`` `வாழும் திருவள்ளுவர்’னுதான் `ஈரோடு' மகேஷை கலாய்ப்பாங்க..!’’ - அத்தியாயம் 17

`` `வாழும் திருவள்ளுவர்’னுதான் `ஈரோடு' மகேஷை கலாய்ப்பாங்க..!’’ - அத்தியாயம் 17

`கலக்கப்போவது யாரு’ ஷோவோட முதல் இரண்டு சீசன் முடிஞ்சதுக்கு அப்புறம் சாம்பியன்ஸ் ஆரம்பிச்சோம். அந்த நிகழ்ச்சிக்கு நான் உதவி இயக்குநரா இருந்தேன். அந்த ஷோவுக்கு கெஸ்ட் பெர்ஃபார்மென்ஸ் பண்ண வந்தவர்தான் ஈரோடு மகேஷ். மகேஷ்கிட்ட எனக்குப் பிடிச்சதே அவரோட சின்சியாரிட்டிதான்; டைமுக்கு வந்திடுவார். `இப்படி ஒரு பெர்ஃபார்மென்ஸ் எனக்கு வேணும் மகேஷ்’னு சொல்லிட்டா, அதுக்காக அதிகமா ஹோம் வொர்க் பண்ணுவார். வொர்க்லேயும் அவரை எந்தக் குறையும் சொல்ல முடியாது. எனக்கு ஸ்டாண்ட் அப் காமெடியில மதுரை முத்து ரொம்பப் பிடிக்கும். அதுக்கு அடுத்து ஸ்டாண்ட் அப் காமெடியில பெஸ்ட்னா அது ஈரோடு மகேஷ்தான்.

ஈரோடு மகேஷ்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

விஜய் டிவியில சாம்பியன்ஸ் முடிஞ்சதுக்கு அப்பறம் `நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்’ நிகழ்ச்சி மூலமா திரும்பவும் விஜய் டிவிக்கு வந்தார். அதுல தாடி பாலாஜியும் இவரும் சேர்ந்து பண்ணுன காமெடி செம ரீச். ஒரு செலிபிரிட்டை அழைச்சுட்டு வந்து, வெச்சு செய்வாங்க. ஈரோடு மகேஷுக்கும் தாடி பாலாஜிக்கும் இடையே இருக்குற கெமிஸ்ட்ரி பத்தி சொல்லவே வேணாம்; அப்படி இருக்கும். ஒரு இடத்துல ஒருத்தர் கலாய் வாங்குனா, ஒருத்தர் கலாய்ப்பார். சில இடங்களில் இரண்டு பேருமே செலிபிரிட்டியைக் கலாய்ப்பாங்க; இல்ல, அவங்ககிட்ட இருந்து கலாய் வாங்குவாங்க. இதுதான் இந்த ஜோடியோட பிளஸ் பாயின்ட். இந்த மாதிரி ஜோடியா இரண்டு பேர் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி, அதை ஹிட்டடிக்க வைக்கிறது கஷ்டம். அந்த ரெண்டு பேரும் வேலையில மட்டும் இல்லாம பெர்ஷனலாகவும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கணும். அப்படியிருந்தா மட்டுமே அவங்களால சேர்ந்து ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியும். அந்த வகையில் ஈரோடு மகேஷும் தாடி பாலாஜியும் ஒரு பெஸ்ட் ஜோடி. 

ஈரோடு மகேஷ்

`நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்’ ஷோவோட ஹிட்டுதான் அவங்க ரெண்டு பேரையும் `கலக்கப்போவது யாரு’ சீசன் 5க்கு நடுவர்களாக ஆக்குச்சு. மிமிக்ரி சேது, தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ், பிரியங்கா, மைனா நந்தினினு 5 நடுவர்கள் இருந்தாங்க. அதில் ஈரோடு மகேஷோட கமென்ட்ஸ் ரொம்ப நேர்த்தியா இருக்கும். எந்த கமென்ட் சொன்னாலும் அதை ஒரு கவிதை மாதிரி சொல்லுவார். அப்பறம், பெரிய பெரிய அறிஞர்கள் சொன்ன விஷயத்தை எல்லாம் கோட் பண்ணி கமென்ட்ஸ் சொல்லுவார். அது போட்டியாளர்களுக்கு செம எனர்ஜியைக் கொடுக்கும். 

போட்டியாளர்களை நல்லா என்கரேஜ் பண்ணுவார். ரொம்ப நல்லா பெர்ஃபார்ம் பண்ணுனா ஸ்டேஜுக்குப் போய் பாராட்டுவார். அதே மாதிரி தொடர்ந்து நல்லாப் பண்ணிட்டு இருந்த போட்டியாளர்கள் திடீர்னு சரியா பண்ணாம போயிட்டா, ஷோ முடிஞ்சதும் அவங்ககிட்ட தனியாப் பேசுவார். அவங்களுக்கு என்ன பிரச்னைனு கேட்டு அதைச் சரி செய்ய டிப்ஸும் கொடுப்பார். போட்டியாளர்கள்கிட்ட எந்த அளவுக்கு அக்கறையா இருக்காரோ அதே மாதிரி ஜாலியாகவும் இருப்பார். அவரை `விஜய் டிவியோட வாழும் திருவள்ளுவர்’னு சொல்லி பசங்க கிண்டல் பண்ணுவாங்க. அதையெல்லாம் ஜாலியா எடுத்துப்பார். 

ஈரோடு மகேஷ்

`கலக்கப்போவது யாரு’ 5, 6, 7னு தொடர்ந்து மூணு சீசனுக்கும் நடுவர்களா இருந்த மூணு பேருல ஈரோடு மகேஷும் ஒரு ஆள். இந்த ஷோ பண்ணிட்டு இருக்கும் போதே சில படங்களில் நடிச்சார். தொடர்ந்து அவர் சின்னத்திரையிலும் சினிமாவிலும் ஜொலிக்க என் வாழ்த்துகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!