Published:Updated:

''என் முகத்துக்கு கர்லிங் ஹேர் செட்டாகலை'' - 'நிலா' பவித்ரா

வெ.வித்யா காயத்ரி
''என் முகத்துக்கு கர்லிங் ஹேர் செட்டாகலை'' - 'நிலா' பவித்ரா
''என் முகத்துக்கு கர்லிங் ஹேர் செட்டாகலை'' - 'நிலா' பவித்ரா

ன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் `நிலா'. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் பவித்ரா. இவர், வீஜேவாக அறிமுகமாவதற்கு முன்பே மாடலிங் துறையில் தடம் பதித்தவர். `மிஸ் சவுத் இந்தியா 2017' பட்டத்தைக் கைப்பற்றியவர். அவரிடம் பேசினோம்.

ஆங்கரிங் எனக்கு பிடிச்ச விஷயம். ஆங்கரிங் பண்ணிட்டு இருக்கும் போதுதான் எதிர்பாராமல் மாடலிங் வாய்ப்பு கிடைச்சது. ஆங்கரிங், மாடலிங்னு பிஸியா ஓடிட்டு இருந்தேன். சன் டிவியில் `வணக்கம் தமிழா' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டு இருந்தேன். அந்தச் சமயம் `நிலா' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. சரி, டிரை பண்ணிப் பார்க்கலாம்னு ஓகே சொன்னேன்.

ஆங்கரிங் பொறுத்தவரைக்கும் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி பேசினால் போதுமானது. அது வேற மாதிரியான ஒர்க். சீரியலில் நடிக்கணுங்குறது கொஞ்சம் வித்தியாசமானது. நான் நிறைய ஷார்ட் ஃபிலிமில் நடிச்சிருக்கேன். ஆனாலும், சீரியல் புது அனுபவமாகத்தான் இருந்துச்சு. ஏன்னா, முழு நாள் ஷூட்டிங் நடக்கும். ஒரு நாளைக்கு இத்தனை ஷாட் எடுக்கணும்னு இருக்கும். ஆரம்பத்தில் பல விஷயங்கள் தெரியலை. இப்போ நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன் என்றவரிடம் ஆக்டிங், விஜே, மாடலிங் எப்படிச் சாத்தியம் எனக் கேட்டோம்.

நான் இரண்டு வருஷத்துக்கும் மேல பல மீடியா துறையில் இருக்கேன். இப்போதான் என்னைப் பற்றி வெளியே தெரிய ஆரம்பிச்சிருக்கு. எனக்கு ஆங்கரிங் பண்றதுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, சீரியலில் ஷூட்டில் பிஸியா இருக்கிறதுனால என்னால ஆங்கரிங் பண்ண முடியலை. உண்மையைச் சொல்லணும்னா ஆங்கரிங்கை ரொம்ப மிஸ் பண்றேன். 

நான் நார்மலா வெஸ்டர்ன் காஸ்டியூமில்தான் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியிருக்கேன். இந்த சீரியலில் பக்கா ஹோம்லி லுக். ஆரம்பத்தில் எனக்கு கர்லி ஹேர் செட் பண்ணாங்க. கர்லி ஹேர் என் முகத்துக்குச் செட்டாகலை. அப்புறம் என்னுடைய நார்மல் ஹேர் ஸ்டைலையே இந்த சீரியலில் மெயின்டெயின் பண்ணச் சொல்லிட்டாங்க.

சீரியலில் எனக்கு அம்மா, அப்பாவாக நடிக்கிற சாதனா அம்மா கூடவும், ரவி அப்பா கூடவும் நான் ரொம்ப குளோஸ். சின்னச் சின்ன விஷயங்களும் அவங்க நோட் பண்ணி இதை இப்படி பண்ணா நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. அவங்ககிட்ட இருந்து பல விஷயங்களை கத்துக்கிட்டேன். சாதனா அம்மா சீரியலில்தான் வில்லி; நேர்ல ரொம்பவே ஸ்வீட். அதே மாதிரி அவங்க சூப்பரா சமைப்பாங்க. மதிய உணவு எப்பவும் நான், சாதனா அம்மா, ரவி அப்பா எல்லோரும் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்து ஷேர் பண்ணிச் சாப்பிடுவோம். 

நான் ஆங்கர்ங்குறதுனால எல்லோர்கூடயும் ஈஸியா ஜெல் ஆகிடுவேன். இந்த சீரியலைப் பொறுத்தவரை நானும், சாதனா அம்மாவும்தான் ரொம்ப நேரம் ஒன்றாக இருப்போம். நானும் சரி, அவங்களும் சரி நிறைய விஷயங்களை ஷேர் பண்ணிப்போம். சீரியலில் பிஸியாக இருக்கிறதுனால ஆங்கரிங், மாடலிங்கில் கவனம் செலுத்த முடியலை. வெள்ளித்திரையில் ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். ஆனா, இன்னும் அந்தப் படம் ரிலீஸ் ஆகலை. இப்போதைக்கு `நிலா' மேல மட்டும்தான் கவனம் செலுத்துறேன்.

இந்த சீரியலில் நடிக்கிறதுக்கு முன்னாடி என்னை வெளியில் பார்க்குறவங்க இவங்க அந்த ஷோவுடைய விஜேன்னு சொல்லுவாங்க. இப்போ என்னை நிலா சீரியலில் நடிக்குறவங்கன்னு சொல்றாங்க. அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடிச்சிருக்கேன்னு ஹாப்பியா இருக்கு எனப் புன்னகைக்கிறார், பவித்ரா.

வெ.வித்யா காயத்ரி

எளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்! 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.