காமெடியில் கலக்குவது எப்படி? | கோவை சரளா, விஜய் டி.வி

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (17/07/2013)

கடைசி தொடர்பு:11:35 (17/07/2013)

காமெடியில் கலக்குவது எப்படி?

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி 'காமெடியில் கலக்குவது எப்படி?'.

3 அணிகளாக கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்கள், தங்களுடைய நகைச்சுவைத் திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சி இது.

'ஏ' அணியில் அமுதவாணன், பழனி, சபர்ணா, சிங்கப்பூர் தீபன், உடுமலை ரவி ஆகியோரும், 'பி' அணியில் அர்ச்சனா, ஜெய்சந்திரன், ராமர், திவாகர், ஜியார்ஜ் ஆகியோரும், 'சி' அணியில் தனசேகர், பிரபு, நாகராஜ், மதுமிதா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

நகைச்சுவை நடிகர்கள் கோவை சரளா மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள்.

'ரோபோ' சங்கர், 'பிக்' எஃப்.எம்.மின் ரேடியோ ஜாக்கி ஒஃபிலியா ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர்.

ஞாயிறு தோறும் மதியம் 12.30 மணிக்கு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கலாம்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close