்டு, ’நவீன்மேல உடனே FIR போட்டு ஆக்‌ஷன் எடுக்கிறோம்’னு சொன்னாங்க. நாளை மறுபடியும் கமிஷனர் ஆபீஸுக்குப் போய் FIR காப்பியை வாங்கப்போறேன். சீக்கிரமே நவீன்மேல ஆக்‌ஷன் எடுப்பாங்கனு நம்புறேன்’’ என்றார் திவ்யலட்சுமி.

புகார்புகார்

இதுகுறித்து நவீன் - கிருஷ்ண குமாரியிடம் மேலதிக விவரம் கேட்கும் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக அவர்கள் கருத்து தெரிவித்தால், பரிசீலனைக்குப் பின் வெளியிடத் தயாராக இருக்கிறோம்!


டிரெண்டிங் @ விகடன்