வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (31/10/2018)

கடைசி தொடர்பு:15:22 (01/11/2018)

`திருமதி செல்வம்’ முதல் `அழகி’ வரை... வெர்ஷன் 2.0 ஆரம்பம்! #VikatanPrimeTime

`திருமதி செல்வம்’ முதல் `அழகி’ வரை... வெர்ஷன் 2.0 ஆரம்பம்!  #VikatanPrimeTime

1998. சரியாக இருபதாண்டுகளுக்கு முன் இதே நவம்பர் முதல் வாரத்தில் (7/11/1998)தான் சீரியல் ஏரியாவில் அடி எடுத்து வைத்தது விகடன் குழுமம். ஆம். வாரந்தோறும் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பான `அக்‌ஷயா’ தொடரே விகடன் டெலிவிஸ்டாஸின் முதல் தொடர். அந்த நாள் தொட்டு இன்று வரை ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ தொடர்கள் என்றால் டிவி நேயர்கள் மனதில் தனி ஒரு இடம் உள்ளது என்பதை தொடர்களின் வெற்றியை வைத்தே தெரிந்து கொள்ளலாம். சீரியல் பிரியர்கள் பெரிதும் விரும்புகிற சுவாரஸ்யமான திருப்பங்களுடன் எதார்த்தமான கதையுமே வெற்றிக்கான அடிப்படை.

இருபதாண்டுப் பயணத்தை நினைவு கூர்ந்து திரும்பிப் பார்க்கும் இந்த இனிய தருணத்தில், அந்தக் கொண்டாட்டத்தின் நினைவாக ஏதாவது சர்ப்ரைஸ் வேண்டாமா? அந்த சர்ப்ரைஸின் பெயர் `விகடன் பிரைம் டைம்’.

யெஸ், `விகடன் டிவி’ யூ ட்யூப் சேனலில் இனி திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 முதல் 11 மணி வரையான நேரம் `விகடன் பிரைம் டைம்'.

விகடன் சீரியல்

சரி, இந்த நேரத்தில் என்ன?

முன்பு ஒளிபரப்பான நாள்களில், ரேட்டிங்கில் சாதனை படைத்து, மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்ற விகடன் டெலிவிஸ்டாஸின் மெகா ஹிட் சீரியல்கள் மீண்டுமொரு முறை (ரீ லாஞ்ச்) உங்களுக்காக ஒளிபரப்பாக இருக்கிறது. `திருமதி செல்வம்’, `கோலங்கள்’, `அழகி’, `தென்றல்’ ஆகிய தொடர்களை முன்பு டிவியில் பார்த்த அதே நேரங்களில் இனி விகடன் பிரைம் டைமில் நீங்கள் பார்க்கலாம்.

கூடவே, தொடர்கள் ஒளிபரப்புக்கு முன்னும் பின்னும் இந்தத் தொடர்கள் குறித்த பழைய சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்புகள், இவற்றில் நடித்த நட்சத்திரங்களின் பேட்டிகள் முதலானவையும் உண்டு.

எப்போது?

`திருமதி செல்வம்’ நவம்பர் 5 முதல் இரவு 8 மணி (ஒளிபரப்பு தொடங்கப்பட்டதன் 11வது ஆண்டை முன்னிட்டு)

`கோலங்கள்’ நவம்பர் 24 முதல் இரவு 9 மணி (15வது ஆண்டை முன்னிட்டு)

`தென்றல்’ டிசம்பர் 7 முதல் இரவு 9.30 (9வது ஆண்டை முன்னிட்டு)

`அழகி’ டிசம்பர் 25 முதல் இரவு 10 (7வது ஆண்டை முன்னிட்டு)  

 

விகடன் சீரியல் அட்டவணை

 

விகடன்

`திருமதி செல்வம்’, `கோலங்கள்’, `தென்றல்’, `அழகி’ நான்கு தொடர்களுமே ஐந்து வருடங்களைக் கடந்து ஒளிபரப்பாகியவை. `திருமதி செல்வம்’ தொடர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி  என ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாகி அனைத்து மொழிகளிலும் டாப் ரேட்டிங் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. `கோலங்களி'ல் அந்த டைட்டில் சாங் ஒன்று போதும், கதையின் மொத்தப் பயணத்தையும் சொல்ல. `இணையத்தில் வைரலான முதல் தமிழ் சீரியல்’ என்ற பெருமை `தென்ற’லுக்குக் கிடைத்தது. `தென்றல்’, `திருமதி செல்வம்’ தொடர்களின் துளசி-தமிழ், அர்ச்சனா-செல்வம் ஆகிய ஜோடிகள் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டார்கள். கணவனை இழந்து தனி மனுஷியாக, பிள்ளைகளைக் கரைசேர்க்க சுந்தரி பட்ட பாடுகளை விவரித்த `அழகி’ பிறகு தெலுங்கு, மற்றும் மலையாளத்திலும் கூட ஒளிபரப்பாகியது நினைவிருக்கலாம். 

 `மிஸ் பண்ணாம இந்த சீரியல்களைப் பார்க்க இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க’

ஆக, செல்வம் - அர்ச்சனா, அபி, ஆதி, தமிழ் - துளசி, சுந்தரி எல்லோரும் மறுபடியும் உங்களைச் சந்திக்க வருகிறார்கள். வரவேற்கத் தயாராகி விட்டீர்கள்தானே?

 

 

...


டிரெண்டிங் @ விகடன்