"என் வாட்ஸ் அப் சாட்டிங் செல்லம் யார் தெரியுமா?!" 'வாணி ராணி' ஸ்ருதி சண்முகப்ரியா | Actress Sruthi Shanmugapriya talks about her close friend

வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (21/02/2019)

கடைசி தொடர்பு:15:41 (21/02/2019)

"என் வாட்ஸ் அப் சாட்டிங் செல்லம் யார் தெரியுமா?!" 'வாணி ராணி' ஸ்ருதி சண்முகப்ரியா

`வாணி ராணி' சீரியல் முடிந்து கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த சீரியலில் நடித்திருந்த நவ்யா, ஸ்ருதி சண்முகப்பிரியா, நீலிமா ராணி, நிரஞ்சனி போன்றவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் `சீனியர் சுட்டீஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்கள். இவர்களின் ரீயூனியன் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்க, ஸ்ருதி சண்முக பிரியாவிடம் பேசினோம்.

வாணி ராணி ஸ்ருதி

``வாணி ராணி' சீரியல் முடிஞ்சதுக்கு அப்புறம் நாங்க யாருமே மறுபடியும் சந்திக்க வாய்ப்பு அமையலை. திடீர்னு `சீனியர் சுட்டீஸ்' நிகழ்ச்சிக்காகக் கூப்பிடும்போது எல்லோரும் மறுபடி சந்திச்சிக்கப் போறோம்னு அவ்வளவு ஹாப்பியா இருந்துச்சு. நவ்யா இந்த ஷோவுக்கு வர்ற ஐடியா இல்லை. திடீர்னுதான் அவ வர மாதிரியாச்சு. ஹைதராபாத்ல இருந்து ஷூட்டிங் கேன்சல் பண்ணிட்டு இந்த ஷோவுக்கு வந்தா. ஒருநாள் முழுக்க ஜாலியா நேரம் போச்சு. நான் எல்லோர்கூடயும் பேசுவேன். ஆனா, நானும் நவ்யாவும் பர்சனலா ரொம்ப குளோஸ். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குற இமான் அண்ணாச்சியை நவ்யா பயங்கரமா கலாய்ச்சியிருக்கா" என்றவர் நவ்யாவுடனான நட்பைப் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

``இந்த சீரியலில் எனக்குக் கிடைச்ச பொக்கிஷம்னா அது நவ்யாதான். வாட்ஸ் அப் மூலமா எல்லோர்கூடயும் பேசுவேன். ஆனா,  என்னுடைய சாட்ல தினமும் இருக்கிற பெயர் நவ்யா மட்டும்தான். அவளுடைய ஊர் ஹைதராபாத். அவளுக்குக் கொஞ்சமும் தமிழ்ப் பேசத் தெரியாது. நிறைய தமிழ் வார்த்தைகள் அவளுக்குக் கத்துக் கொடுப்பேன். அவளை மாதிரி யாராலும் கிண்டல் பண்ண முடியாது. எல்லோரையும் வெச்சு செஞ்சிடுவா. ரொம்ப போல்டா இருப்பா. அவகூடப் பழகுறவங்களை, அவளை மாதிரி அன்பா வேற யாராலும் பார்த்துக்க முடியாது. 

வாணி ராணி ஸ்ருதி

நான் ராணியோட மருமகள். நவ்யா வாணியோட மருமகள். எங்க இரண்டு பேருக்குமிடையே காம்பினேஷன் சீன்ஸ் அதிகம் இல்லைன்னாலும் நாங்க ரெண்டு பேரும் ரொம்ப குளோஸ். செட்ல எல்லோர்கூடயும் பேசினாலும், நவ்யாகிட்ட மட்டும்தான் என் பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துப்பேன். அவளும் அப்படித்தான். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா செம லூட்டியா இருக்கும். ஆரம்பத்துல நவ்யா ரொம்ப ஆட்டிட்யூட் காட்டுவான்னு சொன்னாங்க. அதனால நானும் அவகூட பேசவே இல்லை. `வாணி ராணி' சீரியல் ஷூட்டிங்கிற்காக ஆஸ்திரேலியாவிற்குப் போயிருந்தோம். அப்போதான் அவ ரொம்ப ஸ்வீட்னு தெரிஞ்சது. மனசுல தோணுறதை ஓப்பனா சொல்லிடுவா. இப்போ நானும், நவ்யாவும் மட்டும் அடுத்த மாசம் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு ட்ரிப் போகலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். ஏனா, அந்த ட்ரிப்தான் எங்களை குளோஸ் ஆக வைச்சது" என்றவர் புன்னகைத்து தொடர்ந்தார்,

``நீல்கிரிஸ் ஃபேஷன் வீக் நடந்தப்போ, என் ஷோவுக்காக ஹைதராபாத்துலேருந்து வந்து, ரேம்ப் வாக் பண்ணியிருக்கா. சென்னையில  எனக்கு குளோஸா இருந்தவங்க கூட வரலை. ஆனா, அவ எனக்காக அவ்வளவு தூரத்திலேருந்து ஊட்டிக்கு வந்திருந்தை எப்பவும் மறக்கமாட்டேன். நிறைய இடங்களுக்கு நாங்க ரெண்டு பேரும் போயிருக்கோம். இப்பவும் மனசு கஷ்டமா இருந்துச்சுன்னா உடனே அவளுக்குத்தான் போன் பண்ணுவேன். நவ்யா செம அட்வைஸர். இந்த விஷயம் பண்ணுனா சரியா இருக்கும்னு என்னை வழிநடத்துவா. எங்க ரெண்டு பேருடைய கேரக்டரும் பயங்கரமா செட்டாகிடுச்சு. வாழ்நாள் முழுவதும் எங்களுடைய நட்பு தொடரும்" என நெகிழ்கிறார், ஸ்ருதி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close