``அம்மா வீட்டுக்கு ஒண்ணு, மாமியார் வீட்டுக்கு ஒண்ணு... ரெண்டு வளைகாப்பு!’’ - ஸ்ரீரஞ்சனி அமித் பார்கவ் | Sriranjani Amit shares her pregnancy and yoga experience

வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (31/03/2019)

கடைசி தொடர்பு:12:04 (01/04/2019)

``அம்மா வீட்டுக்கு ஒண்ணு, மாமியார் வீட்டுக்கு ஒண்ணு... ரெண்டு வளைகாப்பு!’’ - ஸ்ரீரஞ்சனி அமித் பார்கவ்

``நான் பண்ற எக்ஸர்சைஸ் எல்லோரும் பண்ண முடியுமான்னு எனக்குத் தெரியலை. புதுசா பண்றவங்க கண்டிப்பா அவங்க காட்டுகிற டாக்டர்கிட்ட ஆலோசனைகள் கேட்டுட்டு பண்றது நல்லது.’’

ஆர்.ஜே, தொகுப்பாளினி, நடுவர் எனப் பன்முகம் கொண்டவர் ஸ்ரீரஞ்சனி. இவருடைய கணவர் அமித் பார்கவ். இந்த நட்சத்திர தம்பதி இன்னும் கொஞ்ச மாதங்களில் பெற்றோர்களாக ஆகியிருப்பார்கள். தாய்மையைத் தினந்தோறும் கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருக்கிறார் ஸ்ரீரஞ்சனி. அவரிடம் பேசினோம்.

அமித் மனைவியுடன்

``நான் யோகா பண்ற புகைப்படங்களில் சிலவற்றை என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பேன். யோகாவில் புதுசா ஏதாவது ஒரு பயிற்சியை செய்றதைதான் அவாய்டு பண்ணச் சொல்லுவாங்க. முன்னாடியே நீங்க யோகா பயிற்சி எடுத்துட்டு வர்றீங்கன்னா, அது உங்களுடைய உடம்புக்குப் பழக்கப்பட்ட விஷயமா இருக்கும். அதைப் பண்ணும்போது எந்தப் பிரச்னையும் ஏற்படாது. நான் ஆரம்பத்திலிருந்தே யோகா பண்ணுவேன். மாசமா இருக்கேங்குறது தெரியுறதுக்கு முன்னாடியிலிருந்து யோகா பண்ணிட்டு இருந்தேன். தெரிஞ்சதுக்கு அப்புறமும் தொடர்ந்து பண்ண ஆரம்பிச்சேன். அப்படிப் பண்ணும்போது பல மாற்றங்களை ஃபீல் பண்ண முடிஞ்சது. என் நண்பர்களுக்கும் யோகா பண்ணச் சொல்லி அட்வைஸ் பண்ணியிருக்கேன். 

யோகா

நிறைய பேர் மாசமா இருக்கும்போது வயிற்றில் வலி இருக்கும்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி யோகா பண்ணும்போது வலி இருக்காது. ரொம்ப பாசிட்டிவா, ஹாப்பியா இருக்கும். நான் எப்பவும் ஆக்டிவா இருக்கேன். இப்போ எனக்கு எட்டு மாசம் ஆகுது. யோகாவும் டான்ஸும் எப்பவும் பண்ணிட்டிருப்பேன். அதை மாசமானதுக்கு அப்புறமும் தொடர்ந்து பண்றப்போ எந்தப் பிரச்னையும் இல்லை. நான் பண்ற எக்ஸர்சைஸ் எல்லோரும் பண்ண முடியுமான்னு எனக்குத் தெரியலை. புதுசா பண்றவங்க கண்டிப்பா அவங்க காட்டுகிற டாக்டர்கிட்ட ஆலோசனைகள் கேட்டுட்டு பண்றது நல்லது’’ என்றவரிடம் வளைகாப்பு குறித்துக் கேட்டோம்.

``எனக்கு இரண்டு முறை வளைகாப்பு விஷேசம் நடந்ததுங்க. பெங்களூரில் மாமியார் வீட்டுல வளைகாப்பு வைச்சாங்க. அப்புறம் அம்மா வீட்டுல இந்த மாசம் சீமந்தம் நடத்துனாங்க. குழந்தைங்க ஈஸியா அம்மாவுடைய குரலைக் கண்டுபிடிச்சிருவாங்க. ஏன்னா, அம்மா வயித்துக்குள்ள இருக்கிறதுனால அந்த கனெக்ட் இருக்கும். ஆனா, என் குழந்தை அமித் குரலையும் நல்லா தெரிஞ்சு வைச்சிருக்காங்க. அவர் தினமும் புக் படிச்சு காட்டுவார், பாப்பாவுக்காகப் பாட்டு பாடுவார். அவர் குரல் கேட்டாலே பாப்பா ரொம்ப ஜாலியாகிடுவாங்க. என்னைக்காவது வயித்துல ரொம்ப உதைச்சிட்டு இருந்தாங்கன்னா அமித்தை பாடச் சொல்லுவேன். அவர் பாடினா அப்படியே உதைக்கிறதை நிறுத்திடுவாங்க. முதல் குழந்தைங்குறதுனால ஒவ்வொரு விஷயத்தையும் என்ஜாய் பண்றோம். 

வளைகாப்பு

நானும் சரி, அமித்தும் சரி டிராவல் மீது பிரியம் உள்ளவர்கள். மாசமா இருக்கும்போதே சில இடங்களுக்கு டிராவல் பண்ணினோம். என்னுடைய அடுத்த வெப் சீரிஸ் ஒன்று எழுதிட்டு இருக்கேன். அந்த ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்கும். பாப்பாவுடைய முதல் இன்டர்நேஷனல் டிரிப் வெப் சீரிஸ் புரொடக்‌ஷனுக்காகத்தான் இருக்கும். கொஞ்சம் பாப்பா வளர்ந்ததும் அந்த ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்னு பிளான் பண்ணியிருக்கேன். 

குழந்தைப் பேறு சமயத்தில் டிரெஸ் கம்ஃபர்டபுளா போடுறதும் முக்கியம். தாய்ப்பால் கொடுக்கிறது குழந்தைங்களுக்கு ரொம்ப முக்கியம். குழந்தைகளுக்கு நிறைய சக்தி கிடைக்கும். எந்த வேலை செஞ்சாலும் நம்மளுடைய 100% உழைப்பை போடுறோம். அதே மாதிரி ஒரு உயிரை இந்த உலகத்துக்குக் கொண்டுவரப் போகிறோம். நம்மளால முடிஞ்ச எல்லாத்தையும் அந்த உயிருக்குக் கொடுக்கிறதுதானே முறை!’’ எனப் புன்னகைக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்