Published:Updated:

"பேப்பர்ல நியூஸ் போடுறதுக்கு முன்னாடி கிராஸ் செக் பண்ணியிருக்கலாம்'' - `ராஜா ராணி' ரித்திகா

வெ.வித்யா காயத்ரி

"என் புகைப்படத்தை பேப்பரில் பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன். ஒரு பத்திரிகையாளர் என்னைத் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்னை குறித்துக் கேட்டார்"

"பேப்பர்ல நியூஸ் போடுறதுக்கு முன்னாடி கிராஸ் செக் பண்ணியிருக்கலாம்'' - `ராஜா ராணி' ரித்திகா
"பேப்பர்ல நியூஸ் போடுறதுக்கு முன்னாடி கிராஸ் செக் பண்ணியிருக்கலாம்'' - `ராஜா ராணி' ரித்திகா

ரித்திகா டிக் டாக் பிரபலம்... அதன் மூலம் 'ராஜா ராணி' வாய்ப்பு என பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர். சமீபத்தில் ரித்திகாவை திருமணம் செய்வேன் என்று ஓர் இளைஞர் வீட்டு வாசல் முன் நின்றதாகச் செய்திகள் பரவின. இதுகுறித்து தெரிந்துகொள்ள அவரிடம் பேசினேன்.

சீரியல் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?

நான் மும்பையில் ஆங்கரிங் பண்ணிட்டு இருந்தேன். எனக்கு சீரியலில் நடிக்கணுங்குற ஐடியா சுத்தமா கிடையாது. என் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பார்த்துட்டு ராஜாராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அது ரொம்பவே ஃபேமஸான சீரியல்னு தெரியும். அவங்களுக்கும் உடனடியாக அந்த கேரக்டருக்கு ஆள் தேவையிருந்துச்சு. இப்படித்தான் ராஜாராணி வாய்ப்பு கிடைச்சது. இந்த சீரியலுக்காக மும்பையிலிருந்து சென்னைக்கு ஷிப்ட் ஆகியிருக்கேன்.

"பேப்பர்ல நியூஸ் போடுறதுக்கு முன்னாடி கிராஸ் செக் பண்ணியிருக்கலாம்'' - `ராஜா ராணி' ரித்திகா

ஆங்கரிங் பண்ணிட்டு இருந்தேன்னு சொன்னீங்களே?

நான் எம்.எஸ்சி சாஃப்ட்வேர் முடிச்சிருக்கேன். படிச்சிட்டு இருக்கும் போது பார்ட் டைமா ஏதாவது வேலைக்குப் போகலாம்னு நினைச்சேன். அந்தச் சமயம் எதிர்பாராம ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சது. அந்த வாய்ப்பை சரியா பயன்படுத்திட்டு தொடர்ந்து ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சேன். போகப் போக ஆங்கரிங் என் ஃபேவரைட் ஆகிடுச்சு.

ஃபேமிலி சப்போர்ட்?

எனக்கு என் அம்மா ஃபுல் சப்போர்ட். அப்பா ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கினாங்க. ஆனா, தடுக்கலை. நான் எது பண்ணாலும் யோசிச்சு தான் பண்ணுவேன்னு அவங்களுக்குத் தெரியும். அதனால, பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. அவங்க கொடுக்கிற சப்போர்ட்னாலதான் இந்த அளவுக்கு என்னால வர முடிஞ்சிருக்கு.

இப்பவும் ஆங்கரிங் பண்றீங்களா?

ஆங்கரிங் பண்ணணும்னு ஆசைதான். ஆனா, அதற்கான நேரமில்லை. முன்னாடி பதினைந்து நாளைக்கு ஒரு முறை மும்பை போய் ஆங்கரிங் பண்ணிட்டு இருந்தேன். அது படிப்படியா குறைஞ்சு இப்போ நான் ஃப்ரீயா இருக்கும்போது தேவை இருந்தால் போய் ஆங்கரிங் பண்ணிட்டு வந்துட்டு இருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா ஆங்கரிங்கை ரொம்பவே மிஸ் பண்றேன்.

"பேப்பர்ல நியூஸ் போடுறதுக்கு முன்னாடி கிராஸ் செக் பண்ணியிருக்கலாம்'' - `ராஜா ராணி' ரித்திகா

`டிக்டாக்' பிரபலம் ஆனது எப்படி?

சும்மா பொழுதுபோக்குக்காக ஆரம்பிச்சதுதான் டிக்டாக் வீடியோ. நாம அழகா டிரெஸ் பண்ணியிருந்தோம்னா எப்படி செல்ஃபி எடுப்போமோ அப்படித்தான் டிக்டாக் வீடியோவும். என் கூட வேலை பார்க்கிறவங்க டிக்டாக் பண்ணிட்டு இருந்தாங்க. நாமளும் டிரை பண்ணி பார்க்கலாம்னு ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் இத்தனை பேர் நம்மளை பாலோ பண்றாங்க நல்லா பண்ணணும்னு ஒவ்வொரு வீடியோவா பண்ண ஆரம்பிச்சேன். அதை என் நண்பர்கள் பார்ப்பாங்கன்னு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணினேன். அதைப் பார்த்துட்டு சீரியல் வாய்ப்பு வரும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை.

`டிக்டாக்' தடை பற்றி என்ன நினைக்கிறீங்க?

இந்தத் தளத்தை தங்களுடைய திறமையை வெளிக்காட்டணும்னு பயன்படுத்துறவங்க இருக்காங்க. உண்மையான திறமை இருக்கிற பலரும் இதுல அடையாளம் கண்டுபிடிக்கப்படுறாங்க. நடிப்புன்னு இல்லை... சிலர் பியூட்டி டிப்ஸ் சொல்றாங்க... சிலர் பாட்டு பாடுறாங்க... இப்படி அவங்க, அவங்க திறமையை வெளியில் காட்டுறாங்க. சிலர், இந்தத் தளத்தை தவறா பயன்படுத்துறாங்க. குழந்தைங்க, பெரியவங்கன்னு எல்லோரும் டிக்டாக் வீடியோஸ் பார்க்குறாங்க. அவங்க முகம் சுளிக்கிற அளவுக்கு சில வீடியோஸூம் இதில் வரத்தான் செய்யுது. எல்லா இடத்திலும் எப்படி ப்ளஸ், மைனஸ் இருக்குமோ அப்படித்தான் இதிலும் இருக்கு. அதை நாம எப்படிப் பயன்படுத்துறோம் என்பதுதான் முக்கியம்.

"பேப்பர்ல நியூஸ் போடுறதுக்கு முன்னாடி கிராஸ் செக் பண்ணியிருக்கலாம்'' - `ராஜா ராணி' ரித்திகா

உங்களைத் திருமணம் செஞ்சுக்கணும்னு சொல்லி ஒருவர் உங்க வீட்டுக்கு வந்து பிரச்னை பண்ணினார்னு கேள்விப்பட்டோமே?

இந்தச் செய்தியை நீங்க எப்படி நியூஸ் பார்த்து தெரிஞ்சுகிட்டீங்களோ நானும் அப்படித்தான் தெரிஞ்சுகிட்டேன். நான் கொஞ்சம்கூட இந்த விஷயத்தில் சம்பந்தப்படலை. அந்தப் பையன் என்னைத் தேடிப்போன இடம் வேற, பார்த்த ஆளுங்களும் வேற! அவர் மனரீதியாக ஏதோ பிரச்னை உள்ள நபர்னு பேப்பரில் குறிப்பிட்டிருந்தாங்க. என் புகைப்படத்தைப் பேப்பரில் பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன். ஒரு பத்திரிகையாளர் என்னைத் தொடர்புகொண்டு இந்தப் பிரச்னை குறித்துக் கேட்டார். அதுமட்டுமல்லாமல், வடபழனி காவல் நிலையத்தில் பதியப்பட்டிருந்த கேஸ் குறித்தும் சொன்னார். அவர் சொன்னதுக்கு அப்புறம்தான் போலீஸ் ஸ்டேஷனில் அந்தப் பையன் என் போட்டோவை காட்டியிருக்கிறார் என்பதும், அவர் வேறு ஒரு இடத்துக்குப் போயிருக்கார் என்பதும் தெரிஞ்சது. இது நான் சம்பந்தப்படாத விஷயம் என்பதால் இந்தப் பிரச்னையை ஈஸியா கடந்துட்டேன்.

ஆனா, என்னைச் சார்ந்தவங்க பேப்பர் பார்த்துட்டு என்ன பிரச்னைன்னு கேட்க ஆரம்பிச்சப்போதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. ஒரு பொண்ணு போட்டோ, அவங்களுடைய ஃபேமிலி பெயர்னு எல்லாமே பேப்பரில் வருதுன்னா அது அந்தக் குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும். நியூஸ் போடும்போது இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்திருக்கே இதுல நீங்க சம்பந்தப்பட்டு இருக்கீங்களான்னு கிராஸ் செக் பண்ணிட்டு நியூஸ் போட்டிருந்தால் அந்தச் செய்தியைப் படிச்சவங்களுக்கும் ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கும்.

எதிர்காலத் திட்டம்?

நான் கடவுளை நம்புறவள். இதுவரை எதுவும் நான் பிளான் பண்ணிப் பண்ணினதில்லை. எனக்கு பேராசிரியராகணும்னுதான் ஆசை. பிஹெச்.டி படிக்கணும்னு நினைச்சேன். இப்போ படிக்க நேரமில்லைங்குறதுனால அந்த பிளான் வெயிட்டிங்ல இருக்கு.

வெ.வித்யா காயத்ரி

எளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்! 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.