வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (15/10/2018)

கடைசி தொடர்பு:12:57 (15/10/2018)

``ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2018 .. யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?!"

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் - யார் யார் என்ன விருது பெற்றார்கள் - ஒரு பார்வை.

``ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2018 .. யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?!

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை (13/10/18) மாலை சென்னை நந்தனத்தில் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. நடிகர்கள் சத்யராஜ், விஷால், இயக்குநர் அட்லி, நடிகைகள் அமலா பால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்த விழாவில், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், அவற்றில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. (முப்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில்) சிறந்த ஹீரோ, ஹீரோயின், வில்லி, சீரியல், பெஸ்ட் ஜோடி யார் யார்? பட்டியல் இதோ. 

சபானா

`செம்பருத்தி’ சீரியலின் ஹீரோயின் சபானா சிறந்த ஹீரோயினாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபானா

ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி (பிரியா ராமன்)யின் குடும்பத்துக்குள் வேலைக்காரி பார்வதியாக உள்ளே வருபவர், அந்த வீட்டு மூத்த மகனான ஆதி (கார்த்திக் ராஜ்)யால் விரும்பப்படுகிறார். இவருக்கும் ஆதி மீது காதல் வருகிறது. காதலா, விசுவாசமா என முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிற நிலையில், ஆதி - பார்வதி கல்யாணம் நடக்குமா இல்லையா என்பதுதான் சீரியலில் தற்போதைய எதிர்பார்ப்பு.

ஸ்ரீ

சிறந்த ஹீரோவாக `யாரடி நீ மோகினி’யில் நடித்துவரும் ஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டார். `யாரடி நீ மோகினி’க்குள் முத்தரசனாக என்ட்ரியாகி சில மாதங்களே ஆகியிருந்தாலும், ஜீ தமிழ் சேனலுடன் நீண்ட காலம் தொடர்பில் இருக்கிறார். சேனலில் ஒரே நேரத்தில் மூன்று சீரியல்களில் நடித்தவர். நடிகர் விஷால் கையால் விருதை வாங்கினார். `யாரடி நீ மோகினி’யிலும் முத்தரசன் மணமுடிக்கப்போவது ஹீரோயின் வெண்ணிலாவையா அல்லது வில்லி ஸ்வேதாவையா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.

`ஊர்வம்பு’ லக்ஷ்மி

`செம்பருத்தி’ தொடரில் வனஜா கேரக்டரில் வந்து பார்வதியைப் பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் `ஊர்வம்பு’ லக்ஷ்மிக்கு, சிறந்த வில்லிக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

பூவே பூச்சூடவா

சிறந்த தொடருக்கான விருதைத் தட்டிச் சென்றுள்ளது, `பூவே பூச்சூடவா’. தினேஷ், ரேஷ்மா, யுவராணி, கௌசல்யா செந்தாமரை உள்ளிட்டோர் நடிக்கிற இந்தத் தொடரில் தினேஷிடம் ரேஷ்மா குறும்பு செய்யும் காட்சிகள் சுவாரஸ்யத்தைக் கூட்டி வருகின்றன.

கார்த்திக் - சபானா, தினேஷ் - ரேஷ்மா

தினேஷ்

சிறந்த ஜோடிக்கான விருது இரண்டு ஜோடிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. `செம்பருத்தி’ ஆதி - பார்வதி மற்றும் `பூவே பூச்சூடவா’ சிவா - சக்தி இரண்டு ஜோடிகளும் இந்த விருதைப் பெற்றனர்.

அஸ்வினி

அஷ்வினி

`ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடரின் ஹீரோயினாக அறிமுகமானபோதே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர், அஸ்வினி. உடல் பருமனான பெண் சந்திக்கும் பிரச்னைகளைப் பேசும் இந்தக் கதைக்கென்றே தேடிப்பிடித்து 100 கிலோ எடையுள்ள அஸ்வினியை பெங்களூரிலிருந்து கூட்டி வந்தார்கள். சிறந்த அறிமுக நடிகைக்கான விருது அஸ்வினிக்கு வழங்கப்பட்டது.

ப்ரியன்

சிறந்த இயக்குநருக்கான விருது `யாரடி நீ மோகினி’ தொடரை இயக்கிவரும் இயக்குநர் ப்ரியனுக்கு வழங்கப்பட்டது.

அர்ச்சனா

அர்ச்சனா - ஜீ தமிழ் விருதுகள்

சிறந்த தொகுப்பாளர் விருது அர்ச்சனாவுக்கு வழங்கப்பட்டது. மகேஸ்வரி, தீபக், கமல் உள்ளிட்டவர்களுடன் பிரியா ராமனும் போட்டியில் இருந்த நிலையில், அர்ச்சனா விருதைத் தட்டிச் சென்றார்.

சின்னத்திரைக் கலைஞர்களுக்கான விருதுகள் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், விருதுகளை வழங்குவதற்காக வந்திருந்த சினிமா பிரபலங்கள் சிலருக்கும் கடைசி நேரத்தில் சில விருதுகள் வழங்கப்பட்டன. இந்த வகையில் நடிகை ஜோதிகாவும், இயக்குநர் அட்லியும் விருது பெற்றார்கள்.

`விமன் ஆஃப் தி டிகேட்’ விருது பெற்ற ஜோதிகா சேனலின் பிராண்ட் அம்பாசிடர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீ தமிழ் சேனலின் கடந்த 10 ஆண்டு வரலாற்றில் `மெர்சல்’ படம் ஒளிபரப்பானபோதுதான் அதிகப்படியான ரேட்டிங் கிடைத்ததாம். அந்தவொரு சாதனையை கௌரவப்படுத்தும் வகையிலேயே அட்லிக்கு விருது!


டிரெண்டிங் @ விகடன்