Published:Updated:

``அச்சச்சோ... ஸாரிகூட கேக்கலையேனு நயன்தாராவை திட்டிட்டேன்..!'' - `பாரதி கண்ணம்மா' செந்தில் குமாரி

வெ.வித்யா காயத்ரி

சினிமா, சீரியல்னு இரண்டுலும் பிஸியா நடிச்சிட்டு இருக்கேன். என்னைப் பொறுத்தவரைக்கும் சினிமாவைவிடவும் சீரியல் கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கு. இனிமே சீரியலில் நடிக்கக் கூடாதுன்னு ஒவ்வொரு தடவையும் நினைக்கிறேன்.

``அச்சச்சோ... ஸாரிகூட கேக்கலையேனு நயன்தாராவை திட்டிட்டேன்..!'' - `பாரதி கண்ணம்மா' செந்தில் குமாரி
``அச்சச்சோ... ஸாரிகூட கேக்கலையேனு நயன்தாராவை திட்டிட்டேன்..!'' - `பாரதி கண்ணம்மா' செந்தில் குமாரி

சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை செந்தில் குமாரி. எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு பக்காவாக செட்டாகக் கூடியவர். தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் ஈர்ப்பவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

"சினிமா எனக்குச் செட்டாகும். சீரியல் வேண்டாம்னு ஆரம்பத்திலேயே முடிவு பண்ணியிருந்தேன். ஆனா, 'சரவணன் மீனாட்சி' சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தப்போ எதுக்கு இதெல்லாம்னு கொஞ்சம் தயங்கினேன். அந்த சீரியலின் முந்தைய எபிசோட் நான் பார்த்திருக்கேங்குறதுனால நடிக்க சம்மதிச்சேன். அந்த சீரியல் மூலமா சின்னத்திரைக்குள் நுழைஞ்சேன்.

சீரியல் நல்லா போய்ட்டு இருக்கும்போதே சீரியலில் நடிச்சிட்டு இருக்கிற ஆர்ட்டிஸ்கள் சில காரணங்கள் விலக ஆரம்பிச்சாங்க. ஒரு ஃபேமிலி மாதிரி பழகிட்டு சிலர் வெளியேறும்போது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. அதே மாதிரி இந்த சீரியல் எனக்கு மிகப்பெரிய ஃபேம் கொடுத்துச்சு. திடீர்னு இந்த சீரியலை முடிக்கப் போறாங்கன்னு சொன்னதும் ஒரு மாதிரி ஆகிடுச்சு!" என்றவரிடம் பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பு குறித்துக் கேட்டோம்.

'சரவணன் மீனாட்சி' சீரியலுக்குப் பிறகு சீரியலில் நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணியிருந்தேன். 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடிக்கிறதுக்காக கூப்டாங்க. வேண்டாம்னு அவாய்டு பண்ண டிரை பண்ணேன். அவங்க கேரக்டர் சொன்னதும் எனக்குப் பிடிச்சிருந்தது. சரின்னு நடிக்க சம்மதிச்சேன். இந்த சீரியலில் நான்கு விதமாக நடிக்கிறேன். அன்பான அம்மாவாகவும், கணவரை கேலி, கிண்டல் பண்ற மனைவியாகவும் கண்ணம்மாகிட்ட ஸ்டிரிக்டாகவும், மற்ற எல்லோரிடமும் ஜாலியா காமெடி பண்ற மாதிரியும் நடிக்கிறேன். 

காமெடி கேரக்டரில் நடிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நிஜத்திலும் நான் பயங்கர ஜாலியான பர்சன். என் முகத்துக்கு நெகட்டிவ் சுத்தமா செட்டாகாது. வெளியில் என்னைப் பார்க்கிற பலரும் நீங்க வில்லியா நடிக்காதீங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. பர்சனலா எனக்கும் வில்லியா நடிக்க சுத்தமா பிடிக்கலை. செட்டுல எல்லோரையும் கலாய்ச்சிட்டு சிரிச்சிட்டே இருப்பேன்" என்றவரிடம் 'ஐரா'வில் நடித்த அனுபவம் குறித்துக் கேட்டோம்.

"ஐராவில் நடிக்கும்போது டைரக்டர் மேக்கப் முடிச்சவங்க முதல்ல வாங்க ஷாட் எடுத்துடலாம்னு சொன்னாங்க. நான் போகும்போது என்னை இடிச்சிட்டு ஒரு பொண்ணு போச்சு... பாரு... இடிச்சிட்டு ஒரு சாரிகூட கேக்கலையேனு திட்டினேன். என் அசிஸ்டென்ட்,  மேடம் இவங்க நயன்தாரான்னு சொன்னாங்க. கறுப்பு நிறத்துல மேக் அப் போட்டிருந்ததால் கொஞ்சம்கூட அடையாளம் தெரியலை. ஐயையோ நயன்தாராவையா திட்டினோம்னு ஒரு மாதிரி ஆகிடுச்சு. நயன் ரொம்ப ஸ்வீட். ஜாலியான பர்சன்.

சினிமா, சீரியல்னு இரண்டுலும் பிஸியா நடிச்சிட்டு இருக்கேன். என்னைப் பொறுத்தவரைக்கும் சினிமாவைவிடவும் சீரியல் கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கு. இனிமே சீரியலில் நடிக்கக் கூடாதுன்னு ஒவ்வொரு தடவையும் நினைக்கிறேன். ஏதாவது ஒரு காரணத்தால் தொடர்ந்து நடிக்க வேண்டியதாக இருக்கு. இப்போ நிறைய சீரியல் ஆஃபர் வந்துட்டு இருக்கு. ஆனா, எனக்கு ஆர்வமே இல்லை. இந்த ஒரு சீரியல் போதும்னு மனசுக்கு தோணுது. என் ஃபேமிலி எனக்கு ஃபுல் சப்போர்ட். சீரியல், சினிமான்னு பிஸியா ஓடிட்டு இருந்தாலும் வீட்டுக்கு வந்து உட்காரும்போது அவங்ககிட்ட இருந்து கிடைக்கிற அன்பை வார்த்தைகளுக்குள் அடக்க முடியாது. இது போதும் எனக்கு!" எனப் புன்னகைக்கிறார் செந்தில் குமாரி.

வெ.வித்யா காயத்ரி

எளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்! 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.