''என் கணவருக்கு இப்படியொண்ணு நடந்ததே இல்லை!’’ - நெகிழும் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் | its my husband's best birthday gift ever says senthil rajalakshmi ganesh

வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (10/04/2019)

கடைசி தொடர்பு:13:37 (10/04/2019)

''என் கணவருக்கு இப்படியொண்ணு நடந்ததே இல்லை!’’ - நெகிழும் ராஜலட்சுமி செந்தில் கணேஷ்

''என் கணவருக்கு இப்படியொண்ணு நடந்ததே இல்லை!’’ - நெகிழும் ராஜலட்சுமி செந்தில் கணேஷ்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகுக்கு அறிமுகமான ஜோடி செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர். தன்னுடைய கணவரின் பிறந்தநாளுக்கு அவரே எதிர்பார்க்காத பரிசு ஒன்று கொடுத்து அசத்தியிருக்கிறார், ராஜலட்சுமி. அந்த ஸ்வீட் சர்ப்ரைஸ் குறித்து ராஜலட்சுமி செந்தில் கணேஷிடம் கேட்டோம்.

ராஜலட்சுமி

பொதுவாகவே என் பிறந்தநாளுக்கு அவரும், அவர் பிறந்தநாளுக்கு நானும் எந்த சர்ப்ரைஸும் பண்ணிக்க மாட்டோம். அவர் ரொம்ப நாளா ஆர்மோனியப் பெட்டி வாங்கணும்னு சொல்லிட்டே இருந்தார். ஆர்மோனியப் பெட்டி வாங்குறது பெரிய விஷயமில்லை. கடைக்குப் போனா வாங்கிக்கலாம். ஆனா, இசைத்துறையில் மிகப் பெரிய ஆளுமையாக இருக்கிறவங்க கையால ஆர்மோனியத்தை வாங்கினால் அது மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்னு அவர் சொல்லிட்டே இருந்தார். ஆனா, அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஒரு கட்டத்துக்கு மேல அப்படியொரு பரிசு யார்கிட்ட இருந்தும் வரப்போறதில்லைனு முடிவு பண்ணி, நாங்களே ஒரு ஆர்மோனிய பெட்டியை வாங்கிட்டோம். 

வீட்டிலிருக்கிற ஆர்மோனியப் பெட்டியில் மிகப்பெரிய ஆளுமைகிட்ட கையொப்பம் வாங்கலாம்னு நினைச்சேன். அந்தச் சமயத்தில்தான் இசைஞானி இளையராஜா ஐயாவுடைய ஆபீஸ்ல இருந்து வாய்ஸ் டெஸ்ட்டுக்குக் கூப்பிட்டாங்க. ஐயாகிட்ட, ஆர்மோனியப் பெட்டியில் கையொப்பம் வாங்கி பிறந்தநாள் பரிசா என் கணவருக்குக் கொடுக்கலாமேன்னு தோணுச்சு. முதலில் வாய்ஸ் டெஸ்ட்டுக்கு போனப்போ அவர்கிட்ட எதுவும் கேட்க முடியலை. எப்படி ஐயாகிட்ட கையொப்பம் வாங்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். மறுபடி ராஜா சார் ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டாங்க. அன்னைக்கு மறுநாள்தான் என் கணவரோட பிறந்தநாள். ஸோ, கார்ல போகும்போது ஆர்மோனியப் பெட்டியை வைச்சுக் கொண்டு போகலாம், முடிஞ்சா ஐயா கிட்ட கையொப்பம் வாங்கலாம்... இல்லைனா விட்டுடலாம்னு என் கணவர்கிட்ட சொன்னேன். அவரும் சம்மதிச்சார். 

ராஜலட்சுமி

ஸ்டூடியோ போய் பாடி முடிச்சிட்டு கிளம்பும் நேரத்தில் ஐயா வந்தாங்க. அப்போ ஐயாவுடைய மேனேஜர்கிட்ட, ஆர்மோனியப் பெட்டியில் ஐயாவுடைய கையொப்பம் வேணும்னு கேட்டுட்டு இருந்ததைப் பார்த்துட்டு ஐயா என்னன்னு கேட்டாங்க. மேனேஜர் விஷயத்தைச் சொல்லவும், அவர் சிரிச்சிட்டு ஆர்மோனியப் பெட்டியில் கையொப்பம் எதுக்குன்னு கேட்டார். இல்லைங்க ஐயா, நாளைக்கு என் வீட்டுக்காரருக்குப் பிறந்தநாள். நீங்க கையொப்பம் போட்டு கொடுத்தீங்கன்னா அது அவருக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்னு சொன்னேன். சிரிச்சிட்டே ஓகே சொன்னார். ஓடிப்போய் ஆர்மோனியப் பெட்டியை எடுத்துட்டு வந்தேன். அப்போதான் என் வீட்டுக்காரருக்குச் சார் ஓகே சொன்னாங்கங்குறதே தெரியும். போட்டோ எடுத்துக்கலாமான்னு கேட்டோம். ஐயா அதுக்கும் சரின்னு சொன்னாங்க. ஐயா கையொப்பம் போடுற மாதிரி புகைப்படம் எடுத்தோம். இப்போ ஐயா போட்ட கையொப்பத்தை பத்திரமா பாதுகாக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கோம். இது அவருக்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு ! 

அவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். அதே மாதிரி விஜய் டிவி மிஸஸ் சின்னத்திரை டீம்மோட வெளியே போயிருந்தோம். அவங்க என் கணவருடைய பிறந்தநாளை தெரிஞ்சுகிட்டு கேக் வெட்ட பிளான் பண்ணியிருக்காங்க. அதை நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கலை. கடல் மண்ணுல அலைகள் காலை தொட்டு உரசிட்டு இருக்க, அவர் கேக் கட் பண்ணினார். இதுவரைக்கும் இப்படியொரு பிறந்தநாள் பரிசு அவருக்குக் கிடைச்சதேயில்லை. என் கணவர் ஹேப்பி அண்ணாச்சி... அது போதும் எனக்கு'' எனப் புன்னகைக்கிறார், ராஜலட்சுமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்