நேரம் மாறிய தொடர்கள்!

விஜய் டி.வி.யில் ஜூலை 15-ம் தேதி முதல் இரண்டு புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

தாயில்லாத 5 பெண்களை வளர்க்கும் ஒரு தந்தையின் கதையைச் சொல்லும் தொடர் 'தாயுமானவன்.' மதியழகன், மகேஸ்வரி, கல்யாணி, ஜெனிஃபர், மதுமில்லா, சுஜித்ரா, அன்வர், கமல், குயிலி, ராஜசேகர் ஆகியோர் இந்த தொடரில் நடிக்கிறார்கள்.

இரண்டு இளம்பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தொடர் 'தெய்வம் தந்த வீடு.' இளமை ததும்பும் வகையில் சுவாரசியமாக இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி நிறைவு பெற்றதாலும், இரண்டு புதிய தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாலும் தொடர்களின் நேரத்தை ஜூலை 15-ம் தேதி முதல் மாற்றி அமைத்துள்ளது விஜய் டி.வி.

அதன்படி, மாலை 6 மணிக்கு 'உறவுகள் ஒரு தொடர்கதை', 6.30 மணிக்கு 'என் கணவன் என் தோழன்', 7 மணிக்கு '7C', 7.30 மணிக்கு 'தாயுமானவன்' ஆகிய தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.

8 மணிக்கு 'தெய்வம் தந்த வீடு', 8.30 மணிக்கு 'சரவணன் மீனாட்சி' தொடர்களும், 9 மணிக்கு 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகின்றன.

இரவு 10 மணிக்கு 'ஆபீஸ்' தொடரும், 10.30 மணிக்கு 'டைம்பாஸ்' நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வருகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!