Published:Updated:

"என் கலரே இல்லை... நான் நடிக்க மாட்டேனு அழுதா" - `பாரதி கண்ணம்மா’ தனுஸ்ரீ அம்மா

வெ.வித்யா காயத்ரி

"கார்த்தி அங்கிள் என்னைவிட உன் கூட நிறைய பேர் செல்ஃபி எடுத்துக்கிறாங்களேன்னு சொல்லுவாங்க. அவ்வளவு ஃபேன்ஸ் எனக்கு இருக்காங்க!"

"என் கலரே இல்லை... நான் நடிக்க மாட்டேனு அழுதா" - `பாரதி கண்ணம்மா’ தனுஸ்ரீ அம்மா
"என் கலரே இல்லை... நான் நடிக்க மாட்டேனு அழுதா" - `பாரதி கண்ணம்மா’ தனுஸ்ரீ அம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'பாரதி கண்ணம்மா'. இந்த சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் யாழினி கதாபாத்திரத்தில் குட்டிப் பெண்ணாக நடிப்பவர் தனுஸ்ரீ. இவர் 'சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸன் 5'-யில் க்யூட் பர்ஃபார்மன்ஸ் கொடுத்து அனைவரையும் ஈர்த்தவர். அதுமட்டுமல்லாமல் 'கடைக்குட்டி சிங்கம்' படத்திலும் நடித்திருக்கிறார். அவருடைய அம்மா தீபலட்சுமி பேசினார்.

''தனுஸ்ரீக்கு 3 வயசாகும்போதுதான் லண்டனிலிருந்து சென்னைக்கு வந்தோம். தனுஸ்ரீக்கு சுத்தமா தமிழ் பேசத் தெரியாது. ஆனா, சின்ன வயசுல இருந்தே பாட்டு பாட ரொம்பவே ஆர்வமா இருப்பா. சென்னை வந்ததும் ஹிந்துஸ்தானி வகுப்பில் சேர்த்தோம். சூப்பர் சிங்கர் ஜூனியர் 5-ல் என்ட்ரியானது தனுஸ்ரீக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துச்சு. 

சூப்பர் சிங்கர் வந்ததுக்கு அப்புறம் தமிழ் பேசக் கத்துக்கிட்டா. அவளுக்குப் புரியலைன்னாலும் பல மொழிகளில் பாடுவதற்கு டிரை பண்ணிட்டே இருப்பா. ஒருமுறை சூப்பர் சிங்கர் ஷோவுக்கு நடிகர் கார்த்தி விருந்தினரா வந்திருந்தாங்க. அவரும் தனுஸ்ரீயும் சின்னதா ஒரு பர்ஃபார்மன்ஸ் பண்ணாங்க. அப்போவே தனுஸ்ரீயும் கார்த்தி சாரும் ஜெல் ஆகிட்டாங்க. அந்த நிகழ்ச்சி மூலமா 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் தனுஸ்ரீக்கு நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படத்துக்காகக் கூப்பிடும்போது, பாடுறதுக்காகத்தான் பாப்பாவைக் கூப்டுறாங்கன்னு நினைச்சோம். வாய்ஸ் டெஸ்ட்டும் கொடுத்துட்டு வந்தோம். ஆனா, அவங்க நடிக்கிறதுக்காகக் கூப்பிட்டாங்க. தனுஸ்ரீயுடன் சேர்ந்து அவளுடைய தம்பியையும் நடிக்க கேட்டாங்க. ரெண்டு பேரும் கார்த்தி சாருடைய கடைசி தங்கச்சிக்கு பசங்களாக நடிச்சிருப்பாங்க'' என்றவரிடம் சீரியல் வாய்ப்பு குறித்துக் கேட்டோம்.

விஜய் டிவி ஆபீஸ்ல இருந்து ஒரு சீரியலுக்கு ஆடிஷன் நடக்குது. அதில் கலந்துக்க முடியுமான்னு கேட்டாங்க. சரி டிரை பண்ணி பார்க்கலாம்னு தனுஸ்ரீயை ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப் போனோம். ஆடிஷன்ல செலக்ட் ஆகி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் என்ட்ரி ஆனாங்க. அந்த சீரியலில் நடிக்கிறதுக்கு முன்னாடியே பாப்பாவை தயார் பண்ண வேண்டியிருந்தது. தனுஸ்ரீயைக் கறுப்பாகக் காட்டுவதற்காக டல் மேக்கப் பண்ணாங்க. அந்த மேக்கப் முடிஞ்சதும் கண்ணாடி பார்த்துட்டு என் கலரே இல்லை... நான் கறுப்பா இருக்கேன்... நடிக்க மாட்டேன்னு அழ ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம், கலரில் ஒண்ணுமில்லை... மனசுதான் முக்கியம்! அதை நீ இந்த கேரக்டர் மூலமா சொல்லணும்னு அவங்களுக்குப் புரிய வைச்சேன். அதுக்கு அப்புறம் அவங்களே விரும்பி நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த செட்டில் எல்லோரும் ஃபேமிலி மாதிரிதான் இருப்பாங்க. ரூபாஸ்ரீ மேமும் தனுஸ்ரீயும் ரொம்ப குளோஸ். அவங்களே சில சமயம் நான் இப்படி நடிப்பேன். அதுக்கு நீ இப்படி ரியாக்‌ஷன் கொடுக்கணும் சரியான்னுலாம் சொல்லிக் கொடுப்பாங்க. நடிப்பைவிட பாடகியாகணும்னுதான் பாப்பாவுக்கு ஆசை. மாசத்துக்கு ஒருநாள் கச்சேரி பண்ணிட்டு இருக்காங்க. இதுக்கிடையில், மதுரையில் ஒரு புரொகிராமில் பாப்பாவைப் பார்த்துட்டு பாரதிராஜா சார் அவருடைய அடுத்த படத்தில் தனுஸ்ரீயைப் பாட வைக்கிறதா சொல்லியிருக்காங்க. வாய்ப்புக்காக இப்போ நாங்க காத்துட்டு இருக்கோம்" என்றவரிடம் ஃபேமிலி குறித்துக் கேட்டோம்.

"நான் சைக்காலஜிஸ்ட். தனியா கிளினிக் வைச்சிருக்கேன். இப்போ பாப்பாவைப் பார்த்துக்கிறதுனால கிளினிக் போக முடியலை. ஃப்ரீ டைமில் கவுன்சிலிங் கொடுத்துட்டு இருக்கேன். தனுஸ்ரீ அப்பா பிசினஸ் பண்றாங்க. தனுஸ்ரீ என்னலாம் பண்றாங்களோ அதை அவங்களுடைய குட்டித் தம்பி காப்பி பண்ணிட்டு இருக்காங்க என்றதும் தனுஸ்ரீ தொடர்ந்தார்.

"ஹாய் அக்கா... இப்போ நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன். நான் எங்க மிஸ் கூட ரொம்ப குளோஸ். ஸ்கூல்ல எல்லா கிளாஸ்லேயும் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லோரும் நான் சூப்பரா நடிக்கிறேன்னு சொல்றாங்க. ஸ்கூல் முடிச்சிட்டு நடிக்கப் போயிடுவேன். வெளியில் என்னைப் பார்க்கிறவங்க எல்லோரும் என் கூட செஃல்பி எடுத்துப்பாங்க. அதுமட்டுமல்லாமல், என்னைப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. நானும் ஜாலியா பாடுவேன். 

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... கார்த்தி அங்கிள் என்னைவிட உன் கூட நிறைய பேர் செல்ஃபி எடுத்துக்கிறாங்களேன்னு சொல்லுவாங்க. அவ்வளவு ஃபேன்ஸ் எனக்கு இருக்காங்க!" எனச் சிரிக்கிறார் க்யூட் தனுஸ்ரீ.

வெ.வித்யா காயத்ரி

எளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்! 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.