Published:Updated:

``தேதி கன்ஃபார்ம் ஆனதும் சொல்றேன்!’’ - `ராஜா ராணி’ ஷப்னம

வெ.வித்யா காயத்ரி

``எங்க அம்மா, அப்பாகிட்ட எப்படி அடம் பிடிப்பேனோ அதே மாதிரிதான் இவங்ககிட்டேயும் அடம் பிடிப்பேன்.’’

``தேதி கன்ஃபார்ம் ஆனதும் சொல்றேன்!’’ - `ராஜா ராணி’ ஷப்னம
``தேதி கன்ஃபார்ம் ஆனதும் சொல்றேன்!’’ - `ராஜா ராணி’ ஷப்னம

`ராஜாராணி’ சீரியலில் க்யூட் வில்லியாக நடித்து ஸ்கோர் வாங்குபவர் ஷப்னம். இன்னோசென்ட்டான வில்லியாக வலம்வரும் இவர் நிஜத்திலும் இன்னோசென்ட்டாம்! அதே இன்னோசென்ட்டுடன் நம்மிடையே பேசத் தொடங்கினார்.

``நார்மலாகவே நான் கொஞ்சம் குழந்தைத்தனத்தோட நடந்துப்பேன். சீரியலில் நடிக்கும்போதும் அதே மாதிரியே நடிப்பேன். அந்தக் கதாபாத்திரத்துக்கு நான் கொடுக்கிற ரியாக்‌ஷன்ஸ் க்யூட்டா இருக்குன்னு டைரக்டரும் அப்படியே நடிக்கச் சொல்லிடுவார். அதனால என் ஒரிஜினல் கேரக்டரை ஸ்கிரீன்லேயும் அப்ளை பண்றேன்’’ என்றவரிடம் `ராஜாராணி’ சீரியல் அனுபவம் குறித்துக் கேட்டோம்.

``ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்பவே சிம்பிளாதான் இருப்பேன். கேமராவுக்குப் பின்னாடி டிக்டாக் வீடியோ இல்லைன்னா ஃப்ரெண்ட்ஸ் கூட பேசிட்டு இருப்பேன். ஷூட் ஆரம்பிச்சதும் சீரியஸாகிடுவேன். கொஞ்சம் பாடிலேங்குவேஜ்லாம் மாற்றி நடிப்பேன். செட்ல எப்பவும் கலகலன்னு இருப்பேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் டிக்டாக் வீடியோதான் என்னுடைய ஸ்டிரெஸ் பஸ்டர். எங்க வீட்டுல மூணு நாய், ஒரு கிளி வைச்சிருக்கேன். இப்போ புதுசா இரண்டு கிளி வாங்கிட்டு வந்துருக்கேன். வீட்டுக்கு போனதுமே அவங்ககூடதான் நேரம் செலவழிப்பேன். அவங்க கூட இருக்கும்போது நேரம் போகுறதே தெரியாது. அதுக்கு அப்புறம் டிக்டாக் வீடியோதான் என் பேவரைட். டிக்டாக் என்னுடைய ஸ்ட்ரெஸ் பஸ்டர்... கொஞ்சம் டென்ஷனா இருந்தாகூட டிக்டாக் வீடியோ பண்ணும்போது அந்த டென்ஷன் மறந்துபோய் அடுத்து என்ன வீடியோ பண்ணலாம் என்கிற எண்ணம் வந்திடுது. உண்மையைச் சொல்லணும்னா அந்த வீடியோ பண்றப்போ நான் ஜாலியா பீல் பண்றேன்.

நார்மலா நான் ரொம்பவே அடம் பிடிப்பேன். என் தம்பிக்காக நான் எதையும் விட்டுக் கொடுத்தது இல்லை. ஆனா, என் தம்பி எனக்காக விட்டுக் கொடுத்திடுவான். வீட்டுல நான் பயங்கர அப்பா செல்லம். அவருக்கு உடம்பு முடியலைன்னாகூட என்னை ஷூட்டிங் ஸ்பாட்ல விட்டுட்டு மறுபடி கூட்டிட்டு வருவார். என்னை அன்பா பார்த்துக்குற குடும்பம் கிடைச்சது என் பலம். அவங்க சப்போர்ட் இல்லைன்னா நான் இல்லைங்க என்றவரிடம் உங்க திருமண தேதி தள்ளிப்போயிருக்கேன்னு கேட்டோம்.

நிறைய பேர் பெண் கேட்டு வருவாங்கன்னு முதல்லயே நிச்சயதார்த்தம் பண்ணிக்கிட்டோம். திருமணத்தைப் பொறுத்தவரை எங்க இரண்டு பேருடைய வீட்டுல உள்ள பெரியவங்க பேசி முடிவெடுத்ததுதான். அவர் ஐ.டி கம்பெனி வைச்சிருக்கார். அதைப் பார்த்துக்கிறதில் அவர் பிஸி. ஷூட்டிங்கில் நான் பிஸி. இடையில், பொண்ணுக்கு இந்த நேரத்தில்தான் திருமணம் செய்யணும்னு சொல்லியிருந்தாங்க. அதனால அதுவரைக்கும் தள்ளி வைச்சோம். அப்படியே தள்ளி, தள்ளி ஏப்ரல் மாதத்தில் திருமண தேதி குறிக்கலாம்னு நினைச்சோம். ஆனா, ஏப்ரலில் ரம்ஜான் வரும். ரம்ஜானுக்கு நிறைய பேர் விரதம் இருப்பாங்க. அந்த சமயத்தில் திருமணம் வைச்சா நல்லா இருக்காதுன்னு தோணுச்சு. அதனால, ஜூன்ல திருமணம் வைக்கலாம்னு பேசிட்டு இருக்காங்க. தேதி கன்ஃபார்ம் ஆனதும் கண்டிப்பா சொல்றேங்க.

அவரும் நானும் எப்பவும் பிஸிங்கிறதுனால எப்போவாச்சும்தான் மீட் பண்ணிப்போம். எங்க அம்மா, அப்பாகிட்ட எப்படி அடம் பிடிப்பேனோ அதே மாதிரிதான் இவங்ககிட்டேயும் அடம் பிடிப்பேன். எனக்கு ஷாப்பிங் போறதுன்னா பயங்கர இஷ்டம். அவரே எனக்கு என்ன பிடிச்சதுன்னு பார்த்துப் பார்த்து செஞ்சுக் கொடுப்பார். என்கிட்ட இருக்கிற குழந்தைத் தன்மையை அவர் ரசிக்கிறார். சீக்கிரமே நாங்க தம்பதியாகப் பேட்டிக் கொடுக்கிறோம்’’ எனப் புன்னகைக்கிறார் ஷப்னம்.

வெ.வித்யா காயத்ரி

எளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்! 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.