பிரபலங்களின் பேட்டிகள்!

பிரபலங்களின் சாதனைகள் மற்றும் தற்கால நிகழ்வுகளைச் சொல்லும் நிகழ்ச்சி 'ஃபேம் புக்.'

நடிகர் - நடிகைகள், இசை, விளையாட்டு, தொழில் முனைவோர் என ஒவ்வொரு துறையிலும் வரலாறு படைத்த சாதனையாளர்களை நேரடியாகப் பேட்டி காணும் நிகழ்ச்சி இது.

பிரபலங்கள் செய்த சாதனை என்ன, அதற்காக அவர்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டனர், சாதனை படைக்க உதவி புரிந்தவர்கள் யார் போன்ற தகவல்களை, பிரபலங்கள் அவர்களாகவே பகிர்ந்து கொள்கின்றனர்.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை யு.எஃப்.எக்ஸ். சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதன் மறு ஒளிபரப்பு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கும், சனிக்கிழமை மாலை 4 மணிக்கும் காணலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!